TOP TRENDING HARRIS JEYARAJ SONGS: ட்ரெண்டிங்கில் இருக்கும் மக்காமிஷி..ஹாரிஸ் ஜெயராஜ் டாப் ஹிட் பாடல்கள் லிஸ்ட் இதோ-harris jeyaraj makkamishi song from brother trending on top and know the composer other hit songs - HT Tamil ,பொழுதுபோக்கு செய்திகள்
தமிழ் செய்திகள்  /  பொழுதுபோக்கு  /  Top Trending Harris Jeyaraj Songs: ட்ரெண்டிங்கில் இருக்கும் மக்காமிஷி..ஹாரிஸ் ஜெயராஜ் டாப் ஹிட் பாடல்கள் லிஸ்ட் இதோ

TOP TRENDING HARRIS JEYARAJ SONGS: ட்ரெண்டிங்கில் இருக்கும் மக்காமிஷி..ஹாரிஸ் ஜெயராஜ் டாப் ஹிட் பாடல்கள் லிஸ்ட் இதோ

Muthu Vinayagam Kosalairaman HT Tamil
Aug 23, 2024 07:57 AM IST

Top Trending Harris Jeyaraj songs: ஹாரிஸ் ஜெயராஜ் இசையமைப்பில் ஜெயம் ரவி நடித்து வரும் பிரதர் படத்தில் சிங்கிளாக வெளிவந்திருக்கும் மக்காமிஷி என்ற பாடல் ட்ரெண்டிங்கில் இருந்து வருகிறது. அந்த வகையில் தற்போது அதிகமாக ரசிக்கப்பட்டு வரும் ஹாரிஸ் ஜெயராஜ் டாப் ஹிட் பாடல்கள் எவை என்பதை பார்க்கலாம்.

Top Trending Harris Jeyaraj songs: ட்ரெண்டிங்கில் இருக்கும் மக்காமிஷி..ஹாரிஸ் ஜெயராஜ் டாப் ஹிட் பாடல்கள் லிஸ்ட் இதோ
Top Trending Harris Jeyaraj songs: ட்ரெண்டிங்கில் இருக்கும் மக்காமிஷி..ஹாரிஸ் ஜெயராஜ் டாப் ஹிட் பாடல்கள் லிஸ்ட் இதோ

ஹாரிஸ் ஜெயராஜ் இசையில் கடைசியாக 2022இல் லெஜெண்ட் படம் வெளியானது. இதன் பின்னர் அவர் இசையமைத்திருக்கும் துருவ நட்சத்திரம் கடந்த ஆண்டு வெளியாகும் என அறிவிக்கப்பட்டிருந்த நிலையில், தள்ளி போயுள்ளது. தெலுங்கில் நிதின் நடித்த எக்ஸ்ட் ஆர்டினரி மேன் என்ற படம் வெளியானது.

தற்போது ஓராண்டு இடைவெளிக்கு பிறகு ஹாரிஸ் ஜெயராஜ் இசையில் பிரதர் படம் வெளியாக இருக்கிறது. இதற்கிடையே தற்போது ட்ரெண்டிங்கில் இருக்கும் டாப் ஹாரிஸ் ஜெயராஜ் பாடல்கள் எவை என்பதை பார்க்கலாம்

மக்காமிஷி

ஜெயம் ரவி, பிரிங்கா மோகன் நடித்து வரும் புதிய படம் பிரதர். ராஜேஷ் எம் இயக்கத்தில் உருவாகி வரும் இந்த படத்தில் பால் டப்பா பாடல் வரிகள் எழுத ஹாரிஸ் ஜெயராஜ் இசையமைத்திருக்கும் மக்காமிஷி பாடல் கடந்த மாதம் வெளியானது.

ரசிகர்கள் கவர்ந்திருக்கும் இந்த பாடல் ட்ரெண்டிங்கில் முன்னணியில் இருக்கிறது. ஹாரிஸ் ஜெயராஜ் ட்ரெண்டிங் பாடல்களில் அதிகம் பேரால் கேட்டு ரசிக்கும் பாடலாக மாறியுள்ளது. பால் டப்பா மற்றும் டகால்டி ஆகியோர் இந்த பாடலை பாடியுள்ளனர்.

