Nandhan: அழுது ஆரவாராம் செய்த சிவகார்த்திகேயன்… வெளியான வீடியோ
தமிழ் செய்திகள்  /  பொழுதுபோக்கு  /  Nandhan: அழுது ஆரவாராம் செய்த சிவகார்த்திகேயன்… வெளியான வீடியோ

Nandhan: அழுது ஆரவாராம் செய்த சிவகார்த்திகேயன்… வெளியான வீடியோ

Malavica Natarajan HT Tamil
Sep 20, 2024 04:15 PM IST

Nandan: இன்று வெளியான நந்தன் திரைப்படத்தை பார்த்த நடிகர் சிவகார்த்திகேயன் தான் இதுவரை இதுபோன்ற திரைப்படத்தை பார்த்ததில்லை. இத்திரைப்படம் அருமையான படைப்பு என பாராட்டியுள்ளார்.

Nandhan: அழுது ஆரவாராம் செய்த சிவகார்த்திகேயன்…  வெளியான வீடியோ
Nandhan: அழுது ஆரவாராம் செய்த சிவகார்த்திகேயன்… வெளியான வீடியோ

என்ன சொல்கிறது நந்தன்?

புதுக்கோட்டை மாவட்டத்திலுள்ள ஒரு கிராமத்தைச் சுற்றி நடக்கும் கதையே இத்திரைப்படம். நடிகர் பாலாஜி சக்திவேல் ஆதிக்க வர்க்க அதிகாரம் மூலம் எப்படி ஊராட்சி மன்ற தலைவராக உள்ளார். திடீரென்று, அந்தத் தொகுதியில் தாழ்த்தப்பட்டவரை தலைவராக்கினால் என்ன நடக்கும் என்ற கதையை இயக்குநர் சுவாரசியம் நிறைந்த கதைக்களமாக அமைத்துள்ளார். 

இந்த படத்தில் அம்பேத்ராஜாக வரும் சசிகுமார் தாழ்த்தப்பட்ட வகுப்பை சேர்ந்த ஊராட்சி மன்ற தலைவராக நடித்துள்ளார். மேலும், இவர் படத்தில் ஆதிக்க வர்க்கத்திற்கு பதிலடி அளித்தாரா? அவரது மக்களின் உரிமைகளை மீட்டாரா என்பதே மீதிக்கதை.

இந்நிலையில், இத்திரைப்படத்தை பார்த்த நடிகரும் தயாரிப்பாளருமான சிவகார்த்திகேயன் படக்குழுவினரை வெகுவாக பாராட்டியுள்ளார். அதுமட்டுமின்றி, இத்திரைப்படம் தனக்குள் ஏற்படுத்திய தாக்கம் குறித்தும் தனக்கே உரிய பானியில் வீடியோ பதிவிட்டு படக்குழுவிற்கு அனுப்பி வைத்துள்ளார். அதனை இயக்குநர் இரா.சரவணன் தனது எக்ஸ் தள பக்கத்தில் பகிர்ந்துள்ளார்.

புகழ்ந்த சிவகார்த்திகேயன்

அந்த வீடியோவில், “எனது அன்பு அண்ணன்கள் சசிக்குமாரும், இரா.சரவணனும் இனணந்து அளித்த இந்த அற்புதமான படைப்பு தான் நந்தன். இத்திரைப்படத்தில் சசிகுமார் அண்ணன் ஒரு வித்தியாசமான முயற்சியைச் செய்திருக்கிறார் என நினைத்தே படத்தைப் பார்க்க தயாரானேன். ஆனால், படத்தின் முதல் காட்சி, முதல் பிரேமிலேயே இயக்குநர் இரா.சரவணன் என்னை பிரமிக்க வைத்து விட்டார். எனக்கு இருக்கும் சினிமா அறிவுக்கு இந்தப் படத்தின் முதல் காட்சி மிகவும் பிரமிப்பாகவே இருந்தது.

ரசித்தேன், அழுதேன்

சசிக்குமார் தனது வெள்ளந்தியான நடிப்பில் என்னை மேலும் மேலும் ஆச்சரியப்பட வைத்து உள்ளார். சசிகுமார் இந்தப் படத்தில் உண்மைக்கு மிக நெருக்கமாக இருந்தார். படம் இவ்வளவு நெருக்கமாக இருக்கும் என நான் எதிர்பார்க்கவில்லை. படம் பார்த்தபோது நிறைய இடத்தில் சிரித்தேன்.

நிறைய இடத்தில் யோசித்தேன். நிறைய இடத்தில் கண் கலங்கினேன். கடைசியாக மிக வேகமாக கை தட்டினேன்.

இது எல்லாவற்றையும் ஏற்படுத்தியது அண்ணன் இயக்குநர் இரா.சரவணனின் எழுத்தும் மேக்கிங்கும் தான். உண்மையில், நந்தன் அருமையான படைப்பு” என முழு மனதுடன் பாராட்டி இருக்கிறார்.

மேலும், நந்தன் திரைப்படம் குறித்து சோசியல் மீடியாவில் பலரும் தங்களது கருத்துகளையும், விமர்சனங்களையும் பகிர்ந்து வருகின்றனர். சமீப காலமாக தமிழ் திரையுலகில் ஆதிக்க வர்க்கத்தின் அடக்குமுறை குறித்தும் அதற்கு நாயகன் எதிர்வினை ஆற்றுவது குறித்தும் படைப்புகள் வந்த வண்ணம் உள்ளன. இவற்றை ரசிகர்கள் பெரிதளவில் கொண்டாடி வருகின்றனர் என்பதும் குறிப்பிடத்தக்கது.

பொறுப்புத் துறப்பு:

இந்தக் கட்டுரையில் உள்ள எந்தவொரு தகவல்/பொருள்/அல்லது நம்பகத்தன்மைக்கு எந்த விதமான உத்தரவாதமும் இல்லை. இதில் குறிப்பிடப்பட்டுள்ள தகவல்கள் அனைத்தும் பல்வேறு ஊடகங்களில் இருந்து சேகரித்து, உங்களுக்குத் தரப்பட்டுள்ளது. எங்கள் நோக்கம் தகவல்களை வழங்குவது மட்டுமே. இதிலிருந்து வெறும் தகவல்களை மட்டுமே பயனாளர்கள் எடுத்துக்கொள்ள வேண்டும். மற்றபடி இதிலிருந்து பயன்படுத்திக்கொள்வது பயனாளரின் பொறுப்பாகும்.

Whats_app_banner
தமிழ்த் திரைப்பட செய்திகள், டிவி தொடர்கள், OTT செய்திகள், திரைப்பட விமர்சனங்கள், பாலிவுட், ஹாலிவுட் படங்கள் தொடர்பான சமீபத்திய அப்டேட்களை, பொழுதுபோக்கு பிரிவில் பார்க்கலாம்.