தமிழ் செய்திகள்  /  பொழுதுபோக்கு  /  Biggboss 7 Tamil: ரவீனா வெளியேற்றம்.. பிக்பாஸ் வீட்டில் நடந்த திடீர் திருப்பம்!

BiggBoss 7 Tamil: ரவீனா வெளியேற்றம்.. பிக்பாஸ் வீட்டில் நடந்த திடீர் திருப்பம்!

Stalin Navaneethakrishnan HT Tamil
Dec 29, 2023 07:48 PM IST

Biggboss7Tamil: ‘இந்த நிலையில் தான், எதிர்பாராத நேரத்தில் எதிர்பார்த்த வகையில் ரவீனா வெளியேற்றப்பட்டுள்ளார்’

BiggBoss 7 Tamil: பிக்பாஸ் வீட்டில் இருந்து வெளியேற்றப்பட்ட ரவீனா தாஹா
BiggBoss 7 Tamil: பிக்பாஸ் வீட்டில் இருந்து வெளியேற்றப்பட்ட ரவீனா தாஹா

ட்ரெண்டிங் செய்திகள்

அந்த வகையில் அது யாராக இருக்கும் என்கிற எதிர்பார்ப்பும், இவர் என்கிற ஊகமும் பரவலாக இருந்து கொண்டிருக்கிறது. இந்நிலையில், இன்று வார இறுதி எவிக்சன் இருபு்பதாக கூறப்படுகிறது. அதன் அடிப்படையில், வாக்குகள் அடிப்படையில் ஒரு போட்டியாளர் வெளியேற்றப்பட்டார். 

பலரின் வெளியேற்ற விருப்பத்தில் இருந்த ரவீனா தான், இன்று வெளியேற்றப்பட்டார் என்பது தெரியவந்துள்ளது. சமீபத்தில் ரவீனாவின் இரட்டை நிலைப்பாடுகளும், சுயநல மேலாண்மையும் அவருக்கு எதிரான போக்கை ஏற்படுத்தியது. கடந்த இரு வாரங்களாகவே அவர் எலிமினேஷன் செய்யப்படலாம் என்று எதிர்பார்க்கப்பட்டது.

ஆனால், அவரை விட பலவீனமான நிறைய போட்டியாளர்கள் களத்தில் இருந்ததால், அவர்கள் வெளியேற்றம் தவிர்க்க முடியாததாக இருந்தது. இன்னும் கூட, போட்டியே விளையாடாமல், வெளியேற்றப்பட வேண்டிய கட்டாயத்தில் சில போட்டியாளர்கள் இருக்கிறார்கள். ஆனால், அவர்களின் வெளியேற்றம் ஓட்டுகள் அடிப்படையால் தாமதமாகிறது. 

ரவீனாவின் வெளியேற்றம், மணி, விஷ்ணு, தினேஷிற்கு அதிர்ச்சியாக இருந்தாலும், மாயா, பூர்ணிமா, விசித்ரா, நிக்சனுக்கு பயங்கர மகிழ்ச்சியை தந்துள்ளது. ரவீனாவும் வெளியேற்றப்பட வேண்டியவர் தான். ஆனாலும், இந்த வாரத்தில் அவருடைய செயல்பாடுகள் சொல்லும் படியாக இருந்தது. 

இருப்பினும் ரவீனாவின் மீதான விமர்சனத்திற்கு இரு காரணங்கள் இருக்கிறது. உடன் இருப்பவர்களை காலை வாறுவதை ஒன்றுக்கு இரண்டு முறை செய்திருக்கிறார். ஒரு முறை தினேஷை அவுட் ஆக்கியது, இந்த வாரம் விஷ்ணுவை அவுட் ஆக்கியது என இரு உதாரணங்களை அதற்கு சொல்லலாம். 

அதே போல அதற்கு முந்தைய வாரங்களில், ‘தென்னை மரத்தில் ஒரு குத்து, பனை மரத்தில் ஒரு குத்து’ என்பதைப் போல, இந்த கும்பலில் ஒரு பேச்சு, அந்த கும்பலில் ஒரு பேச்சு’ என அவருடைய இரட்டை நிலைப்பாடு பயங்கரமாக வெளிப்பட்டது. அதிலிருந்தே ரவீனா மீது பலருக்கு வெறுப்பு தொற்ற ஆரம்பித்தது. 

இந்த நிலையில் தான், எதிர்பாராத நேரத்தில் எதிர்பார்த்த வகையில் ரவீனா வெளியேற்றப்பட்டுள்ளார். வார இறுதியில், டிக்கெட் டூ ஃபைனல் செல்பவர், எலிமினேஷன் முடிவில் முக்கிய காரணியாக இருப்பார் என்பதால், அடுத்து வெளியேறப் போவது யார் என்கிற எதிர்பார்ப்பு உள்ளது. தற்போதைய சமூக வலைதள எதிர்பார்ப்பின் படி நிக்சன் மற்றும் விசித்ரா பெயர், அதில் அதிகம் அடிபடுகிறது. 

IPL_Entry_Point

டாபிக்ஸ்