தமிழ் செய்திகள்  /  பொழுதுபோக்கு  /  Web Series: நான் ஸ்டாப் வெப் சிரீஸ் கொண்டாட்டம்- எங்கு பார்ப்பது?

Web Series: நான் ஸ்டாப் வெப் சிரீஸ் கொண்டாட்டம்- எங்கு பார்ப்பது?

Aarthi V HT Tamil
Jan 25, 2023 01:02 PM IST

கலர்ஸ் தமிழ் இன்று ( ஜனவரி 25 ) முதல் நான்கு பிரபலமான வெப் சீரிஸ்களை வெளியிடுகிறது.

வெப் சிரீஸ்
வெப் சிரீஸ்

ட்ரெண்டிங் செய்திகள்

தமிழில் மொழி பெயர்க்கப்பட்ட VOOT ஒரிஜினல் தொடர்களான இவை காதல், வஞ்சகம் , பொய்கள், ஏமாற்றம், கொலை மர்மங்கள் மற்றும் காணாமல் போன வழக்குகள் ஆகியவற்றின் மைய பொருளை உணர்த்தும் வகையில் அமைந்து உள்ளது.

காதல் பாதி துரோகம்

இரவு 9 மணிக்கு பாதி காதல் பாதி துரோகம் (இந்தியில் ஆதா இஷ்க்) என்ற பிரபலமான தொடர் ஒளிபரப்பாகிறது . ஆம்னா ஷெரீப், பிரதிபா ரந்தா மற்றும் கௌரவ் அரோரா ஆகியோர் நடித்த 9-எபிசோட்கள் கொண்ட இந்த சீரிஸ், தாயும் அவரது மகளும் ஒரே நபரைக் காதலிக்கும்போது ஏற்படும் விளைவுகளை என்ன என்று ஆராயும் காதல் நாடகம் ஆகும்.

லண்டன் நிமிடங்கள்

அதை தொடர்ந்து இரவு 9. 45 மணிக்கு அர்ஜுன் ராம்பால் மற்றும் புரப் கோஹ்லி நடித்த லண்டன் நிமிடங்கள் (இந்தியில் லண்டன் ஃபைல்ஸ்) ஒளிபரப்பாகிறது. அரசியல் ரீதியாக பிளவுபட்ட லண்டன் மீதான குற்றச் செயல்களின் சரமாரியான சில கொடூர மர்மங்களை வெளிக்கொணரும் பணியில் ஈடுபட்டுள்ள ஒரு ஊடக முதலாளியின் மகள் காணாமல் போன ஒரு முக்கிய வழக்கை சுற்றி கதை நகர்கிறது.

பொய் விளையாட்டு

இரவு 10 மணிக்கு கண்டேல்வால் மற்றும் ஆஹானா குமார் நடித்த 6-எபிசோட் க்ரைம் த்ரில்லர் வெப் சீரிஸான பொய் விளையாட்டு (இந்தியில் மர்சி), ஒளிபரப்ப உள்ளது. தினமும் ஒரு மணி நேரம் ஒளிபரப்பப்படும் இந்த தொடர் பார்வையாளர்கள் யார் குற்றவாளி என்று யூகிக்க வைக்கும் வகையில் பொய்களும் துரோகங்களும் குறுக்கு வழியில் செல்லும் உண்மையை வெளிக்கொணர்கிறது.

தொட தொட ரகசியம்

இறுதியாக, தொட தொட ரகசியம் (ஹிந்தியில் கான் கேம் சீசன் 2) 2020 இல் லாக்டவுன் நாட்களில் வெளியான சூப்பர்ஹிட் தொடரின் தொடர்ச்சியாகும். இந்த ஆறு எபிசோட்கள் கொண்ட தொடர் கொலை வழக்கை விசாரிக்கும் சிபிஐ அதிகாரி சம்பந்தப்பட்ட கொலை மர்மமாகும்.

வயகாம் 18 இன் தமிழ் சேனலான உங்கள் கலர்ஸ் தமிழ் தொலைக்காட்சியில் தினமும் இரவு 9:00 மணி முதல் 12 மணி வரை வாரம் முழுவதும் நான்கு வெப் சீரிஸ் தொடர்களைக் கண்டு மகிழத் தயாராகுங்கள்.

IPL_Entry_Point

டாபிக்ஸ்