BiggBoss 7 Tamil: ‘ரூ.16 லட்சம் பணப்பெட்டியோடு பறந்தார் பூர்ணிமா’ தவிக்கும் மாயா!
Poornima Left BiggBoss House: பிக்பாஸ் சீசன் 7 நிகழ்ச்சியில், பணப்பெட்டியை கைப்பற்றிய போட்டியாளராக பூர்ணிமா மாறினார்.

பிக்பாஸ் 7 தமிழ் நிகழ்ச்சியின் முக்கிய நிகழ்வான பணப்பெட்டியை கைப்பற்றுவது யார் என்பதற்கு விடை கிடைத்துள்ளது. கடந்த இரு நாட்களாக பணப்பெட்டியை கைப்பற்றப் போவது யார்? என்கிற ரோலர் கோஸ்டரில், எதிர்பார்த்தபடி பூர்ணிமா, அதை கைப்பற்றியுள்ளார்.
பிக்பாஸ் 7 தமிழ் நிகழ்ச்சியின் நிறைவு நாள் நெருங்கிக் கொண்டிருக்கும் நிலையில், இறுதி மற்றும் சுவாரஸ்யமான பணப்பெட்டி டாஸ்க், நேற்று முன்தினம் தொடங்கியது. 1 லட்சம் ரூபாயில் தொடங்கிய தொகை, அடுத்தடுத்து 2 லட்சங்களாக அதிகரித்துக் கொண்டே சென்றது. ரூ.10 லட்சம் வந்ததும், யாராவது எடுப்பார்கள் என்று எதிர்பார்த்த நிலையில், தொகை ரூ.12 லட்சத்தை தாண்டியும், யாரும் அதை தொடவில்லை.
இதுவரை பிக்பாஸ் சீசனில், பணப்பெட்டியை கைப்பற்றாத நபர்களே இல்லை என்று சொல்லலாம். ஆனால், இந்த முறை பணப்பெட்டி யார் கைக்கும் செல்லாமல் போகலாம் என்கிற நிலை ஏற்பட்டது. ஆனாலும், சிலர் மனதில் தொகை உயரட்டும் என்கிற எதிர்பார்ப்பு இருந்தது.
அந்த வகையில், பூர்ணிமா-மாயா இடையே பணப்பெட்டி மீதான கவனம் இருந்து கொண்டே இருந்தது. தொகை உயர்ந்தும், யாரும் அதை கண்டுகொள்ளாததால் கடுப்பான பிக்பாஸ், ‘தொகை குறையவும் செய்யும்’ என்று அறித்து, தொகையை குறைக்கவும் செய்தார். ஆனாலும் யாரும் அசைந்தபாடில்லை.
இந்நிலையில் தொகை மீண்டும் 12 லட்சம் ரூபாயாக உயர்ந்தது. அடுத்து, தொகை உயர உயர, ஒரு கட்டத்தில் ரூ.16 லட்சமாக வந்து நின்றது. அதை எதிர்பார்த்து காத்திருந்தது போல, அந்த பணப்பெட்டியை கையில் எடுத்த பூர்ணிமா, தொகையோடு போட்டியில் இருந்து வெளியேறுவதாக அறிவித்தார்.
உண்மையில் அந்த தொகையை எடுக்க மாயாவிற்கும் உள்ளார ஒரு ஆசை இருந்தது. ஆனால், அதில் பூர்ணிமா முந்திக் கொண்டார். அந்த அடிப்படையில் பிக்பாஸ் சீசன் 7 நிகழ்ச்சியில், பணப்பெட்டியை கைப்பற்றிய போட்டியாளராக பூர்ணிமா மாறினார்.
பூர்ணிமாவின் இந்த முடிவு, அவரது நெருங்கிய தோழியான மாயாவுக்கு பெரிய ஏமாற்றத்தை அளித்துள்ளது. தனிமையில் அவர் வாடிக் கொண்டிருக்கிறார்.
