‘அம்மாடியோவ் என்னா காரம்; ஷீ இஸ் குக்கிங் லைக் திஸ்’ வெளியே வந்த நித்யானந்தா.. தர்ஷாவை சட்னியாக்கிய முத்துக்குமரன்
தர்ஷாகுப்தா காரம் அதிகமாக செய்த சமையலை சாப்பிட்ட போட்டியாளர்கள், நாக்கு சிவந்து, வயிறு காந்தல் எடுத்து பாடாய் பட்டு விட்டனர். இதனையடுத்து அதனை முத்துக்குமரன் கலாய்த்து தள்ளினார்.

பிக்பாஸ் நிகழ்ச்சியில், கடந்த வாரம் போட்டியாளர்கள் மக்களை சரியாக என்டர்டெயின் செய்யவில்லை என்று புதிதாக தொகுப்பாளராக களமிறங்கி இருக்கு விஜய்சேதுபதி வறுத்தெடுத்த நிலையில், இந்த வாரம் உஷாரான போட்டியாளர்கள், ஆரம்பம் முதலே ஸ்கோர் செய்யும் வகையில் விளையாட ஆரம்பித்தனர். சிலர் தனியாகவும், பலர் அணியாகவும் தங்களை ஸ்கோர் செய்து கொண்டிருக்கின்றனர்.
முன்னதாக, டாஸ்க்கில் ஜெயித்த ஆண்கள் அணி கோடு போட்டு தண்ணீர் எடுக்க வேண்டும் என்றால் கூட, எங்களிடம் கேட்டுதான் எங்கள் வீட்டிற்குள் வரவேண்டும் என்று கண்ஷன்களை போட்டு தாளிக்க, அதை மீறி உள்ளே வந்த செளந்தர்யாவிற்கும், தர்ஷிதாவிற்கும் சுவற்றைப்பார்த்து பேசாமல் உட்காரும் தண்டை வழங்கப்பட்டது. இதில், கடுப்பின் உச்சத்திற்கு சென்றது பெண்கள் அணி. இதையடுத்து அடுத்த டாஸ்க்கில் ஜெயித்த பெண்கள் அணி, தற்போது ஆண்களை வறுத்தெடுக்க ஆரம்பித்து இருக்கின்றனர். இந்த முறை தர்ஷாகுப்தா ஆண்கள் அணிக்கும், தீபக் பெண்கள் அணிக்கும் சென்று இருக்கின்றனர்.
