தமிழ் செய்திகள்  /  பொழுதுபோக்கு  /  Neel Nanda: பிரபல காமெடியன் நீல் நந்தா காலமானார்!

Neel Nanda: பிரபல காமெடியன் நீல் நந்தா காலமானார்!

Kalyani Pandiyan S HT Tamil
Dec 25, 2023 12:10 PM IST

ஜிம்மி கிம்மல் லைவ் மற்றும் காமெடி சென்ட்ரலின் ஆடம் டிவைனின் ஹவுஸ் பார்ட்டி ஆகியவற்றில் நந்தா தனது நிகழ்ச்சிகளுக்காக அங்கீகாரத்தைப் பெற்றார்.

Neel Nanda
Neel Nanda (Instagram)

ட்ரெண்டிங் செய்திகள்

இது குறித்து அவர் பேசும் போது, “ இந்த கட்டத்தில் என்னால் உறுதிப்படுத்த முடியும், ஆம், துரதிர்ஷ்டவசமாக 11 ஆண்டுகளுக்கும் மேலான எனது நண்பர் இறந்துவிட்டார். 

நந்தா ஒரு சிறந்த நகைச்சுவையாளர், நண்பர் மற்றும் அற்புதமான மனிதர்” என்று கூறினார். 

நகைச்சுவை நடிகர் நீல் நந்தா மரணம் நீல்

நந்தாவின் மரணத்திற்கான காரணம் இன்னும் வெளியாகவில்லை. அவரது மறைவின் செய்தி கேட்டு, சக நடிகர்கள் அவரை நினைவு கூர்ந்து, இரங்கல் தெரிவித்து இருக்கிறார்கள். 

நீல் நந்தா சமீபத்தில் தனது 32 வது பிறந்தநாளைக் கொண்டாடினார்

இவர் ஜார்ஜியாவின் அட்லாண்டாவில் பிறந்தார். நந்தாவிற்கு நகைச்சுவை மீதான காதல், அவரது ஆரம்ப ஆண்டுகளிலேயே தொடங்கி விட்டது.

அவர் இறப்பதற்கு ஒன்பது நாட்களுக்கு முன்பு டொரண்டோவில் முதன்முறையாக காமெடி நிகழ்ச்சி ஒன்றை நடத்தினார். அந்த நிகழ்ச்சியில் வார இறுதியில் தன்னுடைய பிறந்தநாளை கொண்டாட உதவுமாறு பார்வையாளர்களை கேட்டுக்கொண்டார். 

அவரது இறப்பு குறித்து,  ஜோக்கர்ஸ் தியேட்டர் & காமெடி கிளப்பின் உரிமையாளர் டேவ் கர்ரன் “அவர் எங்கள் பார்வையாளர்களை புன்னகைக்கச் செய்தார்; மகிழ்ச்சிப்படுத்தினார். நான் அவரை ஆறு மாதங்களுக்கு முன்புதான் சந்தித்தேன், ஆனால் ஓரிரு நாட்களுக்குப் பிறகு நீங்கள் அவரை பல ஆண்டுகளாக அறிந்திருப்பதைப் போல உணர வைக்கும் திறன் அவரிடம் உள்ளது என்று கூறி  ந்தாவை வேலைக்கு அமர்த்தியதற்கான காரணத்தை வெளிப்படுத்தினார்.

முன்னதாக, ஜிம்மி கிம்மெல் லைவ் மற்றும் காமெடி சென்ட்ரலின் ஆடம் டிவைனின் ஹவுஸ் பார்ட்டி ஆகியவற்றில் தனது நடிப்புக்காக நீல் அங்கீகாரத்தைப் பெற்று இருந்தது குறிப்பிடத்தக்கது!

IPL_Entry_Point

டாபிக்ஸ்