தமிழ் செய்திகள்  /  பொழுதுபோக்கு  /  Bigg Boss Tamil 7: ‘அவ கெடக்குறான் வெண்ணெய்’.. ஆடை பற்றி எழுந்த கமெண்ட்.. வெளுத்து விட்ட மாயா கிருஷ்ணன்!

Bigg Boss Tamil 7: ‘அவ கெடக்குறான் வெண்ணெய்’.. ஆடை பற்றி எழுந்த கமெண்ட்.. வெளுத்து விட்ட மாயா கிருஷ்ணன்!

Kalyani Pandiyan S HT Tamil
Oct 03, 2023 12:26 PM IST

ஆடை பற்றி கமெண்ட் வந்த நிலையில், மாயா கிருஷ்ணன் அதற்கு அளித்த பதில் கவனம் பெற்று இருக்கிறது.

மாய கிருஷ்ணன் கோபம்!
மாய கிருஷ்ணன் கோபம்!

ட்ரெண்டிங் செய்திகள்

இந்த நிலையில் நேற்றைய தினம், பிக்பாஸ் தாங்கள் நாமினேட் செய்ய விரும்பும் போட்டியாளர்களை, ஏன் நாமினேட் செய்ய விரும்புகிறீர்கள் என்று காரணத்தோடு சொல்லும் படி உத்தரவிட்டார். அப்போது கன்வன்ஷன் ரூமிற்கு வந்த விசித்ரா அனன்யாவை நாமினேட் செய்ய விரும்புவதாக கூறினார். ஏன் என்று கேட்ட போது, இங்கு பெரியவர்கள், சிறியவர்கள் என அனைவரும் இருக்கிறார்கள். இப்படி இருக்கக்கூடிய இடத்தில் கொஞ்சம் ஆடைகளை பார்த்து அணியலாம். ஆனால், அவர் அப்படி இல்லை என்றார்.

இந்த நிலையில் பிக்பாஸ் இதனை சகபோட்டியாளர்களிடம் பெயரைக்குறிப்பிடாமல், இப்படியான குற்றசாட்டு வந்துள்ளது என்று சொன்னார். இந்த நிலையில் இந்த விஷயம் பற்றி மாயா கிருஷ்ணன் ஜோவிகா, அக்‌ஷயா, ரவீணா ஆகியோர் பேசிக்கொண்டிருந்தனர். அப்போது பேசிய மாய கிருஷ்ணன், நான் கூட நேற்று அப்படித்தான் உட்கார்ந்து இருந்தேன். முதலில் அப்படி சொல்லவே கூடாது. அப்படி சொல்கிறார் என்றாலே அவர்தான் தவறான எண்ணம் கொண்டிருக்கிறார் என்று அர்த்தம் . உன்னுடைய பெட்டியில் என்ன ஆடை இருக்கிறதோ, அதைத்தான் அணிய வேண்டும். அவன் கெடக்குறான் வெண்ணெய் என்றார். இந்த வீடியோ தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது.

IPL_Entry_Point

டாபிக்ஸ்