தமிழ் செய்திகள்  /  பொழுதுபோக்கு  /  Actress Mohini: ‘எடுக்கவே முடியாத செய்வினை.. இரவில் கழுத்தை நெறித்த சாத்தான்..’ - பிராமின் மோகினி இயேசுவை கைபிடித்த கதை!

Actress Mohini: ‘எடுக்கவே முடியாத செய்வினை.. இரவில் கழுத்தை நெறித்த சாத்தான்..’ - பிராமின் மோகினி இயேசுவை கைபிடித்த கதை!

Kalyani Pandiyan S HT Tamil
Apr 26, 2024 05:30 AM IST

திடீரென்று நள்ளிரவு ஒரு மணிக்கு யாரோ கதவை தட்டுவது போல இருக்கும். எனக்கு இதையெல்லாம் பார்க்கும் போது, இது உண்மையா அல்லது பொய்யா என்று தோன்றியது.

நடிகை
நடிகை

ட்ரெண்டிங் செய்திகள்

அந்த பேட்டியில் அவர் பேசும் போது, “ நான் தஞ்சாவூர் பிராமின் குடும்பத்தைச் சேர்ந்தவள். கணவரும் பிராமின் தான். வாழ்க்கை நல்ல படியாக சென்று கொண்டிருந்த நிலையில், ஒரு கட்டத்தில் நான் கடுமையாக கஷ்டப்பட ஆரம்பித்தேன். தினம், தினம் வேதனைகள் வந்து வீட்டு கதவைத் தட்டின.

இதனையடுத்து, எனக்கு மட்டும் ஏன் இப்படியெல்லாம் நடக்கிறது என்று கேள்வி கேட்க ஆரம்பித்தேன். நான் செய்யும் பூஜைகள், புனஸ்காரங்கள் ஏன் எனக்கு பயன் தரவில்லை என்று யோசிக்க ஆரம்பித்தேன். அதற்கு சரியான விளக்கமோ அல்லது வழியோ, அந்த மதத்தில் இருந்து கிடைக்கவில்லை. 

அப்போது, எனக்கு வழி காண்பித்தது; எனக்கான தீர்வை கொடுத்தது; எனக்கான வெளிச்சத்தை கொடுத்தது இயேசு கிறிஸ்துதான். 

உண்மையைச் சொல்ல வேண்டும் என்றால், எனக்கு யாரோ செய்வினை வைத்து விட்டார்கள். திடீரென்று இரவு என் கழுத்தை யாரோ நெறிப்பது போன்று இருக்கும்; எழுந்து பார்த்தால் கழுத்துக்கு கீழே முழுக்க, சிவந்து போயிருக்கும்.கையெல்லாம் யாரோ பிராண்டியது போல இருக்கும். 

திடீரென்று நள்ளிரவு ஒரு மணிக்கு யாரோ கதவை தட்டுவது போல இருக்கும். எனக்கு இதையெல்லாம் பார்க்கும் போது, இது உண்மையா அல்லது பொய்யா என்று தோன்றியது. 

அப்போதுதான் ஒரு ஜோசியக்காரர் எனக்கு யாரோ செய்வினை வைத்திருப்பதாக கூறினார். முதலில் நான் அதை நம்பவே இல்லை. உடனே நான் அந்த ஜோசியக்காரரிடம், உங்களுக்கு கூடுதல் காசு வேண்டுமென்றால் கேளுங்கள்; தயவு செய்து பொய் கூறாதீர்கள் என்று சொன்னேன்; அதற்கு அவர் என் மீது பயங்கரமாக கோபப்பட்டு விட்டார். 

மேலும் இந்த செய்வினை வைத்து, ஐந்து வருடங்கள் ஆகின்றது என்றும் இதை எடுக்கவே முடியாது என்றும் எச்சரித்தார். இதையடுத்து நாங்கள் பல பூஜைகள் செய்தோம். பல ஜோசியக்காரர்கள் வந்து அந்த செய்வினை பற்றி பேசினார்கள். 

இன்னொரு பக்கம் , எனக்கு மன அழுத்தம் நாளுக்கு நாள் அதிகமாக ஆரம்பித்தது. என்னை நானே கொல்வதற்கு பலமுறை முயற்சி செய்தேன். பல பேர் பலவிதமாகச் சொன்னார்கள். 

சில பேர் ஜாதகத்தை வைத்து சுக்கிரன்,சந்திரன் என்றெல்லாம் காமெடி செய்து கொண்டிருந்தார்கள். அப்போது என்னுடைய கனவில் வந்தவர்தான் இயேசு கிறிஸ்து. அவர் என்னுடைய வாழ்க்கையில் வந்த பின்னர், என்னுடைய வாழ்க்கையின் நிலை அப்படியே மாறிவிட்டது

யாரெல்லாம் என்னை அப்படி பேசினார்களோ, அவர்கள் எல்லாம் தற்போது ஆச்சரியப்படும் வகையில் தான் என்னை இயேசு கிறிஸ்து வைத்திருக்கிறார்

எனக்கு எதிராக ஏவி விட்ட 13 ஆவிகள், என்னை விட்டு ஓடி விட்டன. உடம்பில் உள்ள நோய்கள் குணமானது. அடுத்த நாள் இரவு எனக்கு விவாகரத்து கிடைத்திருக்க வேண்டும். ஆனால், இன்றைய தினம் என்னுடைய கணவர் என்னிடம் வந்து, நாம் செய்வது மிகப் பெரிய முட்டாள்தனம் விவாகரத்தை வாபஸ் வாங்குகிறேன் என்று சொன்னார்.” என்று பேசினார். 

தமிழ்நாடு, தேசம் மற்றும் உலகம், பொழுதுபோக்கு, விளையாட்டு, லைஃப்ஸ்டைல், ஜோதிடம், புகைப்பட கேலரி, வேலைவாய்ப்பு, சமீபத்திய செய்திகள் என அனைத்தையும் இந்துஸ்தான் டைம்ஸ் தமிழ் இணையதளத்தில் உடனுக்குடன் தெரிந்து கொள்ளலாம்.

சமூக வலைத்தளங்களில் எங்களை பின் தொடலாம். லிங்க்குகள் கீழே கொடுக்கப்பட்டு உள்ளன:

IPL_Entry_Point

டாபிக்ஸ்