தமிழ் செய்திகள்  /  பொழுதுபோக்கு  /  Vidaamuyarchi: ‘ஜெயிலரா.. லியோவா.. நீ வா தல..’ விடாமுயற்சி அப்டேட் சொன்ன திரெளபதி இயக்குனர்!

VidaaMuyarchi: ‘ஜெயிலரா.. லியோவா.. நீ வா தல..’ விடாமுயற்சி அப்டேட் சொன்ன திரெளபதி இயக்குனர்!

Stalin Navaneethakrishnan HT Tamil
Aug 11, 2023 10:31 AM IST

Mohang: விடாமுயற்சி படப்பிடிப்பு அடுத்த மாதம் தொடங்கப் போவதாக அவர் அறிவித்துள்ளார். அஜித்தின் மைத்துனர் ரிச்சர்ட் ரிசிவை வைத்து திரெளபதி படத்தை இயக்கிய அவர், அதன் பின் அஜித் குடும்பத்துடன் நெருக்கமானார்.

திரெளபதி இயக்குனர் மோகன் ஜி
திரெளபதி இயக்குனர் மோகன் ஜி (Mohan G Kshatriyan Twitter)

ட்ரெண்டிங் செய்திகள்

காரணம், அஜித்தின் விடாமுயற்சி திரைப்படம் குறித்த அப்டேட் எதுவும் இதுவரை வரவில்லை. படத்தின் இயக்குனர் மகிழ்திருமேனி என்று அறிவிக்கப்பட்டதுடன் அப்படியே இருக்கிறது. லைகா போன்ற பெரிய நிறுவனத்தின் படம், இத்தனை நாட்கள் அப்டேட் இல்லாமல் நின்றதில்லை.

இது ஒருபுறமிருக்க ரஜினி-விஜய் ரசிகர்கள் சண்டையை அமைதியாக வேடிக்கைப் பார்த்த திரெளபதி, ருத்ரதாண்டவம் படங்களின் இயக்குனர மோகன்ஜி, தீவிர அஜித் ரசிகனாக ஒரு அப்டேட் ஒன்றை வெளியிட்டுள்ளார்.

அதன் படி, விடாமுயற்சி படப்பிடிப்பு அடுத்த மாதம் தொடங்கப் போவதாக அவர் அறிவித்துள்ளார். அஜித்தின் மைத்துனர் ரிச்சர்ட் ரிசிவை வைத்து திரெளபதி படத்தை இயக்கிய அவர், அதன் பின் அஜித் குடும்பத்துடன் நெருக்கமானார். குறிப்பாக ஷாலினி மற்றும் அஜித் குழந்தைகளுடன் நன்கு அறிமுகமானார்.

மீண்டும் ரிச்சர்ட்டை வைத்து படம் இயக்கவிருக்கும் மோகன் ஜி, அவருடன் தன்னுடைய தொடர்பை தொடர்ந்து வருகிறார். இந்நிலையில் தான், விடாமுயற்சி தொடர்பான அப்டேட்டை மோகன் ஜி வெளியிட்டுள்ளார். இது ஷாலினி வழியாக வந்ததா, அல்லது ரிச்சர்ட் வழியாக வந்ததா தெரியவில்லை. ஆனால், அப்டேட் வந்த வரை மகிழ்ச்சி என்று அஜித் ரசிகர்கள் கொண்டாடத் தொடங்கியுள்ளனர்.

இதில் கூடுதல் தகவல் என்னவென்றால், தான் ஒரு அஜித் ரசிகன் என்பதை இந்த முறை அழுத்தமாக பதிவு செய்திருக்கிறார் மோகன் ஜி. ‘ஜெயிலராவது.. லியோவது.. நீ வா தல’ என்பது போல, ஃபேன் பாய் மொமண்ட்டில் பதிவிட்டுள்ளார் மோகன் ஜி.

‘உங்கள் நுழைவுக்காக காத்திருக்கிறேன் தல.. கேள்விப்பட்ட வரை அடுத்த மாதம் விடாமுயர்ச்சி படப்பிடிப்பு தொடங்குகிறது.. உங்களை திரையில் காண ஏராளமான ரசிகர்கள் காத்திருக்கின்றனர்’

என்று அந்த பதிவில் மோகன் ஜி பதிவிட்டுள்ளார்.

சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடலாம். லிங்க்குகள் கீழே கொடுக்கப்பட்டுள்ளன:

https://twitter.com/httamilnews

https://www.facebook.com/HTTamilNews

https://www.youtube.com/@httamil

தமிழ்நாடு, தேசம் மற்றும் உலகம், பொழுதுபோக்கு, விளையாட்டு, லைஃப்ஸ்டைல், ஜோதிடம், புகைப்பட கேலரி, வேலைவாய்ப்பு, சமீபத்திய செய்திகள் என அனைத்தையும் இந்துஸ்தான் டைம்ஸ் தமிழ் இணையதளத்தில் உடனுக்குடன் தெரிந்து கொள்ளலாம்.

IPL_Entry_Point

டாபிக்ஸ்