ஜோவிகாவை வச்சு வனிதா போட்ட பிளான்.. இனி செய்யுறது எல்லாமே சம்பவம் தான்.. கூட்டணி சேர்ந்த அம்மா பொன்னு..
நடிகை வனிதா, தான் இயக்கி நடிக்கும் புதிய படத்திற்கு யார் தாயரிப்பாளர் என்ற விஷயத்தை கூறி, சினிமா வட்டாரத்தை பரபரப்பாக்கி உள்ளார்.

தமிழ் சினிமாவில் மூத்த நடிகரான விஜயகுமார்- மஞ்சுளாவின் தம்பதியின் மகள் தான் வனிதா விஜயகுமார். ஆனால் தற்போது தனது தந்தையுடன் பேச்சு வார்த்தை இல்லாமல் தனியாக வாழ்ந்து வருகின்றார்.
விஜய் நடித்த சந்திரலேகா திரைப்படத்தில் நடிகையாக அறிமுகமான அவர், தொடர்ந்து பல திரைப்படங்களில் நடித்தார். வனிதா விஜயகுமாரை பொறுத்தவரை அவர் நடிகையாக பிரபலமானதை விட, அவருடைய பர்சனல் பிரச்சினைகளின் வழியாகவே பிரபலம் அடைந்ததே அதிகம்.
வனிதாவின் திருமண வாழ்க்கை
முதலில் நடிகர் ஆகாஷை திருமணம் செய்த வனிதா கருத்துவேறுபாடு காரணமாக அவரை பிரிந்தார். அதன் பின்னர் தொழிலதிபர் ஆனந்த் ஜெய் ராஜனை திருமணம் செய்து கொண்டார். அந்த மண உறவும் சில ஆண்டுகளில் முடிவுக்கு வந்தது. பின்னர், 2013ஆம் ஆண்டு நடன இயக்குநர் ராபர்ட்டுடன் வாழ்க்கையைத் தொடங்கிய வனிதா, 2017ஆம் ஆண்டு உறவில் இருந்து விலகினார். அதன் பின்னர் பீட்டர் பால் என்பவருடன் உறவில் இருந்த வனிதா அவரையும் திருமணம் செய்து கொண்டு பின்னர் பிரிந்தார்.