தமிழ் செய்திகள்  /  பொழுதுபோக்கு  /  Bigg Boss: 'விக்ரம்.. விக்ரம்.. விக்ரம்.. என்னடா இது டைட்டில் வின்னருக்கு வந்த சோதனை..' வீடே சேர்ந்து எலிமினேட்!

Bigg Boss: 'விக்ரம்.. விக்ரம்.. விக்ரம்.. என்னடா இது டைட்டில் வின்னருக்கு வந்த சோதனை..' வீடே சேர்ந்து எலிமினேட்!

Aarthi V HT Tamil
Nov 13, 2023 01:11 PM IST

பிக் பாஸ் நிகழ்ச்சியின் இன்றைய ( நவ. 13 ) எபிசோட்டிற்கான ப்ரோமோ வீடியோ வெளியாகி உள்ளது.

விக்ரம்
விக்ரம்

ட்ரெண்டிங் செய்திகள்

நேற்று ( நவ. 12 ) வார இறுதி என்பதால் பிக் பாஸ் தமிழ் 7 இல் ஐஷூ வெளியேற்றப்பட்டு இருக்கிறார். ஏனெனில் அவர் பார்வையாளர்களிடமிருந்து குறைந்த எண்ணிக்கையிலான வாக்குகளைப் பெற்றார்.

கடந்த வாரம் மாயா வீட்டின் கேப்டனாக இருந்தார். இரண்டு வீட்டிற்கும் அவர், கேப்டனாக நடந்து கொள்ளாமல் ஒரு சார்பாக நடந்து கொண்டார் என சொல்லப்படுகிறது. மேலும் அடிப்படை வசதி பொருட்கள் கூட ஸ்மால் பாஸ் வீட்டாருக்கு வழங்கவில்லை. இதனால் கடந்த வாரம் முழுக்க பிக் பாஸ் வீடு,  இரத்த பூமியாக இருந்தது.

இதனால் ஸ்மால் பாஸ் வீட்டில் இருந்தவர்களான தினேஷ், விசித்ரா, மணி, ரவினா, அர்ச்சனா, கூல் சுரேஷ் ஆகியோர் எப்படியும் கேப்டன் டாஸ்கில் வெற்றி பெற வேண்டும் என காத்திருந்தனர். 

அதே போல் நேற்று ( நவ. 12 ) நடந்த கேப்டன் டாஸ்கில் ஸ்மால் பாஸ் வீட்டை சேர்ந்த தினேஷ் வெற்றிப் பெற்று, இந்த வார தலைவராக தேர்வு செய்யப்பட்டார். 

இந்நிலையில் பிக் பாஸ் நிகழ்ச்சியின் இன்றைய ( நவ. 13 ) எபிசோட்டிற்கான ப்ரோமோ வீடியோ வெளியாகி உள்ளது. அதில் இன்று ( நவ. 13 ) வார முதல் நாள் என்பதால் வழக்கம் போல், இந்த வார நாமினேஷன் டாஸ்கிற்கான படலம் நடந்து உள்ளது. 

அதில், விஷ்ணு, விசித்ரா, ஜோவிகா, ரவினா, கூல் சுரேஷ் ஆகியோர் விக்ரமை நாமினேட் செய்தார்கள். அவருக்கு, வீட்டில் வீக்கான போட்டியாளர், போர் போட்டியாளர் என காரணம் சொல்லப்பட்டது.

மணி, கானா பாலா, விக்ரம் ஆகியோர் பிரவோ பெயரை நாமினேட் செய்தார்கள். தொடர்ந்து மணி, கூல் சுரேஷ், விஷ்ணு ஆகியோர் அக்‌ஷயா பெயரை நாமினேட் செய்தனர். வீட்டில் எதுமே செய்வது இல்லை என சொல்லி அவரை நாமினேட் செய்தார்கள்.

நிக்சன், அக்‌ஷயா இருவரும் விசித்ராவை நாமினேட் செய்ய மணியை , மாயா, பூர்ணிமா , நிக்சன் நாமினேட் செய்தார்கள்.

பூர்ணிமாவை கூல் சுரேஷ் , அர்ச்சனா , கானா பாலா ஆகியோர் நாமினேட் செய்து இருக்கிறார்கள். இந்த பட்டியலை வைத்து பார்த்தால் விக்ரம், மணி, பூர்ணிமா, அக்‌ஷயா, பிரவோ ஆகியோர் இந்த வார நாமினேஷனில் சிக்கி இருக்கலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.

தமிழ்நாடு, தேசம் மற்றும் உலகம், பொழுதுபோக்கு, விளையாட்டு, லைஃப்ஸ்டைல், ஜோதிடம், புகைப்பட கேலரி, வேலைவாய்ப்பு, சமீபத்திய செய்திகள் என அனைத்தையும் இந்துஸ்தான் டைம்ஸ் தமிழ் இணையதளத்தில் உடனுக்குடன் தெரிந்து கொள்ளலாம்.

சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடலாம். லிங்க்குகள் கீழே கொடுக்கப்பட்டுள்ளன:

Google News: https://bit.ly/3onGqm9 

ஹிந்துஸ்தான் தமிழ் வாட்ஸ் அப் குடும்பத்தில் இணைய கீழே உள்ள லிங்கை கிளிக் செய்யுங்கள்.

IPL_Entry_Point

டாபிக்ஸ்