வசீகரா

ஹாரிஸ் ஜெயராஜ் என்று சொன்னாலே நினைவுக்கு வரும் பாடலாக மின்னலே படத்தில் இடம்பிடித்திருக்கும் வசீகரா பாடல் உள்ளது. தாமரை பாடல் வரிகளில் பாம்பே ஜெயஸ்ரீ பாடியிருக்கும் இந்த பாடல் 20 ஆண்டுகளுக்கு மேல் ஆகியும் சிறந்த ஹாரிஸ் ஜெயராஜ் ஹிட்டாக முன்னணியில் இருக்கிறது

அன்பே என் அன்பே

ஹாரிஸ் ஜெயராஜின் மற்றொரு அற்புத மெலடியாக ஜெயம் ரவி, கங்கனா ரணவத் நடித்த தாம் தூம் படத்தில் இடம்பிடித்திருக்கும் அன்பே என் அன்பே பாடல் உள்ளது. நா. முத்துகுமார் பாடல் வரிகளில் ஹரீஷ் ராகவேந்திரா இந்த பாடல் பாடியுள்ளார்.

ஜூன் போனால்

உன்னாலே உன்னாலே படத்தில் இடம்பிடித்திருக்கும் மெலடி, ஃபாஸ்ட் பீட் கலந்த பெப்பியான இந்த பாடல் வரிகளை பா. விஜய் எழுத, கிரிஷ் மற்றும் அருண் ஆகியோர் பாடியுள்ளனர். இளசுகளின் மனம் கவர்ந்த பாடல்களில் ஒன்றாக இருந்து வருகிறது

நெஞ்சுக்குள் பெய்திடும்

கெளதம் மேனன் - ஹாரிஸ் ஜெயராஜ் காம்போவில் மற்றொரு தரமான மெலடியாக வாரணம் ஆயிரம் படத்தில் இடம்பிடித்திருக்கும் நெஞ்சுக்குள் பெய்திடும் பாடல் உள்ளது. தாமரை பாடல் வரிகளை எழுத ஹரிஹரன், தேவன் ஏகாம்பரம் மற்றும் வி.வி, பிரசன்னா ஆகியோர் இந்த பாடலை பாடியுள்ளனர்

உன்னாலே உன்னாலே

உன்னாலே உன்னாலே படத்தில் இடம்பிடித்திரும் இன்னொரு மெலடியாக இந்த பாடல் உள்ளது. சிறந்த காதல் பாடலாக இருக்கும் இந்த பாடலின் வரிகளை பா. விஜய் எழுத, கிரிஷ், கார்த்திக், ஹரிணி ஆகியோர் பாடியிருப்பார்கள்.

முதல் கனவே

ஹாரிஸ் ஜெயராஜ் இசையமைத்த முதல் படமான மஜ்னு படத்தில் இடம்பிடித்திருக்கும் பாடலாக முதல் கனவே உள்ளது. வைரமுத்து பாடல் வரிகள் எழுத பாம்பே ஜெயஸ்ரீ, ஹரீஷ் ராகவேந்திரா, ஓ.எஸ். அருண் ஆகியோர் பாடியிருப்பார்கள்

சிலுசிலுவென பூங்காற்று

ஜெயம் ரவி நடித்த வனமகன் படத்தில் இடம்பிடித்திருக்கும் அற்புத மெலடியாக சிலுசிலுவென பூங்காற்று என்கிற இந்த பாடல் உள்ளது. மதன் கார்க்கி வரிகளில் விஜய் யேசுதாஸ் இந்த பாடலை பாடியுள்ளார்.

விழி மூடி யோசித்தால்

கே.வி. ஆனந்த் இயக்கத்தில் சூர்யா, தமன்னா நடித்திருக்கும் அயன் படத்தில் இடம்பிடித்திருக்கும் மெலடி பாடலாக விழி மூடி யோசித்தால் உள்ளது. நா. முத்துக்குமார் பாடல் வரிகள் எழுத கார்த்திக், பிராஷாந்தினி ஆகியோர் பாடலை பாடியிருப்பார்கள்

ஒரு மாலை

ஏ.ஆர். முருகதாஸ் இயக்கத்தில் சூர்யா, அசின், நயன்தாரா நடித்திருக்கும் கஜினி படத்தில் இடம்பிடித்த அற்புத மெலடியாக ஒரு மாலை இள வெயில் நேரம் உள்ளது. தாமரை வரிகளில் கார்த்திக் இந்த பாடலை பாடியுள்ளார்.

சமூக வலைத்தளங்களில் எங்களை பின் தொடரலாம். லிங்க்குகள் கீழே கொடுக்கப்பட்டு உள்ளன:

You Tube: https://www.youtube.com/@httamil

டாபிக்ஸ்

தமிழ்த் திரைப்பட செய்திகள், டிவி தொடர்கள், OTT செய்திகள், திரைப்பட விமர்சனங்கள், பாலிவுட், ஹாலிவுட் படங்கள் தொடர்பான சமீபத்திய அப்டேட்களை, பொழுதுபோக்கு பிரிவில் பார்க்கலாம்.