Sasikumar: ‘தோத்தா ஒத்துக்கங்கடா.. சக்சஸ் மீட்ன்னு போடாதீங்கன்னு சொன்னேன்’ - கருடன் நிகழ்வில் சசிகுமார் பளார்!
தமிழ் செய்திகள்  /  பொழுதுபோக்கு  /  Sasikumar: ‘தோத்தா ஒத்துக்கங்கடா.. சக்சஸ் மீட்ன்னு போடாதீங்கன்னு சொன்னேன்’ - கருடன் நிகழ்வில் சசிகுமார் பளார்!

Sasikumar: ‘தோத்தா ஒத்துக்கங்கடா.. சக்சஸ் மீட்ன்னு போடாதீங்கன்னு சொன்னேன்’ - கருடன் நிகழ்வில் சசிகுமார் பளார்!

Kalyani Pandiyan S HT Tamil
Jun 14, 2024 07:00 PM IST

Sasikumar: “எப்போதுமே சக்சஸ் மீட் வைத்தால், அந்தப்படம் தோல்விப்படம் என்றும், ஓடாத படத்திற்குதான் சக்சஸ் மீட் வைப்பார்கள் என்றும் ஒரு பார்வை இருக்கிறது. காரணம், தோல்வி என்றாலே எல்லோருக்கும் ஒரு பயம் இருக்கும். யாரும் தோல்வியை ஒத்துக்கொள்ள மாட்டார்கள்” - சசிகுமார்

Sasikumar:  ‘தோத்தா ஒத்துக்கங்கடா.. சக்சஸ் மீட்ன்னு போடாதீங்கன்னு சொன்னேன்’ - கருடன் நிகழ்வில் சசிகுமார் பளார்!
Sasikumar: ‘தோத்தா ஒத்துக்கங்கடா.. சக்சஸ் மீட்ன்னு போடாதீங்கன்னு சொன்னேன்’ - கருடன் நிகழ்வில் சசிகுமார் பளார்!

தோல்வி பயம் 

அந்த நிகழ்ச்சியில் பேசிய சசிகுமார், “தயவு செய்து சக்சஸ் மீட் என்று போடாதீர்கள். நன்றி செலுத்தும் மீட்டிங் என்று போடுங்கள் என்று சொன்னேன். காரணம் என்னவென்றால், எப்போதுமே சக்ஸஸ் மீட் வைத்தால், அந்தப்படம் தோல்விப்படம் என்றும், ஓடாத படத்திற்குதான் சக்ஸஸ் மீட் வைப்பார்கள் என்றும் ஒரு பார்வை இருக்கிறது. காரணம், தோல்வி என்றாலே எல்லோருக்கும் ஒரு பயம் இருக்கும். யாரும் தோல்வியை ஒத்துக்கொள்ள மாட்டார்கள். 

நாம் முதலில் தோல்வியை ஒத்துக்கொள்ள வேண்டும். நாம் தோல்வியை ஒத்துக்கொண்டால்தான், அடுத்தப்படத்தில் நம்மால் ஜெயிக்க முடியும். தோல்விக்கு ஒரு காரணம் சொல்வார்கள். ஆனால் வெற்றிக்கு பல காரணங்கள் சொல்வார்கள். கருடன் படத்திற்கும் அது நடந்தது. ஆனால், இந்தப்படத்தின் வெற்றிக்கு ஒரே ஒருவர்தான் காரணம் என்பது நன்றாக தெரிந்தது. 

தயாரிப்பாளர்தான் வெற்றிக்கு காரணம் 

அவர் படத்தின் தயாரிப்பாளர்தான். காரணம், முதலில் இருந்தே அவர் இந்தப்படத்தின் மீது அபார நம்பிக்கை வைத்திருந்தார். இந்தப்படம் முன்னதாக ஓடிடிக்கு விற்க முடியாத சூழ்நிலை இருந்தது. அந்த சமயங்களில் குமார் மிகவும் சிரமப்பட்டார். நல்லபடம் அமைந்தால், நிச்சயமாக திரையரங்கில் ரசிகர்கள் வந்து பார்ப்பார்கள் என்பதற்கு இந்தப்படம் ஒரு சான்று. 

