தமிழ் செய்திகள்  /  பொழுதுபோக்கு  /  ‘வேதாளத்தை நம்பி பாதாளத்தில் போன சிரஞ்சீவி’ படுதோல்வியால் சம்பளத்தை ரிட்டன் செய்தார்!

‘வேதாளத்தை நம்பி பாதாளத்தில் போன சிரஞ்சீவி’ படுதோல்வியால் சம்பளத்தை ரிட்டன் செய்தார்!

Stalin Navaneethakrishnan HT Tamil
Aug 19, 2023 12:33 PM IST

தயாரிப்பாளருக்கு கடுமையான நஷ்டம் ஏற்பட்டது. இதனால், தாங்கிய சம்பளத்தை மீண்டும் தயாரிப்பாளரிடம் திருப்பிக்கொடுத்துள்ளார் நடிகர் சிரஞ்சீவி!

அஜித் நடித்த வேதாளம் படத்தின் தெலுங்கு ரீமேக்கில் சிரஞ்சீவி
அஜித் நடித்த வேதாளம் படத்தின் தெலுங்கு ரீமேக்கில் சிரஞ்சீவி

ட்ரெண்டிங் செய்திகள்

தமிழ் வேதாளம் படத்தில் சில காட்சிகள், ‘க்ரின்ஞ்’ ஆக இருப்பதாக கூறி, படத்தின் காட்சிகள் சிலவற்றை இயக்குனர் மாற்றினார். ஆனால், அவர் மாற்றிய காட்சிகள் அனைத்துமே, தமிழில் வேதாளம் ஹிட் ஆவதற்கு காரணமாக இருந்த காட்சிகள்.

எந்த காட்சிகள் ஹிட் அடித்ததோ, அதை மாற்றிவிட்டு, அதற்கு பதிலாக அதைவிட ‘க்ரின்ஞ்’ ஆன காட்சிகளை வைத்தார் இயக்குனர். பொதுவாகவே, வேதாளம் படம் வெளியான போது, பெரும்பாலான காட்சிகள் தெலுங்கு பாணியில் இருப்பதாக கூறப்பட்டது. இயக்குனர் சிவா படங்களில் இந்த விமர்சனம் வழக்கமாக வருவது தான். 

ஆனால், அந்த காட்சிகளை ஏதோ, தமிழ் சினிமாவின் காட்சிகள் என்று நினைத்து, தெலுங்கு இயக்குனர் மாற்றியதால், ஒட்டுமொத்தமாக போலா சங்கர், போகாத சங்கரானது. 

அதே நேரத்தில் தமிழில் வெளியான ஜெயிலர், இந்தியில் வெளியான காதர் 2, ஓ.எம்.ஜி2 படங்கள் சூறாவளி வசூலில் இறங்க, போலா சங்கர், ‘ஃநகி போலோ’ வசூல் ஆனது. ரூ.101 கோடி பட்ஜெட்டில் உருவான போலா சங்கர் திரைப்படம், முதல் 7 நாட்களில் வெறும் 34 கோடி ரூபாய் தான் வசூல் செய்தது. 

இது அந்த படத்துடன் வெளியான மற்ற படங்களின் வசூலுடன் ஒப்பிடும் போது, மலைக்கும் மடுவுக்குமான வித்தியாசம் ஆகும். தியேட்டரில் காத்தாடும் நிலைக்கு போலா சங்கர் போனதால், பாக்ஸ் ஆபிஸில் தோல்வி படம் என நேற்று அறிவிக்கப்பட்டது. 

இதைத் தொடர்ந்து தயாரிப்பாளருக்கு கடுமையான நஷ்டம் ஏற்பட்டது. இதனால், தாங்கிய சம்பளத்தை மீண்டும் தயாரிப்பாளரிடம் திருப்பிக்கொடுத்துள்ளார் நடிகர் சிரஞ்சீவி. ஒருபுறம் படம் ஓடவில்லை என்கிற வருத்தம் இருந்தாலும், தன்னால் தயாரிப்பாளர் பாதிக்கப்பட கூடாது என்று, பணத்தை திருப்பிக் கொடுத்த சிரஞ்சீவியின் செயல், பாராட்டக் கூடியது. 

சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடலாம். லிங்க்குகள் கீழே கொடுக்கப்பட்டுள்ளன:

https://twitter.com/httamilnews

https://www.facebook.com/HTTamilNews

https://www.youtube.com/@httamil

Google News: https://bit.ly/3onGqm9

தமிழ்நாடு, தேசம் மற்றும் உலகம், பொழுதுபோக்கு, விளையாட்டு, லைஃப்ஸ்டைல், ஜோதிடம், புகைப்பட கேலரி, வேலைவாய்ப்பு, சமீபத்திய செய்திகள் என அனைத்தையும் இந்துஸ்தான் டைம்ஸ் தமிழ் இணையதளத்தில் உடனுக்குடன் தெரிந்து கொள்ளலாம்.

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

IPL_Entry_Point

டாபிக்ஸ்