தமிழ் செய்திகள்  /  பொழுதுபோக்கு  /  Trisha : த்ரிஷா காதலருடன் பிரபல நடிகை டேட்டிங் .. போட்டோஸ் வைரலான நிலையில் வெளிவந்த உண்மை!

Trisha : த்ரிஷா காதலருடன் பிரபல நடிகை டேட்டிங் .. போட்டோஸ் வைரலான நிலையில் வெளிவந்த உண்மை!

Divya Sekar HT Tamil
May 09, 2023 11:04 AM IST

வருண் மணியனுடன் டேட்டிங் செய்தது உண்மைதான் என நடிகை பிந்து மாதவி தெரிவித்துள்ளார்.

த்ரிஷாவின் காதலருடன் பிரபல நடிகை டேட்டிங்
த்ரிஷாவின் காதலருடன் பிரபல நடிகை டேட்டிங்

ட்ரெண்டிங் செய்திகள்

சினிமாவில் நடிக்க வந்து 20 ஆண்டுகளுக்கு மேல் ஆகிவிட்ட நிலையில், தற்போது வரை திருமணம் செய்து கொள்ளாமல் உள்ளார். கடந்த இருவாரங்களுக்கு முன் வெளியாகி சூப்பர்ஹிட்டாக திரையரங்கில் ஓடிக்கொண்டிருக்கும் பொன்னியின் செல்வன் படத்தில் குந்தவை என்ற கதாபாத்திரத்தில் தோன்றி ரசிகர்கள் மனதை கொள்ளையடித்தார்.

த்ரிஷாவுக்கு 39 வயது ஆன போதிலும், இளமை, கவர்ச்சி குறையாமல் அழகு பதுமையாகவே தோற்றமளிக்கிறார். த்ரிஷா நடிக்க வந்த சில வருடங்களில் தெலுங்கு நடிகர் ராணாவிடம் நெருக்கமாக பழகி வந்தார். இதையடுத்து இருவருக்கும் காதல் என வதந்திகள் பரவிய நிலையில், சில காலம் இருவரும் பிரிந்தனர்.

இதைத்தொடர்ந்து பிரபல திரைப்பட தயாரிப்பாளர் வருண் மணியனுடன் த்ரிஷாக்கு திருமணம் நிச்சயதார்த்தம் நடைபெற்றது. ஆனால் திருமண தேதி குறித்து அறிவிப்பு வெளியாகும் முன்னரே இருவருக்கும் இடையே பிரேக் அப் ஆனது.

த்ரிஷாவுக்கு நிச்சயம் செய்யப்பட்ட வருண்மணியனை நடிகை பிந்து மாதவி காதலித்து வருவதாக தகவல் பரவிய நிலையில் இதுகுறித்த புகைப்படங்களும் இணையதளங்களில் வைரலானது.

இந்த நிலையில் பிந்து மாதவி நடித்த நியூசென்ஸ் என்ற வெப் தொடரின் பத்திரிகையாளர் சந்திப்பு சமீபத்தில் நடந்தது. அப்போது வருண் மணியனை டேட்டிங் செய்வது குறித்து கேள்வி எழுப்பபட்டது. அதற்கு பதிலளித்த பிந்து வருண் மணியனுடன் டேட்டிங் செய்தது உண்மைதான். த்ரிஷா அவரை விட்டு பிரிந்த பிறகு தான் நான் டேட்டிங் செய்தேன் என தெரிவித்தார்.

தமிழ்நாடு, தேசம் மற்றும் உலகம், பொழுதுபோக்கு, விளையாட்டு, லைஃப்ஸ்டைல், ஜோதிடம், புகைப்பட கேலரி, சமீபத்திய செய்திகள் என அனைத்தையும் இந்துஸ்தான் டைம்ஸ் தமிழ் இணையதளத்தில் உடனுக்குடன் தெரிந்து கொள்ளலாம்.

சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடரலாம். லிங்க்குகள் கீழே கொடுக்கப்பட்டுள்ளன:

IPL_Entry_Point

டாபிக்ஸ்