Vanitha : கை நிறைய வளையல்.. திருமணத்திற்கு ரெடியான வனிதா? நிஜமா உங்களுக்கு திருமணமா? கேள்வி எழுப்பும் நெட்டிசன்கள்!
Vanitha Vijayakumar : இன்ஸ்டாகிராமில் சில தினங்களுக்கு முன்பு கை நிறைய வளையல் போட்டு இருக்கும் புகைப்படத்தை வனிதா ஷேர் செய்திருக்கின்றார். இந்த புகைப்படத்தை பார்த்த ரசிகர்கள் பலரும் நிஜமா உங்களுக்கு திருமணமா? என கேள்வி எழுப்பி வருகின்றனர்.

சமூக வலைதள பக்கங்களில் தற்போது பரபரப்பாக பேசிக் கொண்டிருப்பது வனிதா விஜயகுமாரின் திருமண பேச்சு தான். நேற்று ஒரு புகைப்படத்தை வெளியிட்டு ஒட்டு மொத்த இணைய வாசிகளையும் தன் பக்கம் ஈர்த்துவிட்டார் வனிதா. தமிழ் சினிமாவில் பலம்பெரும் நடிகரான விஜயகுமார் மற்றும் மஞ்சுளாவின் மூத்த மகள் தான் வனிதா விஜயகுமார். ஆனால் தற்போது தனது தந்தையுடன் பேச்சு வார்த்தை இல்லாமல் தனியாக வாழ்ந்து வருகின்றார்.
பர்சனல் பிரச்சினைகளின் வழியாகவே பிரபலம்
விஜய் நடித்த சந்திரலேகா திரைப்படத்தில் நடிகையாக அறிமுகமான அவர், தொடர்ந்து பல திரைப்படங்களில் நடித்தார். வனிதா விஜயகுமாரை பொறுத்தவரை அவர் நடிகையாக பிரபலமானதை விட, அவருடைய பர்சனல் பிரச்சினைகளின் வழியாகவே பிரபலம் அடைந்ததே அதிகம்.
முதலில் நடிகர் ஆகாஷை திருமணம் செய்த அவர் கருத்துவேறுபாடு காரணமாக அவரை பிரிந்தார். அதன் பின்னர் தொழிலதிபர் ஆனந்த் ஜெய் ராஜனை திருமணம் செய்து கொண்டார். அந்த மண உறவும் சில ஆண்டுகளில் முடிவுக்கு வந்தது. பின்னர், 2013ஆம் ஆண்டு நடன இயக்குநர் ராபர்ட்டுடன் வாழ்க்கையைத் தொடங்கிய வனிதா, 2017ஆம் ஆண்டு உறவில் இருந்து விலகினார். அதன் பின்னர் பீட்டர் பால் என்பவருடன் உறவில் இருந்த வனிதா அவரையும் திருமணம் செய்து கொண்டு பின்னர் பிரிந்தார்.