தமிழ் செய்திகள்  /  பொழுதுபோக்கு  /  1947 Movie: ஆகஸ்ட் 16 - 1947 திரைப்படம் விரைவில் வெளியாகும் - கௌதம் கார்த்திக்

1947 Movie: ஆகஸ்ட் 16 - 1947 திரைப்படம் விரைவில் வெளியாகும் - கௌதம் கார்த்திக்

Pandeeswari Gurusamy HT Tamil
Jan 26, 2023 12:45 PM IST

ஆகஸ்ட் 16 1947 திரைப்படக்குழுவினர் குடியரசு தின வாழ்த்துகளை சமூக வலை தளங்களில் பகிர்ந்துள்ளனர்.

August 16 1947
August 16 1947 (@ARMurugadoss )

ட்ரெண்டிங் செய்திகள்

இயக்குநர் ஏ.ஆர். முருகதாஸ், ஓம் பிரகாஷ் பட், நர்சிராம் செளத்ரி தயாரிப்பில் உருவாகியுள்ள திரைப்படம் ஆகஸ்ட் 16 1947. பொன்குமார் இயக்கியுள்ள இப்படத்தில் கெளதம் கார்த்திக் நாயகனாக நடிக்க, ரேவதி என்பவர் புதுமுக நடிகையாக அறிமுகமாகிறார்.

இந்திய சுதந்திர போராட்ட காலகட்டத்தில் நடைபெற்ற நிகழ்வுகளை மையமாக கொண்டு இந்தப் படம் உருவாகியுள்ளது. ஒரு தொலைதூர கிராமத்தில் ஒருவன் பிரிட்டிஷ் படைகளை எதிர்த்து தைரியமாக போராடும் கதையை மையமாக வைத்து இந்த படம் உருவாக்கப்பட்டு வருகிறது. சான் ரோல்டன் இப்படத்துக்கு இசையமைக்கிறார்.

இந்நிலையில் ஆகஸ்ட் 16 1947 திரைப்படத்தின் பர்ஸ்ட் லுக் வெளியாகி நல்ல வரவேற்பை பெற்றிருந்த நிலையில், இந்தப் படத்தின் டீஸர் கடந்த சுதந்திர தினத்தன்று வெளியானது. இதை நடிகர் சிம்பு தனது டுவிட்டர் பக்கத்தில் வெளியிட்டுள்ளார்.

இதன் ஃபர்ஸ்ட் லுக்கில் கௌதம் கார்த்திக் ஒரு கலவரத்தை முன்னெடுத்துச் செல்லும்போது பின்னணிகள் ஒரு காடு பற்றி எரிவது போன்ற காட்சிகள் இடம் பெற்றிருந்தது. இதையடுத்து டீசரை பகிர்ந்த சிம்பு தனது பதிவில் சுதந்திரத்திற்காக போராட்டம், ஒடுக்கு முறைக்கு எதிரான சக்தி, சுதந்திர தின சிறப்பு என குறிப்பிட்டுள்ளார். தமிழ்நாட்டின் சில இடங்களில் படமாக்கப்பட்டுள்ள நிலையில் தற்போது போஸ்ட் ப்ரடெக்ஷன் வேலைகள் நடந்து வருகிறது.. சுதந்திர போராட்ட காலகட்டத்தை கண்முன் நிறுத்தும் இந்த டீஸர் படத்தின் மீதான எதிர்பார்ப்பை ரசிகர்கள் மத்தியில் அதிகரிக்கச் செய்தது.

இந்நிலையில் நாட்டின் 74 வது குடியரசு தினம் கொண்டாடப்பட்டு வரும் நிலையில் நடிகர் கௌதம் கார்த்திக் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் ஆகஸ்ட் 16 1947 திரைப்பட குழுவினர் சார்பில் குடியரசு தின வாழ்த்துகளை பகிர்ந்துள்ளார். மேலும் படம் விரைவில் வெளியாகும் என்றும் தெரிவித்துள்ளார்.

 

IPL_Entry_Point

டாபிக்ஸ்