Vanitha Marriage: என்னது மீண்டும், மீண்டுமா.. அடுத்த திருமணத்திற்கு ரெடியான வனிதா? மாப்பிள்ளை யார்?
Vanitha Marriage: நடிகை வனிதா விஜயகுமார், நடன மாஸ்டர் ஒருவரை திருமணம் செய்வது போல் புகைப்படம் ஒன்று வெளியாகி இருக்கிறது.

Vanitha Marriage: மனதில் தோன்றுவதை வெளிப்படையாக பேசும் நபர்கள் சிலர் மட்டுமே. அதிலும் திரைத்துறையில் ஒரு சிலர் மட்டுமே அப்படி அறிதாக இருக்கிறார்கள். அந்த பட்டியலில் முதலில் இருப்பவர் வனிதா விஜயகுமார். தன் மனதிற்கு எது சரி, எது தவறு என்று தோன்றுகிறதோ அதை அப்படியே செய்யவும், பேசவும் செய்வார். அதனால் எப்போது சர்ச்சையில் சிக்குவதையே வாடிக்கையாக வைத்து இருக்கிறார்.
வனிதா விஜயகுமார் தனது தனிப்பட்ட வாழ்க்கையில் நடந்த பல்வேறு காரணங்களால் பலமுறை செய்திகளில் இடம் பிடித்தவர். திரைப்படங்கள், தொடர்கள் மற்றும் தொலைக்காட்சி நிகழ்ச்சிகள் மூலம் அவர் தனது வாழ்க்கையில் முன்னேறினாலும், அவரது தனிப்பட்ட வாழ்க்கையில் ஏற்பட்டவை சர்ச்சைகளாகவே இருக்கிறது.
அவர் முதன்முதலில் நடிகர் ஆகாஷை 2000 ஆம் ஆண்டு திருமணம் செய்து கொண்டார். பின்னர் 2006ல் விவாகரத்து பெற்றார். அந்த உறவில் வனிதாவுக்கு ஸ்ரீஹரி என்ற மகனும், ஜோவிகா என்ற மகளும் உள்ளனர்.