Bigg Boss Vanitha: செருப்பாலயே அடிப்பேன்... சுயமரியாதைக்கு விளக்கமா? கடுகடுத்த வனிதா-bigg boss vanitha rose her voice for self respect criticism - HT Tamil ,பொழுதுபோக்கு செய்திகள்
தமிழ் செய்திகள்  /  பொழுதுபோக்கு  /  Bigg Boss Vanitha: செருப்பாலயே அடிப்பேன்... சுயமரியாதைக்கு விளக்கமா? கடுகடுத்த வனிதா

Bigg Boss Vanitha: செருப்பாலயே அடிப்பேன்... சுயமரியாதைக்கு விளக்கமா? கடுகடுத்த வனிதா

Malavica Natarajan HT Tamil
Sep 28, 2024 05:13 PM IST

Bigg Boss Vanitha: மணிமேகலை- பிரியங்கா விவகாரத்தில் கணவனுடன் இருக்கும் பெண்களுக்கு சுயமரியாதை உள்ளது என சிலர் கருத்து தெரிவித்தவர்களை, செருப்பால் அடிப்பேன் என பிக்பாஸ் வனிதா காட்டமாக கூறியுள்ளார்.

Bigg Boss Vanitha: செருப்பாலயே அடிப்பேன்... சுயமரியாதைக்கு விளக்கமா?... கடுகடுத்த வனிதா
Bigg Boss Vanitha: செருப்பாலயே அடிப்பேன்... சுயமரியாதைக்கு விளக்கமா?... கடுகடுத்த வனிதா

விஜய் டிவியின் புகழ்பெற்ற ரியாலிட்டி ஷோவான குக் வித் கோமாளி நிகழ்ச்சியில் தொகுப்பாளர் மணிமேகலைக்கும், தொகுப்பாளராக இருந்து பிரபலமடைந்து தற்போது நிகழ்ச்சியில் குக்காக பங்கேற்று வந்த பிரியங்காவிற்கும் பிரச்சனை வெடித்துள்ளது.

இதனால், நிகழ்ச்சி நடந்து கொண்டிருக்கும்போதே பாதியில் வெளியேறிய மணிமேகலை, பின்னர் நிகழ்ச்சியிலிருந்து முற்றிலும் வெளியேறுவதாக அறிவித்தார். இதற்கு காரணமாக அவர் கூறிய விஷயம் தான் தற்போது பேசுபொருளே.

சுயமரியாதை முக்கியம்

குக் வித் கோமாளியில் குக்காக வந்த ஆங்க்கர் ஒருவர் என்னை வேலை செய்ய விடாமல் தடுக்கிறார். எனக்கு சுயமரியாதை முக்கியம். பிச்சை எடுத்தாவது நான் பிழைப்பேன் என காட்டாமாக கூறியுள்ளார்.

இந்த கருத்தை அவர் சோசியல் மீடியாவில் பதிவிட்ட உடனேயே பற்றியது காட்டுத் தீ. சரசரவென பலரும் அங்கு என்ன நடந்தது. மணிமேகலை ஏன் அவ்வாறு கூறினார். அவர் கூறுவது உண்மை தானா என எதையும் ஆராயாமல் இரண்டு கேங் பிரிந்தது. முட்டவும் மோதவும் ஆரம்பித்தது.

சோசியல் மீடியா ட்ரெண்டிங்

இதையடுத்து, பல்வேறு விதமான தனிப்பட்ட தாக்குதல்கள், காது கொடுத்து கேட்க முடியாத கமெண்டுகள், குடும்ப உறுப்பினர்களை அவமானப்படுத்துவது இத்துடன் மொழி, இனப் பிரச்சனை, வதந்திகள் என போதும் போதும் என தகவல்களும் கருத்துகளும் பரவி வருகிறது.

பிரியங்கா- மணிமேகலை பிரச்சனை குறித்து குக் வித் கோமாளி செட்டில் இருந்த குரேஷி, சுனிதா, புகழ், தர்ஷன் என பலரும் கருத்து தெரிவித்திருந்தனர். அதே வகையில், விஜய் டிவி பிரபலங்களான அமீர், அர்ச்சனா, தாமு, மாகாபா ஆனந்த் உள்ளிட்டோரும் கருத்து தெரிவித்திருந்தனர். மேலும், திரைப் பிரபலங்கள் பலரும் கருத்து தெரிவித்திருந்தர். இதில் பலர் மணிமேகலைக்கு ஆதரவாகவும் பலர் பிரியங்காவிற்கு ஆதரவாகவும் பேசினர்.

இந்நிலையில், தனக்கு ஆதரவு தெரிவித்தவர்களுக்கு நன்றி கூறியும், தன்னை விமர்சித்தவர்களுக்கு பதிலடி தரும் வகையிலும் மணிமேகலை அவரது காதல் கணவர் ஹுசைனுடன் இணைந்து அவரது ஹூசைன் மணிமேகலை யூடியூப் சேனலில் வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார்.

வனிதா காட்டம்

இதையடுத்து, மணிமேகலை பேசுவது தவறாக உள்ளது. சொம்பு என குறிப்பிட்டு பிறரை தாக்குவது மிக மோசமான செயல் எனக் கூறி இருந்தார். இந்த நிலையில், மீண்டும் செய்தியாளர்கள் இதுகுறித்து வனிதாவிடம் கேள்வி எழுப்பினர். அப்போது, சூழல் இப்படி இருக்க வனிதா விஜயகுமார் இந்த விஷயம் குறித்து பேசுகையில், "மணிமேகலைக்கும் பிரியங்காவுக்கும் நடந்த சண்டையை மீடியா தான் பெரிதாக்கிவிட்டது. 

ஆனால் இந்த விவகாரத்தால் ஒன்றுமட்டும் நன்றாக தெரிகிறது. மணிமேகலை கணவருடன் இருக்கிறார். அதனால், அவருக்கு சுயமரியாதை உண்டு. கணவரோடு இல்லாதவருக்கு சுயமரியாதை இல்லை எனக் கூறுகின்றனர். அப்படி சொல்பவர்களை செருப்பால் மட்டும் இல்லை எதனால் வேண்டுமானாலும் அடிக்கலாம்.

பிரியங்காவின் கணவர் அவரை விட்டுவிட்டு போகவில்லை. அவர்கள் இருவரும் பிரிந்துவிட்டார்கள். ஒருவர் பிரிவதற்கும் அந்தப் பெண்ணின் கேரக்டருக்கும் எந்த சம்பந்தமும் கிடையாது' என கடுப்பாக தெரிவித்தார்.

நடிகை வனிதா, நிஜ வாழ்க்கையில் 3 பேரை திருமணம் செய்து, 3 பேரையும் விவாகரத்து செய்துள்ளார். இந்த நிலையில், பிரியங்கா மீதான இந்த தனிப்பட்ட தாக்குதல், மறைமுகமாக வனிதாவையும் தாக்குவது போல் உள்ளதால், அவர் கடுப்பாகி உள்ளார் என பலரும் கருத்து தெரிவித்து வருகின்றனர்.

Whats_app_banner

டாபிக்ஸ்

தமிழ்த் திரைப்பட செய்திகள், டிவி தொடர்கள், OTT செய்திகள், திரைப்பட விமர்சனங்கள், பாலிவுட், ஹாலிவுட் படங்கள் தொடர்பான சமீபத்திய அப்டேட்களை, பொழுதுபோக்கு பிரிவில் பார்க்கலாம்.