தமிழ் செய்திகள்  /  பொழுதுபோக்கு  /  Asin: கணவருடன் விவாகரத்தா? - ரியாக்ட் செய்த அசின்

Asin: கணவருடன் விவாகரத்தா? - ரியாக்ட் செய்த அசின்

Aarthi V HT Tamil
Jun 28, 2023 01:00 PM IST

நடிகை அசின் தனது திருமண விவாகரத்து தொடர்பான வதந்திக்கு விளக்கம் அளித்து உள்ளார்.

அசின்
அசின்

ட்ரெண்டிங் செய்திகள்

திருமணத்திற்கு பிறகு நடிப்புக்கு குட் பை சொல்லிவிட்டு குடும்ப பெண்ணாக மாறினார் அசின். இவர்களுக்கு 2017 ஆம் ஆண்டு ஆரின் என்ற பெண் குழந்தை பிறந்தது.

அசின், ராகுல் சர்மா தம்பதிக்கு திருமணமாகி 7 ஆண்டுகள் ஆகும் நிலையில், அவர்கள் இருவரும் தற்போது விவாகரத்து செய்ய உள்ளதாக தகவல் வெளியானது. ராகுல் சர்மாவிற்கு வேறு ஒரு பெண்ணுடன் தொடர்பு இருப்பதாகவும், அசின் பல முறை கண்டித்தும் அவர் கேட்காத காரணத்தினால் விவாகரத்து செய்ய முடிவு செய்து இருப்பதாக கூறப்பட்டது. 

இந்நிலையில் இந்த விவகாரம் தொடர்பாக அசின் விளக்கம் அளித்து இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பதிவு வெளியிட்டு உள்ளார்.

அவரின் பதிவில், “இப்போது எங்கள் கோடை விடுமுறையின் நடுவில், ஒருவரையொருவர் உட்கார்ந்து எங்கள் காலை உணவை அனுபவித்து மகிழ்ந்தோம், மேலும் சில கற்பனையான மற்றும் முற்றிலும் ஆதாரமற்ற 'நியூஸ்'களைக் கண்டோம்.

இந்த சம்பவம் பழைய நினைவுகளை நியாபகம் செய்தது. நாங்கள் குடும்பமாக சேர்ந்து அமர்ந்து எங்கள் திருமணம் தொடர்பான ஏற்படுகள் பற்றி பேசிக் கொண்டு இருந்தோம். அப்போது நாங்கள் பிரிந்துவிட்டோம் என வதந்தி பரப்பட்டது.

தயவு செய்து சிறப்பாக செய்யுங்கள். இதனால் எங்கள் விடுமுறையில் 5 நிமிடம் எங்களது சந்தோஷத்தை இழந்துவிட்டோம் ” என்றார்.

வதந்திகள் ஏன் ஆரம்பித்தன?

அசின் தனது இன்ஸ்டாகிராம் கணக்கில் இருந்து ராகுலுடனான ஒரு படத்தைத் தவிர அனைத்து படங்களையும் நீக்கினார். அங்கு இருந்து தான் வதந்திகள் தொடங்கியது. தனது திருமண புகைப்படங்களையும் நீக்கியுள்ளார். 

தற்போது, ​​அவரது கடைசி பதிவாக அவரது மகள் ஆரின் ஐந்தாவது பிறந்தநாள் விழாவில் இருந்து எடுத்த புகைப்படம் ர்கான். இது அக்டோபர் 2022 பதிவிடப்பட்டது.

இது குறித்து அசினுக்கு நெருக்கமான நபர் கூறுகையில், “எங்களுக்குத் தெரிந்த மகிழ்ச்சியான ஜோடிகளில் இவர்களும் ஒருவர். ராகுல் அன்பான கணவர், தந்தை. அசினை முற்றிலும் வணங்குகிறார். அவர்கள் படம் மற்றும் மீடியா கவனத்திலிருந்து விலகி இருக்க விரும்புகிறார்கள். 

அவர்கள் மிகவும் குறைந்த காரணத்திற்காக சமூக ஊடகங்களில் இருந்து விலகி இருக்கிறார்கள். இவர்களைப் போன்ற ஒரு ஜோடியைப் பற்றி இப்படி எழுதப்பட்டிருப்பது வேடிக்கையாக இருக்கிறது. உண்மையில், அவர்கள் தங்கள் மகளுடன் ஒன்றாக விடுமுறையில் இருக்கிறார்கள்” என்றனர்.

தமிழ்நாடு, தேசம் மற்றும் உலகம், பொழுதுபோக்கு, விளையாட்டு, லைஃப்ஸ்டைல், ஜோதிடம், புகைப்பட கேலரி, வேலைவாய்ப்பு, சமீபத்திய செய்திகள் என அனைத்தையும் இந்துஸ்தான் டைம்ஸ் தமிழ் இணையதளத்தில் உடனுக்குடன் தெரிந்து கொள்ளலாம்.

சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடரலாம். லிங்க்குகள் கீழே கொடுக்கப்பட்டுள்ளன:

Google News: https://bit.ly/3onGqm9 

IPL_Entry_Point

டாபிக்ஸ்