Sasikumar: நந்தன் படத்தில் கதையின் நாயகன் நான்.. ராஜூ முருகன் படம் சூப்பராக வந்திருக்கு - சசிகுமார்-sasikumar said that he is the hero of the story in nandan and raju murugan film has come out super - HT Tamil ,புகைப்பட செய்திகள்
தமிழ் செய்திகள்  /  புகைப்பட தொகுப்பு  /  Sasikumar: நந்தன் படத்தில் கதையின் நாயகன் நான்.. ராஜூ முருகன் படம் சூப்பராக வந்திருக்கு - சசிகுமார்

Sasikumar: நந்தன் படத்தில் கதையின் நாயகன் நான்.. ராஜூ முருகன் படம் சூப்பராக வந்திருக்கு - சசிகுமார்

Sep 16, 2024 04:51 PM IST Marimuthu M
Sep 16, 2024 04:51 PM , IST

  • Sasikumar: நந்தன் படத்தில் தான் கதாநாயகன் அல்ல எனவும், கதையின் நாயகனாக செய்த படம் என்றும் நடிகர் சசிகுமார் பேட்டியளித்துள்ளார்.

நந்தன் படத்தில் தான் கதாநாயகன் அல்ல எனவும், கதையின் நாயகனாக செய்த படம் என்றும் நடிகர் சசிகுமார் பேட்டியளித்துள்ளார்.இதுகுறித்து சித்ரா லட்சுமணன் அவர்களின் டூரிங் டாக்கிஸ் யூட்யூப் சேனலுக்கு நடிகர் சசிகுமார் அளித்த பேட்டியின் தொகுப்பு கீழே கொடுக்கப்பட்டுள்ளது. இது தொடர்பான கேள்வி பதில் பேட்டி பின்வருமாறு,’’நந்தன் எப்படிப்பட்ட படம்?நந்தன் இரா.சரவணன் என்னை வைச்சு செய்யுற இரண்டாவது படம். நான் பண்ணுன கேரக்டரில் நந்தன் படம், நான் கதையின் நாயகனாகப் பண்ணுனப் படம். நான் இதுவரைக்கும் பண்ணாத கேரக்டர் இதில் இருக்கு. இது எனக்கு தைச்ச சட்டை கிடையாது. வேறு ஒருவருக்கு செய்த கதை. அதில் நான் ஒல்லியாகி, அந்த சட்டையில், அதாவது அந்தப் படத்தில் நடிக்கப் போயிட்டேன். எல்லாருக்கும் பிடிக்கிற, எல்லோரையும் தொடர்புப்படுத்திக்கொள்ளும் கதையாக இது இருக்கும். நாம் பார்த்த, தவறவிட்ட சில கேரக்டர்கள் இந்தப் படத்தில் இருக்கும்.

(1 / 6)

ராஜூமுருகனோடு ஒரு புதிய படத்தில் பயணித்த அனுபவம் எப்படி இருந்தது?நாங்கள் ஏற்கனவே ஒரு படம் பண்றதா முடிவு எடுத்து வைச்சிருந்தோம். கோவில்பட்டியில் இப்போது தான் சூட்டிங் எல்லாம் முடிச்சோம். ரொம்ப நன்றாக வந்திருக்கு. அவரோட குக்கூ, ஜோக்கர் மாதிரி, இந்தப் படமும் நிச்சயம் இருக்கும் சார்.

(2 / 6)

பாலா மற்றும் அமீர் இரண்டுபேரும் உங்கள் குருமார்கள். அவர்களிடம் கற்றுக்கொண்ட விஷயங்கள் என்ன?நிறைய சார். சில விஷயங்கள் சொல்லலாம். சில விஷயங்கள் சொல்லமுடியாது. எது எது பண்ணக்கூடாதுன்னு கத்துக்கிட்டேன். இது இது பண்ணுங்க. இது பண்ணாதீங்கன்னு சொல்லித்தரமாட்டாங்க. நாம் அவர்களிடம் இருந்து உற்றுநோக்கி கத்துக்கணும் சார். அவர்கள்கிட்டயிருந்து ஃபெர்பெக்‌ஷன், மெனக்கெடல் இதெல்லாம் கத்துக்கிட்டேன் சார். இவங்ககிட்ட இருந்து நான் வந்ததால, நான் காமெடியா பண்ணிடக்கூடாது. அவர்களோட சாயலில் படம் பண்ணனும். அவங்க பண்ணுன மாதிரி இருந்திடக்கூடாதுன்னு நினைச்சுப் பண்ணுன படம் தான், சுப்பிரமணியபுரம்.

