தமிழ் செய்திகள்  /  பொழுதுபோக்கு  /  Abirami Emotional: இந்த வயசுல எதுக்கு தத்துக்குழந்தை - விருமாண்டி அபிராமி பளீச் பேட்டி!

Abirami Emotional: இந்த வயசுல எதுக்கு தத்துக்குழந்தை - விருமாண்டி அபிராமி பளீச் பேட்டி!

Kalyani Pandiyan S HT Tamil
Sep 10, 2023 05:30 AM IST

நடிகை அபிராமி தன்னுடைய கணவர் பற்றியும் தான் தத்தெடுத்து வளர்க்கும் மகள் கல்கி பற்றியும் பேசியிருக்கிறார்.

அபிராமி பேட்டி!
அபிராமி பேட்டி!

ட்ரெண்டிங் செய்திகள்

நான் அவரின் வீட்டுக்குச் செல்வேன் விளையாடுவேன் அவர் என்னுடைய வீட்டிற்கு வருவார் விளையாடுவார் அப்படித்தான் அந்த உறவு நீண்டது. 

இடையில் அவர் அவருடைய வேலையை பார்க்க கிளம்பிவிட்டார்; நான் என்னுடைய வேலையை செய்ய கிளம்பி விட்டேன்; எதேச்சையாக இருவரும் அந்த வேலை நிமித்தமாக அமெரிக்காவில் சந்தித்துக்கொள்ள நேர்ந்தது.

இந்த நிலையில் தான் நாங்கள் ஏற்கனவே எங்களுடைய மனதில் விதைக்கப்பட்டிருந்த நட்பை மீண்டும் வளர்த்தெடுத்தோம். அந்த நட்பு நாளடைவில் காதலாக மாறியது.

அதை வீட்டில் சொல்லும் வீட்டில் யாருக்குமே எந்தவித அதிர்ச்சியும் இல்லை. அவர்களுக்கு அது நடக்கும் என்பது முன்னமே தெரிந்திருந்தது. நான் இந்த நடிப்புத் துறையில் இயங்குவது பற்றி அவருக்கு மனக்கசப்போ கிடையாது. 

அவரும் இந்த பிரபலத்தை பார்த்து எல்லாம் நடுங்க மாட்டார். அதை இயல்பாகவே கையாள்வார்; காரணம் அவருக்கு அவர் மீது அவ்வளவு நம்பிக்கை இருக்கிறது நாங்கள் இருவரும் முதலில் நல்ல நண்பர்கள் ஆகையால் நான் எதையாவது ஒன்றை அவருக்கு தெரியாமல் மறைத்தால் இழப்பு என்பது எனக்குத்தான்.

நான் ஒரு நல்ல நண்பரை இழப்பேன். இன்னொன்று மற்ற எல்லாத்தையும் விட இங்கு ஒரு பொருள் எனக்கு மிகவும்  மதிப்பு வாய்ந்த பொருளாக இருக்கும் பொழுது நான் ஏன் பிற பொருட்களை தேடிச் செல்லப் போகிறேன். நான் தற்போது ஒரு குழந்தையை தத்தெடுத்து இருக்கிறேன். அதனை நான் அதிகாரப்பூர்வமாக அறிவிக்கவும் செய்தேன்.

காரணம் அந்த இடத்தில் நான் ஒரு பிரபலமாக அதனை பதிவிடவில்லை.  நான் ஒரு அம்மாவாக அதனை பதிவு செய்தேன். 

ஒரு வீட்டில் ஒரு குழந்தை பிறந்தால் எப்படியான சந்தோஷம் கிடைக்குமோ,  அப்படியான சந்தோஷமே குடும்பத்திற்கு கிடைத்தது. அதனால் தான் அதை என்னுடைய சமூக ஊடத்தில் பதிவிட்டேன். எனக்கு கிடைத்த வரவேற்பானது, நான் எதிர்பார்த்த ஒன்றே. சிறுவயதிலிருந்தே இந்த கான்செப்ட் பிடிக்கும்.

இதை என்னுடைய கணவரும் என்னுடைய குடும்பத்தினரும் நன்றாக புரிந்து கொண்டு அவர்களது ஆசீர்வாதத்தை எங்களுக்கு வந்தனர்.

நன்றி: கலாட்டா 

IPL_Entry_Point

டாபிக்ஸ்