தமிழ் செய்திகள்  /  Entertainment  /  Jovika Entered Into Bigg Boss 7 Tamil

Jovika: வனிதா பொண்ணுன்னா சும்மாவா.. வந்ததும் வேலையை பார்த்த ஜோவிகா

Aarthi Balaji HT Tamil
Jan 11, 2024 10:58 AM IST

பிக் பாஸ் 7 ஆவது சீசனில் இன்று ஜோவிகா உள்ளே சென்று இருக்கிறார்.

பிக் பாஸ் 7
பிக் பாஸ் 7

ட்ரெண்டிங் செய்திகள்

நேற்று ( டிச. 10) யாரும் எதிர்பார்க்காத விதமாக வார நடு பகுதியில் எவிக்‌ஷன் நடந்தது. அர்ச்சனா, மாயா, தினேஷ், விஜய் வர்மா, விஷ்ணு, மணி சந்திரா ஆகியோர் இதை சந்தித்தார்கள். இறுதியாக ஐந்து பேர் காப்பாற்றப்பட்ட நிலையில் விஜய் வர்மா வெளியே சென்றார். 

இந்நிலையில் இது பேனல்ஸ் வாரம் என்பதால் ஏற்கனவே எவிக்ட்டாகி சென்ற போட்டியாளர்கள் உள்ளே வருகிறார்கள். அந்த வகையில் தற்போது வரை ஒரு சிலர் வந்து இருக்கிறார்கள். 

முதல் நபராக அனன்யா ராவ், அக்‌ஷயா, வினுஷா, சரவண விக்ரம், கூல் சுரேஷ், பிரவோ ஆகியோர் உள்ளே வந்து இருக்கிறார்கள்.

இதனிடையே இன்று ( டிச.11) வெளியாகி இருக்கும் ப்ரோமோவில் ஜோவிகா உள்ளே சென்று இருக்கிறார். அனைவருமே இவரின் வருகைக்கு தான் காத்திருந்தார்கள். 

உள்ளே அதிரடியாக வந்து இருப்பது போல் தெரிகிறது. ஜோவிகா உள்ளே சென்றதும் போட்டியாளர்களிடையே சண்டையை மூட்டிவிடும் வகையில் பேசி இருக்கிறார். முதலில் தினேஷிடம்  ஜோவிகா, நீங்கள் தனியாக விளையாடுவது போல் தெரியவில்லை. நீங்கள் மூன்று பேரும் ஒரு குரூப் போலவே தெரிகிறது. தினேஷ் தனியாக விளையாடுகிறார் என சொல்ல முடியாது என்றா.

இரண்டாவதாக, மாயாவிடம் சென்று, உங்க மேல ஒரு கோபம் இருக்கிறது. அர்ச்சனா எங்க எல்லாரையும் என்னென்ன பேசுனாங்க. இப்போ நீங்க அவங்க கூடவே கட்டிப் புரண்டுகிட்டு இருக்கீங்க.

நீங்க மட்டும் இந்த சீசனில் இல்லை என்றால் இந்த சீசன் வேஸ்ட்” என்றார். 

வந்த உடனே அர்ச்சனா - மாயா இடையே சண்டையை மூட்டிவிட்டு இருக்கிறார் ஜோவிகா. ஜோவிகா செய்ததை பார்த்தால், பிக் பாஸ் மூன்றாவது சீசனில் வனிதா உள்ளே சென்று எப்படி கொளுத்தி போட்டாரா? அதே போல் இருக்கிறது என ரசிகர்கள் கலாய்த்து வருகிறார்கள்.

சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடலாம். லிங்க்குகள் கீழே கொடுக்கப்பட்டுள்ளன:

Google News: https://bit.ly/3onGqm9 

ஹிந்துஸ்தான் தமிழ் வாட்ஸ் அப் குடும்பத்தில் இணைய கீழே உள்ள லிங்கை கிளிக் செய்யுங்கள்.

WhatsApp channel

டாபிக்ஸ்

பொழுதுபோக்கு மற்றும் பிக்பாஸ் , கோலிவுட் தொடர்பான அப்டேட் செய்திகளை இந்துஸ்தான் டைம்ஸ் தமிழ் மூலம் உடனுக்குடன் அறியலாம்.