(3 / 6)

பருத்திவீரன் சூட்டிங் முடிஞ்சதுக்கப்புறம், நாங்க சுப்பிரமணியபுரம் சூட்டிங்கிற்குப் போயிட்டோம். முன்னாடியே, சுப்பிரமணியபுரம் கதை அமீர் அண்ணன்ட்ட சொல்லும்போது, நானும் ஒரு திருவிழா பாட்டு வைச்சிருக்கேன்னு சொன்னார். அதற்கப்புறம், அவர் பண்ணாத சாயலில் பண்ணுனப் பாட்டுதான், மதுரை குலுங்க மதுரை குலுங்க பாட்டு.பாலா அண்ணனும், அமீர் அண்ணனும் முதலில் எனக்கு நண்பர்கள். ஆனால், வொர்க்கில் அப்படி இருக்கமாட்டாங்க. எங்களுக்கு மரம் அப்படி என்றால், பாலுமகேந்திரா சார் தான். நான் அவர்கூட வொர்க் பண்ணாட்டியும், அந்த தொடர்புதான் வரும். பாலு மகேந்திரா சார், பாலா அண்ணன், அடுத்து அமீர் அண்ணன், அடுத்து நான், எனக்கு அடுத்து என் அசிஸ்டென்ட் சுந்தரபாண்டியன் படம் எடுத்த எஸ்.ஆர்.பிரபாகரன்னு அடுத்தடுத்து அதுதொடரணும்னு ஆசை.

(4 / 6)

பாலா - அமீர் என்ன வித்தியாசம்?பாலா அண்ணனுக்கும் அமீர் அண்ணனுக்கும் இடையே மட்டும் தாக்குப்பிடிச்சி உதவி இயக்குநராக இருந்துட்டோம் என்றால் எந்த டைரக்டர்கிட்டயேயும் இருந்துரலாம்ன்னு சொல்லிருவேன். அவங்க எதுக்குத் திட்டுறாங்கன்னு எல்லாம் தெரியாது. கோபம் வரும். அப்படி திட்டுறதுனால் தான், நிறைய கத்துக்க முடிஞ்சது. ராம் சூட்டிங்கில் எதற்கெடுத்தாலும் என் பெயரைச் சொல்லிதான், அமீர் அண்ணன் திட்டுவார். இதைப் பார்த்த ஒரு துணைநடிகர் நீங்க விரைவில் டைரக்டர் ஆகிடுவீங்கன்னு சொன்னார். இத்தனை அசிஸ்டென்ட்ஸ் இருந்தும் உங்கப்பெயரை மட்டும் சொல்றார்ன்னு வருத்தப்படாதீங்கன்னு அந்த நடிகர் சொன்னார். அதுதான் நடந்தது. அவங்க கோபப்பட்டது, நான் டைரக்டர் ஆனவுடனே தான் என்னால் அதைப் புரிஞ்சுக்கமுடிஞ்சது.

(5 / 6)

டைரக்டர் திட்டும்போது நம்மைப் பக்குவப்படுத்துவார்ன்னு அர்த்தம். நம்மையே அறியாமல் பொறுமை அதிகரிக்கும். பாலா சார், அமீர் அண்ணன் இரண்டுபேரையும் ஒப்பிடும்போது, பாலா சார் தான் ரொம்ப டஃப். சூட்டிங் ஸ்பாட்டில் இரண்டுபேரும் நெருப்பு தான். அதை நான் நல்ல விஷயமாகத்தான் பார்க்கிறேன். அது நம்மளைப் பக்குவப்படுத்தும்’’ என நடிகர் சசிகுமார் கூறியுள்ளார்.நன்றி: டூரிங் டாக்கிஸ்

(6 / 6)

மற்ற கேலரிக்கள்