Mansoor Ali Khan: ’சரக்கு படத்தால் சர்சையில் மன்சூர் அலிகான்!’ கோர்ட் போட்ட ஆர்டர்!
தமிழ் செய்திகள்  /  பொழுதுபோக்கு  /  Mansoor Ali Khan: ’சரக்கு படத்தால் சர்சையில் மன்சூர் அலிகான்!’ கோர்ட் போட்ட ஆர்டர்!

Mansoor Ali Khan: ’சரக்கு படத்தால் சர்சையில் மன்சூர் அலிகான்!’ கோர்ட் போட்ட ஆர்டர்!

Kathiravan V HT Tamil
Jan 04, 2024 09:35 PM IST

”இந்த படத்தில் வந்த பர்ஸ்ட் லுக் போஸ்டரில் மது பாட்டிலின் கழுத்து பகுதியில் வழக்கறிஞர்கள் அணியும் கழுத்துப்பட்டை இடம்பெற்றிருந்ததற்கு வழக்கறிஞர்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்திருந்தனர்”

மன்சூர் அலிகான்
மன்சூர் அலிகான்

பைட்டர், நடன கலைஞர், நடிகர் என பன்முகத் தன்மை கொண்ட மன்சூர் அலிகான் தமிழ் சினிமாவில் வில்லனாக நடித்து புகழ்பெற்றவர். 

சமீபத்தில் நடிகர் விஜய் நடிப்பில் வெளியான லியோ படத்தில் நடித்த அவரது கதாபாத்திரம் பேசப்பட்டது. மேலும் நடிகை த்ரிஷா குறித்து பேசிய அவரின் பேச்சு கடும் சர்ச்சையை ஏற்படுத்தியது. அவரது பேச்சுக்கு திரிஷா, குஷ்பு உள்ளிட்ட பலர் கண்டனம் தெரிவித்த நிலையில் நீதிமன்றத்தில் மன்னிப்பு கேட்டதன் மூலம் சர்ச்சை முடிவுக்கு வந்தது.

இந்த நிலையில், இயக்குனர் ஜெயக்குமார் இயக்கத்தில் நடிகர் மன்சூர் அலிகான் ’சரக்கு’ என்ற படத்தில் நடித்தார். இதில் நடிகை வலீனா, யோகி பாபு, பாக்யராஜ், கேஎஸ் ரவிக்குமார், ராஜேந்திரன், ரெடின் கிங்ஸ்லி உள்ளிட்டோர் நடித்து இருந்தனர். இந்த படமானது கடந்த டிசம்பர் மாதம் 29 ஆம் தேதி  திரையரங்குகளில் வெளியானது.

இந்த படத்தில் வந்த பர்ஸ்ட் லுக் போஸ்டரில் மது பாட்டிலின் கழுத்து பகுதியில் வழக்கறிஞர்கள் அணியும் கழுத்துப்பட்டை இடம்பெற்றிருந்ததற்கு வழக்கறிஞர்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்திருந்தனர். 

இந்த படத்திற்கு எதிராக சென்னை நகர் உரிமையியல் நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது.  இந்த வழக்கை விசாரித்த நீதிமன்றம்,  வழக்கறிஞர்கள் அணியும் கழுத்துப்பட்டையை நீக்க வேண்டும் என உத்தரவிட்டது. 

Whats_app_banner

டாபிக்ஸ்

தமிழ்த் திரைப்பட செய்திகள், டிவி தொடர்கள், OTT செய்திகள், திரைப்பட விமர்சனங்கள், பாலிவுட், ஹாலிவுட் படங்கள் தொடர்பான சமீபத்திய அப்டேட்களை, பொழுதுபோக்கு பிரிவில் பார்க்கலாம்.