தமிழ் செய்திகள்  /  பொழுதுபோக்கு  /  Aishwarya Rajesh: தீட்டுடன் ஏன் கோயில் செல்ல கூடாது? - ஐஸ்வர்யா ராஜேஷ் காட்டம்

Aishwarya Rajesh: தீட்டுடன் ஏன் கோயில் செல்ல கூடாது? - ஐஸ்வர்யா ராஜேஷ் காட்டம்

Aarthi V HT Tamil
Jan 25, 2023 12:28 PM IST

ஆண் - பெண் வித்தியாசம் எல்லாம் கடவுளுக்கு கிடையாது என நடிகை ஐஸ்வர்யா ராஜேஷ் தெரிவித்து உள்ளார்.

ஐஸ்வர்யா ராஜேஷ்
ஐஸ்வர்யா ராஜேஷ்

ட்ரெண்டிங் செய்திகள்

இவர் நடிப்பில் அடுத்தாக தயாராகி இருக்கும் திரைப்படம்,  ‘தி கிரேட் இந்தியன் கிச்சன்’. மலையாளத்தில் வெளியாகி மாபெரும் வரவேற்பை பெற்ற தி கிரேட் இந்தியன் கிச்சன் திரைப்படத்தின் தமிழ் ரீமேக்காக உருவாகி உள்ளது. 

இயக்குநர் ஆர். கண்ணன் இயக்கியுள்ள இப்படத்தில் ஐஸ்வர்யா ராஜேஷ், ராகுல் ரவீந்திரன் முன்னணி கதாபாத்திரங்களில் நடித்து உள்ளனர். ஜெர்ரி சில்வெஸ்டர் வின்சென்ட் இசையமைத்திருக்கும் இப்படத்திற்கு பாலசுப்ரமணியம் ஒளிப்பதிவு செய்துள்ளார். தி கிரேட் இந்தியன் கிச்சன் படம்  வரும் பிப்ரவரி மூன்றாம் தேதி வெளியாக உள்ளது. 

இதனை முன்னிட்டு படத்தின் செய்தியாளர்கள் சந்திப்பு சென்னையில் நடைபெற்றது. அதில் கலந்து கொண்டு பேசிய ஐஸ்வர்யா ராஜேஷ், ” இன்னும் நம் சமூகத்தில் ஆணாதிக்கம் இருக்க தான் செய்தது. கிராமங்களில் அது நடந்து வருகிறது.

கடவுள் எல்லோருக்கும் ஒண்ணு தான். ஆண் - பெண் வித்தியாசம் எல்லாம் கடவுளுக்கு கிடையாது. என் கோயிலுக்கு அவர்கள் வரலாம், இவர்கள் வர வேண்டாம் என எந்த கடவுளும் சொல்லமாட்டார்கள். சில சட்டங்களும், மக்களும் தான் அதை உருவாக்கி இருக்கிறது. சபரிமலை மட்டும் இல்லை, எந்த கோயிலிலும் எந்த கடவுளும் பக்தர்களுக்கு கட்டளை பிறப்பிக்கவில்லை. 

இது சாப்பிட கூடாது, இது தீட்டு என எந்த  கடவுளும் சொல்லவில்லை. இதையெல்லாம் நாம் தான் உருவாக்கி இருக்கிறோம். இதற்கும், கடவுளுக்கும் எந்த சம்பந்தமும் இல்லை என நான் சொல்வேன். 

மாதவிடாய் நேரத்தில் அதை செய்யக் கூடாது, இதை செய்யக் கூடாது, கோயிலுக்கு வரகூடாது என எந்த கடவுளும் சொல்லவில்லை. அதை உருவாக்கியது மக்கள் தான். நான் எப்போதும் இதை நம்புவது கிடையாது” என்றார். 

IPL_Entry_Point

டாபிக்ஸ்