தமிழ் செய்திகள்  /  Entertainment  /  Actress Ram Charan Birthday Special

Ram Charan: மெகா ஸ்டாரின் மகனாக எண்ட்ரி கொடுத்து கொடிக்கட்டி பறக்கும் ராம் சரண்

Aarthi V HT Tamil
Mar 27, 2023 05:45 AM IST

நடிகர் ராம் சரண் இன்று தனது 37 ஆவது பிறந்தநாளை கொண்டாடுகிறார்.

ராம் சரண்
ராம் சரண்

ட்ரெண்டிங் செய்திகள்

இவர் கடந்த 2007 ஆம் ஆண்டு சிருதா திரைப்படத்தின் மூலம் திரைப்பட துறைக்கு அறிமுகமானார். பூரி ஜெகநாத் இயக்கிய இப்படம் ராம் சரணுக்கு சரியான வரவேற்பைப் பெற்று தரவில்லை.

இதனைத் தொடர்ந்து இரண்டு வட இடைவெளிக்குப் பிறகு அவர், மகதீரா படம் மூலம் மக்கள் மனதில் இடம் பிடித்தார்.

அந்த படம் திரையுலகில் சூப்பர் ஹிட்டானது. வசூலிலும் சாதனை பெற்றது. அந்த வசூலை பார்த்த ரசிகர்கள் அவரை மெகா பவர் ஸ்டார் என்று அழைக்க ஆரம்பித்தனர். மேலும், படத்திற்கு படம் ராம் சரண் ரேஞ்சும் அதிகரித்தது.

2012 ஆம் ஆண்டு ராச்சா படத்தில் அவருக்கு வாய்ப்பு கிடைத்தது. சூதாட்டக்காரராக நடிக்க வாய்ப்பு கிடைத்தது. இந்த படம் ரசிகர்களின் இதயத்தை வெல்வதுடன், பாக்ஸ் ஆபிஸிலும் வெற்றி பெற்றது. இந்தப் படத்தின் வெற்றியால், அவருக்கு 2013 ஆம் ஆண்டு மேலும் இரண்டு படங்களில் நடிக்கும் வாய்ப்பு கிடைத்தது. ரங்கஸ்தலம் படத்திற்கு பிறகு ராம் சரண் லெவல் வேறு ரேஞ்சுக்கு சென்றது.

பல வெற்றி திரைப்படங்களில் நடித்தன் மூலம் நந்தி விருது , பிலிம்பேர் விருது போன்ற பல விருதுகளை வென்றார்.

திருமணம்

தெலுங்கு திரையுலகின் சூப்பர் ஸ்டாராக அறியப்பட்ட ராம் சரண், உபாசனா காமினேனியும் பள்ளியில் நண்பர்களாகப் பழகி வந்தனர். அவர் நன்கு அறியப்பட்ட ஆளுமை ஷோபனா காமினேனியின் மகள் மற்றும் பிரதாப் சி.ரெட்டியின் பேத்தி ஆவார்.

2011 ஆம் ஆண்டில் அவர்கள் ஒருவருடன் ஒருவர் நிச்சயதார்த்தம் செய்து கொண்டனர், ஒரு வருடம் கழித்து, 2012 ஆம் ஆண்டு ஜூன் 14 ஆம் தேதி இருவரும் ஹைதராபாத்தில் திருமணம் செய்து கொண்டனர்.

வீடு

நடிகர் ராம் சரண் தனது வாழ்க்கை முறைக்கு நிறையப் பணம் செலவழிக்கிறார். கார்கள் முதல் அவரது வீடுகள் வரை அனைத்தும் மிகவும் ஆடம்பரமானவை. ஹைதராபாத்தில் உள்ள ஆடம்பரமான வீட்டில் குடும்பத்துடன் வசித்து வருகிறார். ஹைதராபாத்தில் உள்ள ஜூப்ளி ஹில்ஸின் முக்கிய இடத்தில் அவரது ஆடம்பர வீடு அமைந்துள்ளது . இந்த அழகான வீட்டின் விலை சுமார் 38 கோடி பையாகும்.

இந்த வீட்டைத் தவிர பல அடுக்குமாடிக் குடியிருப்புகள் மற்றும் பங்களாக்களை வைத்திருக்கிறார். மேலும் அவர் பல ரியல் எஸ்டேட் சொத்துக்களிலும் செலவு செய்கிறார்.

IPL_Entry_Point

டாபிக்ஸ்