தமிழ் செய்திகள்  /  பொழுதுபோக்கு  /  Friendship Day Special Movies: கலர்ஸ் டிவியில் ஃபிரண்ட்ஷிப் டே கொண்டாட்டமாக இரண்டு படங்கள் ஒளிபரப்பு

Friendship Day Special Movies: கலர்ஸ் டிவியில் ஃபிரண்ட்ஷிப் டே கொண்டாட்டமாக இரண்டு படங்கள் ஒளிபரப்பு

Muthu Vinayagam Kosalairaman HT Tamil
Aug 04, 2023 10:50 AM IST

ஃப்ரெண்ட்ஷிப் தினத்தை முன்னிட்டு, வயாகாம் 18இன் கலர்ஸ் தமிழ் என்டர்டெயின்மென்ட் டிவியில் நட்பை போற்றும் விதமாக வரும் ஆகஸ்ட் 6ஆம் தேதி இரண்டு படங்கள் ஒளிபரப்பாகவுள்ளது.ச

நண்பர்கள் தினத்தை முன்னிட்டு கலர்ஸ் டிவியில் இரண்டு படங்கள் ஒளிபரப்பு
நண்பர்கள் தினத்தை முன்னிட்டு கலர்ஸ் டிவியில் இரண்டு படங்கள் ஒளிபரப்பு

ட்ரெண்டிங் செய்திகள்

அதன்படி இந்திய முன்னாள் கிரிக்கெட்டர் ஹர்பஜன் சிங், பிக் பாஸ் புகழ் லாஸ்லியா மரியனேசன் நடித்த 'ஃப்ரெண்ட்ஷிப்' என்ற படம்  ஒளிபரப்பாகிறது. இந்த படம் வரும் ஞாயிற்றுக்கிழமை மாலை 5 மணிக்கு ஒளிபரப்பு செய்யப்படவுள்ளது.

இந்த படத்தின் மூலம் ஹர்பஜன் சிங், இலங்கை டிவி தொகுப்பாளர் லாஸ்லியா ஆகியோர் அறிமுகமானார்கள். படத்தை ஜான் பால்ராஜ் மற்றும் சாம் சூர்யா ஆகியோர் திரைக்கதை எழுதி இயக்கியுள்ளனர். படத்தில் அர்ஜுன், சதீஷ் முக்கிய வேடங்களில் நடித்துள்ளனர்.

கல்லூரியில் ஏற்படும் ஃப்ரண்ட்ஷிப் என்பது ஒவ்வொரு வாழ்க்கையிலும் நிகழும் உணர்ச்சிப்பூர்வமான விஷயமாகும். மெக்கானிக்கல் எஞ்ஜினியரிங் மாணவர்கள் தங்களது வகுப்பில் உள்ள ஒரே பெண்ணான அனிதாவுடன் (லாஸ்லியா மரியனேசன்) நட்பு கொள்கிறார்கள். கல்லூரி வாழ்க்கையின் மகிழ்ச்சியாக சென்று கொண்டிருக்கையில், பாலியல் துன்புறுத்தல் செய்யப்பட்டு அனிதா கொல்லப்படுகிறார். இதன் பின்னர் அனிதாவின் இரண்டு நண்பர்களான பகத் சிங் (ஹர்பஜன் சிங்), ஜீவா (சதீஷ்) ஆகியோர் தோழியின் இறப்புக்கு நீதி கிடைக்க முயற்சிக்கிறார்கள். இதுதான் ஃபிரண்ட்ஷிப் படத்தின் கதை.

அதேபோல், அறிமுக இயக்குநர் சிவா அரவிந்த் இயக்கத்தில் கவின், ரம்யா நம்பீசன் மற்றும் பலர் நடித்துள்ள 'நட்புன்னா என்னான்னு தெரியுமா' படமும் ஒளிபரப்பாகவுள்ளது. இந்த படம் ஃபிரண்ட்ஷிப் படம் முடிந்த பிறகு இரவு 7.30 மணிக்கு ஒளிபரப்பாகிறது.

இந்தப் படத்தை லிப்ரா புரொடக்‌ஷன் சார்பில் ரவீந்தர் சந்திரசேகர் தயாரித்துள்ளார். சிவா (கவின்), ராஜு (ராஜு ஜெயமோகன்), மற்றும் மணிகண்டன் (அருண்ராஜா காமராஜ்) அனைவரும் ஒரே நாளில் பிறந்தவர்கள். ஒரே ஊரில் வாழ்பவர்கள். பால்ய காலத்தில் இருந்தே நண்பர்களாக படிப்பை பெரிதாக எடுத்து கொள்ளாமல், இலக்கு இல்லாமல் சுற்றி திரிகிறார்கள்.

பல வருடங்களை வீணடித்த பிறகு, சொந்தமாக தொழில் தொடங்க முடிவு செய்கிறார்கள். இவர்கள் திருமண திட்டமிடல் ஆலோசகர்களாக (Wedding Planners) மாறுகிறார்கள். அப்போது அவர்கள் வாழ்க்கையில் ஸ்ருதி (ரம்யா நம்பீசன்) வருகிறார். மூன்று நண்பர்களும் அவளை காதலிக்கிறார்கள். அங்கிருந்து, அவர்களின் சமன்பாடு மாறுகிறது, காதலால் ட்பு முறிய தொடங்குகிறது. ஸ்ருதி யாரை காதலிக்கிறாள்?, அவர்களின் நட்பு இயல்பு நிலைக்கு திரும்பியதா? போன்ற விடைகளுக்கு பதிலாக இந்தப் படம் உள்ளது.

கலர்ஸ் தமிழ் தொலைக்காட்சி தற்போது அனைத்து முன்னணி கேபிள் நெட்வொர்க்குகள் மற்றும் டிடிஎச்-சில் கிடைக்கிறது. சன் டைரக்ட் (சேனல் எண் 128), டாடா ஸ்கை (சேனல் எண் 1515), ஏர்டெல் (சேனல் எண் 763), டிஷ் டீவி (சேனல் எண் 1808), விடியோகான் டி2எச் (சேனல் எண் 553) மற்றும் ஜியோ சினிமா செயலியிலும் காணலாம்.

சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடரலாம். லிங்க்குகள் கீழே கொடுக்கப்பட்டுள்ளன:

Google News: https://bit.ly/3onGqm9 

 

IPL_Entry_Point

டாபிக்ஸ்