Vijay: 'சாரி என்ன மன்னிச்சிடுங்க..' சித்திக் குடும்பத்தாரிடம் மன்னிப்பு கேட்ட விஜய்!
தமிழ் செய்திகள்  /  பொழுதுபோக்கு  /  Vijay: 'சாரி என்ன மன்னிச்சிடுங்க..' சித்திக் குடும்பத்தாரிடம் மன்னிப்பு கேட்ட விஜய்!

Vijay: 'சாரி என்ன மன்னிச்சிடுங்க..' சித்திக் குடும்பத்தாரிடம் மன்னிப்பு கேட்ட விஜய்!

Aarthi V HT Tamil
Aug 17, 2023 04:56 PM IST

நடிகர் விஜய் இன்று மறைந்த இயக்குநர் சித்திக்கின் குடும்பத்தாரிடம் தொலைபேசியில் ஆறுதல் கூறி உள்ளார்.

விஜய்
விஜய்

அவர் கடந்த மாரடைப்பு காரணமாக கொச்சியில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்தார். இதையடுத்து அவருக்கு ஐசியூவில் வைத்து சிகிச்சை அளிக்கப்பட்டு வந்தது. இதைத்தொடர்ந்து சிகிச்சை பலனின்றி ஆகஸ்ட் 8 ஆம் தேதி உயிரிழந்தார்.

கடந்த மாதம் 10ஆம் தேதி நிமோனியா, மற்ற சுவாச கோளாறு காரணமாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். மறைந்த இயக்குநர் சித்திக்குக்கு மனைவியும், இரண்டு மகள்கள், ஒரு மகன் உள்ளார்கள்.

சித்திக் மரைவுக்கு திரையுலகினர் நேரிலும், சமூக வலைதளங்கள் மூலமாகவும் இரங்கல் தெரிவித்தனர். ஆனால் விஜய் மட்டும் இரங்கல் தெரிவித்ததாக ஒரு செய்தி கூட வெளியாகவில்லை. ஏன் அவர் இப்படி செய்தார் என பலரும் கேள்வி கேட்டனர்.

இந்நிலையில் தளபதி விஜய் இன்று ( ஆகஸ்ட் 17) மறைந்த இயக்குநர் சித்திக்கின் குடும்பத்தாரிடம் தொலைபேசியில் ஆறுதல் கூறி உள்ளார்.

வெளியூரில் இருந்ததால் இறுதிச் சடங்கில் கலந்து கொள்ள முடியவில்லை என சொல்லி மன்னிப்பு கேட்டார். அத்துடன் சித்திக்கின் குடும்பத்தினர் அனைவருக்கும் அவர் தனது இரங்கலைத் தெரிவித்தார்.

ப்ரெண்ட்ஸ் படத்தில் இடம்பிடித்து ரசிகர்களால் பெரிதும் கொண்டாடப்பட்ட நேசமணி கேரக்டருக்கு உருவாக்கியது இயக்குநர் சித்திக் தான். இதேபோல் இவரது மற்ற தமிழ் படங்களான எங்கள் அண்ணா, காவலன் படங்களிலும் காமெடி காட்சிகள் ரசிகர்களை வெகுவாக கவர்ந்துள்ளன.

தமிழ்நாடு, தேசம் மற்றும் உலகம், பொழுதுபோக்கு, விளையாட்டு, லைஃப்ஸ்டைல், ஜோதிடம், புகைப்பட கேலரி, வேலைவாய்ப்பு, சமீபத்திய செய்திகள் என அனைத்தையும் இந்துஸ்தான் டைம்ஸ் தமிழ் இணையதளத்தில் உடனுக்குடன் தெரிந்து கொள்ளலாம்.

சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடலாம். லிங்க்குகள் கீழே கொடுக்கப்பட்டுள்ளன:

Google News: https://bit.ly/3onGqm9 

Whats_app_banner

டாபிக்ஸ்

தமிழ்த் திரைப்பட செய்திகள், டிவி தொடர்கள், OTT செய்திகள், திரைப்பட விமர்சனங்கள், பாலிவுட், ஹாலிவுட் படங்கள் தொடர்பான சமீபத்திய அப்டேட்களை, பொழுதுபோக்கு பிரிவில் பார்க்கலாம்.