தமிழ் செய்திகள்  /  பொழுதுபோக்கு  /  Actor Vijay: 'அம்பேத்கர், பெரியார், காமராஜர் பற்றி தெரிந்து கொள்ளுங்கள்' - நடிகர் விஜய் பேச்சு

Actor Vijay: 'அம்பேத்கர், பெரியார், காமராஜர் பற்றி தெரிந்து கொள்ளுங்கள்' - நடிகர் விஜய் பேச்சு

Karthikeyan S HT Tamil
Jun 17, 2023 11:55 AM IST

மாணவ, மாணவிகளுக்கு கல்வி விருது வழங்கும் விழாவில் நடிகர் தனுஷின் 'அசுரன்' பட வசனத்தைக் குறிப்பிட்டு நடிகர் விஜய் பேசியுள்ளார்.

மாணவ, மாணவிகளுக்கு விருது வழங்கும் விழாவில் நடிகர் விஜய் கலந்துகொண்டார்.
மாணவ, மாணவிகளுக்கு விருது வழங்கும் விழாவில் நடிகர் விஜய் கலந்துகொண்டார்.

ட்ரெண்டிங் செய்திகள்

இந்த விழாவில் பேசிய நடிகர் விஜய், "என் நெஞ்சில் குடியிருக்கும் இந்த பொதுத்தேர்வில் சாதனை படைத்த என் நண்பா, நண்பிகளுக்கும் அவர்களது பெற்றோருக்கும் மக்கள் இயக்க நண்பர்களுக்கும், ஊடக நண்பர்களுக்கும் எனது வணக்கம். நான் நிறைய இதுபோன்ற ஆடியோ நிகழ்ச்சிகள், விருது நிகழ்ச்சிகளில் எல்லாம் பேசியுள்ளேன். ஆனால், இதுபோன்ற கல்வி நிகழ்ச்சியில் பேசியது இது தான் முதல் முறை. மனதிற்கு ஏதோ பெரிய பொறுப்புணர்ச்சி வந்ததைப்போல் உணர்கிறேன்.

நான் பள்ளியில் ஒரு சாதாரண மாணவன் தான். வருங்கால இந்தியாவின் இளம் நம்பிக்கை நட்சத்திரங்களை பார்க்கும் போது என் பள்ளி காலங்களை நினைவு கூர்கிறேன். சமீபத்தில் ஒரு படத்தின் வசனம் என்னை மிகவும் பாதித்தது. காடு வச்சிருந்தா எடுத்துக்குவானுக, காசு வச்சிருந்தா புடுங்கிக்குவானுக, ஆனால் படிப்ப மட்டும் யாரும் எடுக்க முடியாது.. என்று வசனம் வரும்.

கல்விக்கு ஏதாவது செய்ய வேண்டும் என்று நீண்ட நாட்களாக என் மனதில் இருந்து வந்தது. அது இன்று நிறைவேறி இருக்கிறது. நாளைய வாக்காளர்களான நீங்கள் தான் ஓட்டுபோட்டு புதிய நல்ல தலைவர்களை தேர்ந்தெடுக்கப்போகிறீர்கள். நம் கைகளைக் கொண்டு நம் கண்களை குத்தும் செயல் நடக்கிறது. காசு வாங்கி கொண்டு வாக்கு செலுத்துகிறோம். ஒரு தொகுதியில் 15 கோடி ரூபாய் செலவு செய்தால் அதற்கு முன்பு அவர் எவ்ளோ சம்பாதித்து இருப்பார்கள்?. பணம் கொடுப்பவர்கள் தோல்வியடைந்தால், அது நீங்கள் கொடுக்கும் பரிசு. 

பணம் வாங்கிக்கொண்டு வாக்களிக்காதீர்கள் என்று மாணவ, மாணவிகள் பெற்றோரிடம் கூற வேண்டும். பாடப்புத்தகங்களை தாண்டி மாணவர்கள் நிறைய படிக்க வேண்டும். பாடப்புத்தகங்களை தாண்டி மாணவர்கள் நிறைய படிக்க வேண்டும். அம்பேத்கர், பெரியார், காமராஜர் போன்ற தலைவர்களைப் பற்றி மாணவ, மாணவிகள் படித்து தெரிந்து கொள்ள வேண்டும்." இவ்வாறு அவர் பேசினார்.

சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடரலாம். லிங்க்குகள் கீழே கொடுக்கப்பட்டுள்ளன:

Google News: https://bit.ly/3onGqm9 

தமிழ்நாடு, தேசம் மற்றும் உலகம், பொழுதுபோக்கு, விளையாட்டு, லைஃப்ஸ்டைல், ஜோதிடம், புகைப்பட கேலரி, வெப் ஸ்டோரி, வேலைவாய்ப்பு தகவல்கள், சமீபத்திய செய்திகள் என அனைத்தையும் இந்துஸ்தான் டைம்ஸ் தமிழ் இணையதளத்தில் உடனுக்குடன் தெரிந்து கொள்ளலாம்.

IPL_Entry_Point

டாபிக்ஸ்