அவருக்கு என்னுடைய நன்றி. சூரிக்காத்தான் நான் இந்தப்படத்தில் நடிக்க வந்தேன். நான் ஒரு நல்லது செய்ய வந்தேன். ஆனால் எனக்கு அது நல்லதாக மாறிவிட்டது. சூரியை இனி பரோட்டா சூரி என்று யாரும் அழைக்கமாட்டார்கள். அதையெல்லாம் அவர் அழித்து விட்டார். அவர் என்றுமே கதையின் நாயகனாகத்தான் இருப்பார். கதாநாயகனாக மாறும் போதுதான் கஷ்டம். 

சூரி ஜெயித்தது எல்லோரும் ஜெயித்தது போல.. முதல் நாள் அவர் எல்லா திரையரங்கிற்கும் சென்று மக்களின் ரெஸ்பான்ஸை பார்ப்பதற்காக என்னை அழைத்தார். ஆனால் நான் செல்லவில்லை. இது உன்னுடைய வெற்றி.. நீதான் கொண்டாட வேண்டும் என்று கூறி செல்ல வைத்தேன்.” என்று பேசினார்.

கதையின் நாயகன் இமேஜ் குறித்து சூரி பேசியதாவது 

முன்னதாக, அவர் பேசும் போது, “ நான் இப்போது வேறொரு பாதையில் பயணிக்கிறேன். அதற்கு ஒரு நல்ல வரவேற்பு கிடைத்து இருக்கிறது. அதில் நம்பிக்கையாக நான் பயணம் செய்து கொண்டிருக்கிறேன். இந்த பாதையில் என்னை அறிமுகம் செய்த வெற்றிமாறனுக்கும், தற்போது என்னை வைத்து கருடன் படத்தை இயக்கி இருக்கும் துரை செந்தில் குமாருக்கும் நன்றியை தெரிவித்துக்கொள்கிறேன்." என்றார்.

தொடர்ந்து அவரிடம் இனி வரும் காலங்களில் காமெடியனாக நடிப்பீர்களா என்று கேட்ட போது, நிச்சயமாக நான் கதையின் நாயகனாக பயணிப்பேன் என்று கூறினார். மேலும் பேசிய அவர் என்னுடைய இந்த பாதைக்கு இடையூறு இல்லாமல் காமெடி ரோல்கள் வந்தால் அதிலும் நிச்சயமாக நடிப்பேன்” என்றார். 

அன்று சசிகுமார் திரைப்படத்தில் நீங்கள் நடித்தீர்கள் தற்போது என்னுடைய படத்தில் அவர் நடித்திருக்கிறார் என்று கூறுகிறீர்கள் அப்போது அவருடைய படத்தில் நான் நடித்தேன். இப்போதும் நான்தான் அவருடன் நடிப்பது போன்று இருக்கிறது. என்றைக்கு இருந்தாலும் சசிகுமார் எனக்கு அண்ணன்தான்” என்று பேசினார்.

தமிழ்நாடு, தேசம் மற்றும் உலகம், பொழுதுபோக்கு, விளையாட்டு, லைஃப்ஸ்டைல், ஜோதிடம், புகைப்பட கேலரி, வேலைவாய்ப்பு, சமீபத்திய செய்திகள் என அனைத்தையும் இந்துஸ்தான் டைம்ஸ் தமிழ் இணையதளத்தில் உடனுக்குடன் தெரிந்து கொள்ளலாம்.

சமூக வலைத்தளங்களில் எங்களை பின் தொடலாம். லிங்க்குகள் கீழே கொடுக்கப்பட்டு உள்ளன:

 

Whats_app_banner

டாபிக்ஸ்

தமிழ்த் திரைப்பட செய்திகள், டிவி தொடர்கள், OTT செய்திகள், திரைப்பட விமர்சனங்கள், பாலிவுட், ஹாலிவுட் படங்கள் தொடர்பான சமீபத்திய அப்டேட்களை, பொழுதுபோக்கு பிரிவில் பார்க்கலாம்.