Actor Jayam Ravi: வைரல் ஆன குந்தவை.. அன்றே கணித்த அருண்மொழி.. பொ.செ,-வில் கலகல!
பொன்னியின் செல்வன் பாகம் ஒன்றை இதுவரை திரையரங்கத்திற்கே வராதவர்கள் பார்க்க வந்தார்கள்.
பொன்னியின் செல்வன் திரைப்படத்தின் இரண்டாம் பாகம் 2 ஏப்ரல் 28 ஆம் தேதி திரைக்கு வர உள்ளது. அமரர் கல்கி எழுதிய நாவலை தழுவி எடுக்கப்பட்ட இப்படம் இரண்டு பாகங்களாக உருவாகியுள்ளது.
இப்படத்தில் ஆதித்த கரிகாலனாக விக்ரமும், வல்லவராயன் வந்தியத்தேவனாக கார்த்தியும், குந்தவையாக திரிஷாவும், நந்தினி தேவியாக ஐஸ்வர்யா ராய் பச்சனும், அருண்மொழி வர்மனாக ஜெயம் ரவியும் நடித்துள்ளனர்.
முன்னதாக வெளியான பொன்னியின் செல்வன் பாகம் 1 -ற்கு மக்களிடம் ஏகோபித்த வரவேற்பு கிடைத்த நிலையில் இந்த பாகத்தின் மீதும் மக்களுக்கு அதிக எதிர்பார்ப்பு நிலவி இருக்கிறது.
இந்த நிலையில் நேற்றைய தினம் (29 -03 -2023) பொன்னியின் செல்வன் பாகம் 2 யின் பிரமாண்ட இசை வெளியீட்டு விழா சென்னை நேரு உள்விளையாட்டு அரங்கத்தில் வைத்து நடைபெற்றது.
இந்த நிகழ்ச்சியில் சிறப்பு விருந்தினராக கமல்ஹாசன் மற்றும் சிலம்பரசன் பங்கேற்ற நிலையில் படம் சார்ந்த நட்சத்திரங்களும் தொழில் நுட்ப கலைஞர்களும் நிகழ்ச்சியில் பங்கேற்றனர். அந்த வகையில் நடிகர் ஜெயம் ரவியும் நிகழ்ச்சியில் கலந்து கொண்டார்.
அவர் பேசும் போது, “பொன்னியின் செல்வனுக்கு இவ்வளவு பேர் வந்திருப்பது மிகவும் மகிழ்ச்சியாக இருக்கிறது. ஆக்சிஜன் சிலிண்டர் வைத்துக்கொண்டு வந்தார்கள். அது பொன்னியின் செல்வன் என்ற ஐடியாவில் வந்ததே. விக்ரம் சார் அவ்வளவு பெரிய உழைப்பாளி. எப்படி இப்படி உழைக்கிறீர்கள் என்று கேட்டால் மூச்சு பயிற்சி செய் என்பார்.
ஒரு கதையை இரண்டு படமாக எடுத்து வைத்துவிட்டு முதலில் இதை பாருங்கள் பின்பு இதை காட்டுகிறேன் என்று சொன்னவர் தான் மணி ரத்னம். கார்த்தி இல்லையென்றால் அந்த இரண்டு பாகத்திலும் நடித்து முடித்து இருப்பேனா என்று தெரியவில்லை. ஒவ்வொரு சீனுக்கு முன்பும் அவ்வளவு பேசி பேசி நடித்தோம்.
முன்பே நான் சொன்னேன் த்ரிஷா கேரக்டருக்கு எப்படி பெயர் கிடைக்கப் போகிறது என்று.. நான் சொன்னது போலவே நடந்தது. கார்த்தி இல்லையென்றால் இந்த இரண்டு பாகத்தில் என்னால் முழுமையாக நடித்திருக்க முடியாது. தூரமாக இருந்து வாழ்த்தும் ரஜினி அவர்களுக்கு நன்றி, சிலம்பரசன் அவர்களுக்கு நன்றி என்றார்.
டாபிக்ஸ்