Jayam Ravi: ‘அவர்களின் நலனுக்காக ஆர்த்தியை பிரிகிறேன்’ .. விவாகரத்து முடிவை அறிவித்த ஜெயம்ரவி! - அதிர்ச்சியில் கோலிவுட்!
Jayam Ravi: நீண்டகால யோசனை, மற்றும் பல பரிசீலனைக்குப் பிறகு ஆர்த்தி உடனான எனது திருமண வாழ்வில் இருந்து விலகுவது என்ற மிகவும் கடினமான ஒரு முடிவை எடுத்துள்ளேன். - ஜெயம்ரவி!

Jayam Ravi: ‘அவர்களின் நலனுக்காக ஆர்த்தியை பிரிகிறேன்’ .. விவாகரத்து முடிவை அறிவித்த ஜெயம்ரவி! - அதிர்ச்சியில் கோலிவுட்!
பிரபல நடிகரான ஜெயம்ரவி தன்னுடைய மனைவி ஆர்த்தியை விவாகரத்து செய்ய இருப்பதாக கூறி அறிக்கை வெளியிட்டு இருக்கிறார்.
சொந்த சவால்கள்
இது குறித்து அவர் வெளியிட்டு இருக்கும் அறிக்கையில், “வாழ்க்கை, என்பது பல்வேறு அத்தியாயங்களைக் கொண்ட ஒரு பயணம். ஒவ்வொன்றும் அதன் சொந்த சவால்கள் மற்றும் வாய்ப்புகளுடன் வருகிறது. என்னுடைய பயணத்தை திரைப்படங்கள் வாயிலாகவும், திரையல்லாத இடங்களிலும் தொடர்ந்து பார்த்து வருபவர்களுக்கும், திரை துறை நண்பர்கள் பத்திரிக்கை, ஊடக துறை மற்றும் சமுக ஊடக நண்பர்கள், என் ரசிகர்கள் என அனைவரிடமும் நேர்மையாகவும் வெளிப்படையாகவும் இருக்க முயற்சி செய்து வருகிறேன். எனவே, மிகவும் நெஞ்சம் கசந்த ஒரு தனிப்பட்ட செய்தியை உங்களுடன் பகிர வேண்டிய கட்டாயத்தில் நான் உள்ளேன்.