Tamil Movies Releases: பெரிய ஹீரோக்கள் கிடையாது..ஆறு சிறு பட்ஜெட் படங்கள்! எதிர்பார்ப்பை ஏற்படுத்திய நந்தன்,லப்பர் பந்து
Tamil Movies This Week Releases: பெரிய ஹீரோக்கள் கிடையாது, ஆறு சிறு பட்ஜெட் படங்கள் இந்த வாரம் வெளியாக இருக்கின்றன. இந்த படங்களில் சசிக்குமாரின் நந்தன், அட்டகத்தி தினேஷ் - ஹரீஷ் கல்யாண் ஆகியோர் நடித்த லப்பர் பந்து, சத்யராஜ் நடித்த தோழர் சேகுவேரா படங்கள் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளன.

இந்த மாதம் தொடக்க வாரத்தில் விநாயகர் சதுர்த்தி ஸ்பெஷலாக தளபதி விஜய் நடித்த தி கோட் திரைப்படம் செப்டம்பர் 5ஆம் தேதி வெளியானது. ரசிகர்களை கவர்ந்த பாக்ஸ் ஆபிஸிலும் ரூ. 300 கோடிக்கு மேல் வசூலித்துள்ளது. ஒவ்வொரு வாரமும் எதாவது தமிழ் படங்கள் வெளியாவது வழக்கமாக இருந்து வரும் நிலையில், கடந்த வாரம் எந்த படமும் வெளியாகவில்லை.
இதைத்தொடர்ந்து இந்த வாரம் 6 புதிய படங்கள் தமிழில் வெளியாக இருக்கின்றன. வெள்ளிக்கிழமையான நாளை வெளியாக இருக்கும் தமிழ் படங்களை எவையெல்லாம் என்பதை பார்க்கலாம்
நந்தன்
கத்துக்குட்டி, உடன்பிறப்பே ஆகிய படங்களை இயக்கிய சரவணன் இயக்கியிருக்கும் படம் நந்தன். சசிகுமார், ஸ்ருதி பெரியசாமி, பாலாஜி சக்திவேல், சமுத்திரகனி உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர். தலித் ஊராட்சி மன்ற தலைவர்கள் பதவியில் இருந்தும் மரியாதை கிடைக்காமல் அவமானப்படுத்தப்படுவதை பற்றிய உண்மை சம்பவத்தை அடிப்படையாகக் கொண்டு இப்படம் எடுக்கப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது. இந்த படத்தின் ட்ரெய்லர்களும் ரசிகர்களை கவர்ந்திருப்பதுடன், எதிர்பார்ப்பையும் ஏற்படுத்தியுள்ளது.