தமிழ் செய்திகள்  /  பொழுதுபோக்கு  /  Dhanush Ilayaraja: “ராஜாதி ராஜன் இந்த ராஜா” - இளையராஜா வாழ்க்கை கதையில் தனுஷ்! - பற்ற வைத்த பாலிவுட் இயக்குநர்!

Dhanush Ilayaraja: “ராஜாதி ராஜன் இந்த ராஜா” - இளையராஜா வாழ்க்கை கதையில் தனுஷ்! - பற்ற வைத்த பாலிவுட் இயக்குநர்!

Kalyani Pandiyan S HT Tamil
Aug 03, 2023 11:39 AM IST

பிரபல இசையமைப்பாளர் இளையாராஜாவின் வாழ்க்கை படத்தில் தனுஷ் நடிக்க இருப்பதாக செய்தி வெளியாகி இருக்கிறது.

இளையராஜாவின் வாழ்க்கை கதையில் தனுஷ்!
இளையராஜாவின் வாழ்க்கை கதையில் தனுஷ்!

ட்ரெண்டிங் செய்திகள்

தற்போது மீண்டும் முன்னணி இயக்குநர்களின் திரைப்படங்களுக்கு இசையமைத்து வருகிறார். இந்த நிலையில் இவரது வாழ்க்கைக்கதையை பிரபல பாலிவுட் இயக்குநரான ஆர்.பால்கி இயக்க இருப்பதாகவும், அதில் இளையராஜா கதாபாத்திரத்தில் தனுஷ் நடிக்க இருப்பதாகவும் தகவல் வெளியாகி இருக்கிறது. 

இது குறித்து இயக்குநர் பால்கி அளித்த பேட்டியில், “ இளையராஜாவின் வாழ்க்கை கதையை திரைப்படமாக எடுக்க வேண்டும் என்பது என்னுடைய கனவு. மூன்று தலைமுறைகள் தாண்டிய இளையராஜா 1000 திரைப்படங்களுக்கு மேல் இசையமைத்த ஜாம்பாவன்.  இந்தப்படத்தில் தனுஷை நடிக்க வைப்பதுதான் அவருக்கு நான் கொடுக்கும் சிறந்த பரிசாக இருக்கும். காரணம் என்னவென்றால் என்னைப்போலவே தனுஷூம் இளையராஜாவின் தீவிரமான ரசிகர்.” என்று பேசியிருக்கிறார்.

முன்னதாக தனுஷ், அமிதாப்பச்சன் ஆகியோர் நடிப்பில் வெளியான ஷமிதாப் படத்தை பால்கி இயக்கி இருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

தனுஷ் நடிப்பில் உருவாகியிருக்கும் கேப்டன் மில்லர் திரைப்படம் வருகிற டிசம்பர் 15ம் தேதி வெளியாக இருக்கிறது. தற்போது அவர் தன்னுடைய 50 ஆவது திரைப்படத்தில் கவனம் செலுத்தி வருகிறார். 

 

IPL_Entry_Point

டாபிக்ஸ்