Goat Movie : ‘உங்க இடத்தில் நான் இருப்பேன்’ கோட் படத்தில் விஜய்யிடம் நேரடியாக கூறிய சிவகார்த்திகேயன்!
Goat Movie : அந்த சமயத்தில் காந்தி கதாபாத்திரம் சிவகார்த்திகேயனிடம் உதவி ஒன்றைக் கேட்கும். அப்படி கேட்கும் பொழுது, இறுதியாக மைதானத்தில் இருக்கக்கூடிய ஆயிரக்கணக்கான மக்களின் வாழ்க்கை உங்களின் கையில் தான் இருக்கிறது என்று சொல்லிவிட்டு செல்வார் சிவகார்த்திகேயன்.
Goat Movie: படத்தில் முன்னமே சிவகார்த்திகேயன் கேமியோ ரோலில் நடித்திருக்கிறார் என்பது தகவலாக வந்திருந்தது. அவர் உண்மையில் படத்தில் கேமியோ ரோலியில் தான் நடித்திருக்கிறார். படத்தின் கிளைமாக்ஸில் சென்னை அணிக்கும், மும்பை அணிக்கும் செமி பைனல் போட்டியானது நடைபெற்றுக் கொண்டிருக்கும். அந்தப்போட்டியில் சென்னை அணிக்கு ஆதரவாக 17 ம் நம்பர் மஞ்சள் ஜெர்சி அணிந்து வரும் சிவகார்த்திகேயன், படத்திலும் சிவகார்த்திகேயனாகவே வந்திருக்கிறார்.
சிவகார்த்திகேயனாக சிவகார்த்திகேயன்
அவரை படத்தில் காந்தி கதாபாத்திரம் ( விஜய்) மைதானத்தில் சந்திக்கும் சூழ்நிலையானது உருவாகும். அப்போது காந்தி கதாபாத்திரத்தை தன்னுடைய ஃபேன் என்று நினைத்துக் கொள்ளும் சிவகார்த்திகேயன்.. "தளபதி அப்போதே நான் குழந்தைகளை கவர்ந்து விட்டேன் என்று கூறியிருந்தார். இப்போது தான் தெரிகிறது நான் பெரியவர்களையும் கவர்ந்திருக்கிறேன் என்று..." என்று சிவகார்த்திகேயன் கூறிவிட்டு, காந்தி கதாபாத்திரத்தின் அருகில் செல்லும். அப்பொழுது காந்தி கதாபாத்திரம் எதையோ தேட, சிவகார்த்திகேயன் அவர் தன்னிடம் ஆட்டோகிராப் தான் கேட்பதற்கு நோட்புக்கை எடுக்கிறார் என்று நினைத்துக் கொண்டு, ஆட்டோகிராப்பெல்லாம் வேண்டாம் நாம் செல்ஃபியாகவே எடுத்துக் கொள்வோம் என்று சொல்வார்.
விஜய் இடத்தை கேட்ட சிவகார்த்திகேயன்
அந்த சமயத்தில் காந்தி கதாபாத்திரம் சிவகார்த்திகேயனிடம் உதவி ஒன்றைக் கேட்கும். அப்படி கேட்கும் பொழுது, இறுதியாக மைதானத்தில் இருக்கக்கூடிய ஆயிரக்கணக்கான மக்களின் வாழ்க்கை உங்களின் கையில் தான் இருக்கிறது என்று சொல்லிவிட்டு செல்வார் சிவகார்த்திகேயன். இதையடுத்து சிவகார்த்திகேயன் மறைமுகமாக விஜய் அரசியலுக்கு செல்வதை குறிப்பிடும் வகையில், நீங்கள் வேறு ஏதோ வேலைக்கு அவசரமாக செல்கிறீர்கள். இனி இவர்களை நான் பார்த்துக் கொள்கிறேன் என்று கூறுவார். அதாவது விஜய் இருந்த இடத்தில் இனி சிவகார்த்திகேயன் இருப்பார் என்ற ரீதியில் அந்த காட்சி விளக்கப்பட்டிருந்தது.
சிவகார்த்திகேயன் போலவே, அஜித், விஜயகாந்த் என பல்வேறு மாஸ் ஸ்டார்களின் உள்ளடக்கங்கள், தி கோட் திரைப்படத்தில் இடம் பெற்றுள்ளன. ஒவ்வொரு கதாபாத்திரங்களின் வருகையும், படத்திற்கு தேவையான இடங்களின், தேவையான சூழலில் வைத்திருக்கிறார் இயக்குனர் வெங்கட்பிரபு. முடிந்த வரை, அந்த கதாபாத்திரங்களுக்கு சிறப்பு செய்யவும் முயற்சித்திருக்கிறார்.
வெறுமனே விஜய் ரசிகர்கள் மட்டுமல்லாமல், அனைத்து தரப்பு ரசிகர்களயைம் கவரும் விதமாக, திரைக்கதையில் இந்த கதாபாத்திரங்களை சேர்க்க, மெனக்கெட்டிருக்கும் வெங்கட்பிரபு, அதற்காக முடிந்த அளவு நியாயம் செய்திருக்கிறார். அதே போல, த்ரிஷாவும் ஒரு பாடலில் தன்னுடைய பங்களிப்பை சிறப்பாக செய்திருக்கிறார். ஆட்டம் போடும் விதமாக அந்த காட்சியும் விஜய் ரசிகர்களை குஷிப்படுத்தியுள்ளது.
மொத்தத்தில் கோட் திரைப்படம், நிறைய கேமியோ ரோல்களால் நிரம்பியிருக்கிறது என்றே சொல்லலாம்.
டாபிக்ஸ்