பிரித்து மேயும் பிக்பாஸ்; விருந்து வைக்கும் விஜய்சேதுபதி; விஜய் அள்ளிய வியூஸ் இவ்வளவா? - முழு விபரம் இங்கே!
பிக்பாஸ் நிகழ்ச்சியை இதுவரை எவ்வளவு பேர் கண்டுகளித்திருக்கிறார்கள். விஜய்சேதுபதியின் தொகுப்பு எவ்வளவு பேருக்கு பிடித்திருக்கிறது உள்ளிட்ட விபரங்களை இங்கே பார்க்கலாம்.

பிரித்து மேயும் பிக்பாஸ்; விருந்து வைக்கும் விஜய்சேதுபதி; விஜய் அள்ளிய வியூஸ் இவ்வளவா? - முழு விபரம் இங்கே!
‘Bigg Boss Tamil Season 8’ - நிகழ்ச்சி
‘Bigg Boss Tamil Season 8’ நிகழ்ச்சியானது Oct 6 ஆம் தேதி, 5 மணி நேர தொடக்கவிழாவுடன் பிரமாண்டமாக துவங்கியது. புதிய தொகுப்பாளராக களமிறங்கிய விஜய் சேதுபதி, கமலுக்கு ஈடு கொடுப்பாரா என்ற கேள்வி எழுந்த நிலையில், அதனையெல்லாம் தவிடு பொடியாக்கி, போட்டியாளர்களை கேள்விகளால் துளைத்தெடுத்து, ஓட வைத்தார்.
குறிப்பாக விவாதங்களை நேரடியாக சந்திப்பது, போட்டியாளர்களின் தவறுகளை நேர்மையாக விசாரிப்பது, இடையிடையே அவர் கூறும் தத்துவங்கள் என அவரின் தன்னம்பிக்கை மிக்க அணுகுமுறைக்கு பலத்த பாராட்டுகள் கிடைத்தன. அது ரசிகர்களிடையேயும் மிகப்பெரிய வரவேற்பை பெற்று, பரவலான பாராட்டுகளைப் பெற்று வருகிறது.