தமிழ் செய்திகள்  /  பொழுதுபோக்கு  /  Aranthangi Nisha: புது வீடு வாங்கிய அறந்தாங்கி நிஷா

Aranthangi Nisha: புது வீடு வாங்கிய அறந்தாங்கி நிஷா

Aarthi V HT Tamil
Feb 26, 2023 11:39 AM IST

அறந்தாங்கி நிஷா புது வீடு வாங்கிய வீடியோ வைரலாகிறது.

அறந்தாங்கி நிஷா
அறந்தாங்கி நிஷா

ட்ரெண்டிங் செய்திகள்

நகைச்சுவை பேச்சாற்றல் காரணமாக இவர் பல மேடைகளில் கலக்கி இருக்கிறார். கோலமாவு கோகிலா படத்தின் மூலம் சினிமாவிலும் அறிமுகமானார் அறந்தாங்கி நிஷா. தற்போது சினிமா துறையிலும் கலக்கிக் கொண்டு இருக்கிறார்.

இவர் பிக் பாஸ் சீசன் 4யில் போட்டியாளராக கலந்து கொண்டார். இந்த சீசனில் ஆண் போட்டியாளர்களை விட பெண் போட்டியாளர்கள் தான் மிகவும் விமர்சிக்கப்பட்டார் பிக் பாஸ் நிகழ்ச்சிக்கு பின்னர் பெரிதும் சமூக வலைதளத்தில் விமர்சிக்கப்பட்டார்.

நிஷா தற்போது கலக்கப்போவது யாரு நிகழ்ச்சியில் ராமருடன் காமெடி செய்து வருகிறார். இதே நிகழ்ச்சியில் அர்ச்சனா நடுவராக இருந்து வருகிறார். இதனிடையே கடந்த சில தினங்களுக்கு முன்பு நிஷா பங்களா வீடு வாங்கி இருப்பதாக ஆடம்பர வீட்டின் புகைப்படத்துடன் செய்திகள் வெளியானது. 

அதை பார்த்த நிஷா ‘அது எப்படிப்பா எனக்கே தெரியாம நான் பங்களா கட்டுவேன், பொய் சொன்னாலும் கொஞ்சம் பொருந்த சொல்லுங்கப்பா, இத பாத்துட்டு நிறைய பேரு எனக்கு வாழ்த்து சொன்னீங்க, நிறைய பேரு என்ன கிண்டல் பண்ணீங்க .இது வதந்தி தான், ஆனா முயற்சி செஞ்சா முடியாதது எதுவுமே இல்ல சீக்கிரமா இப்படி ஒரு பங்களா கட்டுவோம்….. சத்தியமா சொல்றேன் இது என் வீட்டு வீடு இல்லங்கோ’ என்றுபதிவிட்டு இருந்தார்.

இந்நிலையில் நிஷா தான் கட்டும் புதிய வீட்டினை தனது யூ-டியூப் பக்கம் மூலம் காட்டி உள்ளார். வீடு முழுமையாக முடியவில்லை என்றும் அதற்கு முன்பு பால் காய்ச்சல் விழா நடத்திவிட்டோம் என்றார். அவர் புதிய வீட்டின் விடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.

தமிழ்நாடு, தேசம் மற்றும் உலகம், பொழுதுபோக்கு, விளையாட்டு, லைஃப்ஸ்டைல், ஜோதிடம், புகைப்பட கேலரி, வேலைவாய்ப்பு, சமீபத்திய செய்திகள் என அனைத்தையும் இந்துஸ்தான் டைம்ஸ் தமிழ் இணையதளத்தில் உடனுக்குடன் தெரிந்து கொள்ளலாம்.

IPL_Entry_Point

டாபிக்ஸ்