Arthi Ravi: நான் கண்ணியமா இருக்க நினைக்கிறேன்.. இது என் பலவீனம் அல்ல.. பொங்கிய ஆர்த்தி-my words are miss understood says arthi ravi for her divorce issue - HT Tamil ,பொழுதுபோக்கு செய்திகள்
தமிழ் செய்திகள்  /  பொழுதுபோக்கு  /  Arthi Ravi: நான் கண்ணியமா இருக்க நினைக்கிறேன்.. இது என் பலவீனம் அல்ல.. பொங்கிய ஆர்த்தி

Arthi Ravi: நான் கண்ணியமா இருக்க நினைக்கிறேன்.. இது என் பலவீனம் அல்ல.. பொங்கிய ஆர்த்தி

Malavica Natarajan HT Tamil
Sep 30, 2024 07:15 PM IST

Arthi Ravi: ஜெயம் ரவி- ஆர்த்தி தம்பதியின் விவாகரத்து விவகாரம் குறித்து பல்வேறு வதந்திகள் பரவி வரும் நிலையில், எனது மௌனம் பலவீனம் அல்ல. நான் கண்ணியமாக இருக்க முடிவெடுத்துள்ளேன் என ஆர்த்தி ரவி கூறியுள்ளார்.

Arthi Ravi: நான் கண்ணியமா இருக்க நினைக்கிறேன்.. இது என் பலவீனம் அல்ல.. பொங்கிய ஆர்த்தி
Arthi Ravi: நான் கண்ணியமா இருக்க நினைக்கிறேன்.. இது என் பலவீனம் அல்ல.. பொங்கிய ஆர்த்தி

மௌனம் பலவீனமல்ல

இந்த நிலையில், ஆர்த்தி ஒரு அறிக்கையை வெளியிட்டுள்ளார். அந்த அறிக்கையில், என் வாழ்க்கையில் நடந்துவரும் விஷயங்கள் பற்றி என்னை சுற்றி உள்ள பலரும் பல கருத்துகளை தெரிவித்து வருகின்றனர். இதுகுறித்து நான் எதுவும் பேசாமல் மௌனம் காத்துவருவது எனது பலவீனத்தின் காரணமாகவோ, குற்ற உணர்ச்சியின் காரணமாகவோ அல்ல. நான் கண்ணியத்துடன் நடந்து கொள்ள வேண்டும் என முடிவு செய்துள்ளேன். அத்துடன் உண்மையை மறைக்க சிலர் என்னை மிக மோசமாக சித்தரித்து வருகின்றனர். அவர்களுக்கு பதிலளிக்காமல் இருக்கவும் முயற்சி செய்துள்ளேன்.

தவறாக புரிந்து கொள்ளப்பட்டது

தெளிவாக சொல்ல வேண்டுமானால், எனது முந்தைய அறிவிப்பு தவறாகப் புரிந்துக் கொள்ளப்பட்டுள்ளது. ரவி வெளியிட்ட விவகாரத்து அறிவிப்பானது எனது ஒப்புதல் இல்லாமல் வெளியிடப்பட்டது என்றுதான் கூறினேன். அந்த விவகாரத்தைப் பற்றி எனக்கு தெரியாது என்று நான் கூறியதாக, என் வார்த்தைகள் தவறாகப் புரிந்துக் கொள்ளப்பட்டுவிட்டது. இவை எனக்கு வருத்தமளிக்கிறது. இந்த விஷயத்தில் நான், ஜெயம் ரவியுடன் தனியாக கலந்துரையாட வேண்டும் என எதிர்பார்க்கிறேன்.

பொது விவாதங்களில் ஈடுபடமாட்டேன்

நான் திருமணத்தின் புனிதத்தை ஆழமாக மதிக்கிறேன். யாருடைய நற்பெயரையும் புண்படுத்தும் பொது விவாதங்களில் நான் ஈடுபட மாட்டேன். எனது கவனம் எங்கள் குடும்பத்தின் நல்வாழ்வின் மேல் உள்ளது. இந்த விவகாரத்தில் கடவுளின் ஆசிர்வாதத்தை வேண்டுகிறேன் எனக் கூறியுள்ளார்.

மேலும், தாழ்வான காரியங்களில் ஈடுபடுபவர்கள் முன் நாம் வளர்ந்து கொண்டே செல்கிறோம் எனவும் கருத்து தெரிவித்துள்ளார்.

விவாகரத்து பற்றி தெரியாது

முன்னதாக, இவர்களின் திருமண வாழ்க்கை முடிவுக்கு வருவதாகவும், மனைவி ஆர்த்தியிடம் விவாகரத்து கோருவதாகவும் ஜெயம் ரவி அறிவித்திருந்த நிலையில், தன்னுடைய ஒப்புதல் இல்லாமலே இந்த முடிவை ஜெயம் ரவி அறிவித்துள்ளார். விவாகரத்து குறித்து தனக்கு எதுவும் தெரியாது. அவருடன் நான் ஆலோசிக்க வேண்டும். இப்போது எனது குழந்தைகள் தான் எனக்கு மிகவும் முக்கியம் எனக் கூறியிருந்தார் ஆர்த்தி.

ஜெயம் ரவியின் விளக்கம்

இதற்கிடையில், பாடகி கெனிஷாவை ஜெயம் ரவி காதலிக்கிறார். இதனால் தான் ஆர்த்தியை விவாகரத்து செய்கிறார் என பலரும் கூறி வந்தனர். இதனை முற்றிலுமாக மறுத்த ஜெயம் ரவி, தனது சுயமரியாதை முற்றிலுமாக பறிக்கப்பட்டது. எனது சோசியல் மீடியா கணக்குகள், வங்கிக் கணக்குகள், உடைமைகள் என நான் அனைத்திற்கும் எனது மனைவி மற்றும் அவரது தாயாரிடம் கணக்கு காட்ட வேண்டியுள்ளது.

அவர்களின் விருப்பத்திற்காக படம் நடித்தேன். ஆனால், வெற்றி அடைந்த படங்களையும் நஷ்டமானதாக கூறி தன்னை மனதளவில் துன்புறத்தி வருகின்றனர். இதற்கு முன் 2 முறை மனைவிக்கு விவாகரத்து நோட்டிஸ் அனுப்பியுள்ளேன் என பல திடுக்கிடும் தகவல்களை ஜெயம்ரவி முன்வைத்தார்.

அந்த சமயத்தில் மௌனம் காத்து வந்த ஆர்த்தி, தற்போது அந்தக் குற்றச்சாட்டுகள் குறித்து வெளிப்படையாக பதில் ஏதும் கூறாமல், அறிக்கை வெளியிட்டுள்ளார்.

Whats_app_banner

டாபிக்ஸ்

தமிழ்த் திரைப்பட செய்திகள், டிவி தொடர்கள், OTT செய்திகள், திரைப்பட விமர்சனங்கள், பாலிவுட், ஹாலிவுட் படங்கள் தொடர்பான சமீபத்திய அப்டேட்களை, பொழுதுபோக்கு பிரிவில் பார்க்கலாம்.