Aavesham On OTT: ரங்கா வருகிறான்.. ஓடிடியில் வரும் ஃபகத்தின் ஆவேசம்.. எங்கே.. எப்போது?
கடந்த 2016ம் ஆண்டு வெளியான புலி முருகன், 2019ம் ஆண்டு வெளியான லூசிபர், கடந்த ஆண்டு வெளியான 2018, இந்த ஆண்டு வெளியான மஞ்சும்மல் பாய்ஸ், பிரேமலு ஆகிய திரைப்படங்கள் மலையாளத்தில் இருந்து வெளியாகி100 கோடியை தாண்டிய திரைப்படங்கள் என்பது குறிப்பிடத்தக்கது.
மலையாள நடிகர் ஃபஹத் பாசில் நடிப்பில், ஜித்து மாதவன் இயக்கத்தில் கடந்த ஏப்ரல் 11ம் தேதி வெளியான திரைப்படம் ஆவேசம். மக்களிடம் ஏகோபித்த வரவேற்பை பெற்றிருக்கும் இந்தப்படம், வசூலில் 100 கோடியை தாண்டி இருக்கிறது.
இந்த நிலையில், இந்தப்படம் எப்போது, எந்த ஓடிடியில் வரும் என்பது தொடர்பான தகவல் கிடைத்திருக்கிறது. அதன் படி, ஆவேசம் திரைப்படம் வருகிற மே 9 அன்று, அமேசான் பிரைம் வீடியோவில் ஒளிப்பரப்பப்பட இருப்பதாக தெரியவந்திருக்கிறது. அங்கு தமிழ், தெலுங்கு, கன்னடம், ஹிந்தி ஆகிய மொழிகளில் படத்தை பார்க்க முடியும்.
என்ன மாதிரியான கதை:
ரங்கா கதாபாத்திரத்தில் நடிக்கும் ஃபஹத் பாசில் சக நடிகர்களுடன் இணைந்து, கேங்கஸ்டர் காமெடி ஜானரில் வெளுத்து வாங்கி இருக்கிறார்.
இயக்குநர் ஜித்து மாதவனின் முந்தைய படத்தைப் போலவே, ஆவேசம் பெங்களூரில் அமைக்கப்பட்டு கல்லூரி மாணவர்களின் குழுவைச் சுற்றி வருகிறது.
மூன்று புலம் பெயர்ந்த மலையாளி கல்லூரி மாணவர்கள் - பீபி (மிதுன்), அஜு (ஹிப்ஸ்டர்) மற்றும் சாந்தன் (ரோஷன் ஷானவாஸ்) - ராகிங் செய்வதைத் தடுக்க முயற்சி செய்கிறார்கள்.
அந்த முயற்சி தோல்வி அடைகிறது. அது மட்டுமில்லாமல் அவர்கள் கடத்தப்பட்டு தாக்கப்படுகிறார்கள். இதனையடுத்து அவர்கள் பழிவாங்க விரும்புகிறார்கள். அதன் பின்னர் என்ன ஆனது என்பது கதையாக விரிகிறது.
மீண்டும் தன்னுடைய திறமையை நிரூபித்த ஜித்து மாதவன்
கேங்ஸ்டர் நகைச்சுவை காட்சிகள் வாயிலாக மீண்டும் தன்னுடைய திறமையை நிரூபித்து இருக்கிறார் இயக்குநர் ஜித்து மாதவன்
கல்லூரி கதை சினிமாவில் அடிக்கடி பார்க்கப்படும் கதை என்றாலும், அதை ஒரு மாஸ் மசாலா காமிக்காக மாற்றுவதில், ரங்காவின் கதாபாத்திரம் முக்கியமானதாக அமைந்து இருக்கிறது. வசனங்கள் படத்திற்கு நிறைய நகைச்சுவையை சேர்த்து இருக்கின்றன.
அவர் அதிக மாஸ் மசாலா படங்களில் நடிக்கவில்லை. ஃபகத்தின் மற்றொரு பரிணாமம் அனைவருக்கும் பிடித்திருந்தது!
ரங்காவாக ஃபஹத் பாசிலை நடிக்க வைத்தது புத்திசாலித்தனமாக இருந்தது. ஏனெனில் அவர் அதிக மாஸ் மசாலா படங்களில் நடிக்கவில்லை. ஆனால் இந்தப்படத்தில் அவர் சந்தேகத்திற்கு இடமின்றி மாஸ் கிளப்பி இருக்கிறார். படத்தை சிரமமின்றி தனது தோள்களில் சுமக்கிறார்.
எடிட்டிங் இன்னும் சிறப்பாக இருந்திருக்கலாம்.
அவர் வெளிப்படுத்தும் நடிப்பில், அவரது நகைச்சுவை உணர்வு சரியாக வெளிப்படுகிறது. இசையமைப்பாளர் சுஷின் ஷியாமின் பாடல்கள் மிகவும் இளைஞர்களை ஈர்க்கும் விதமாக அமைந்து இருக்கிறது. எடிட்டிங் இன்னும் சிறப்பாக இருந்திருக்கலாம்.
முன்னதாக, கடந்த 2016ம் ஆண்டு வெளியான புலி முருகன், 2019ம் ஆண்டு வெளியான லூசிபர், கடந்த ஆண்டு வெளியான 2018, இந்த ஆண்டு வெளியான மஞ்சும்மல் பாய்ஸ், பிரேமலு ஆகிய திரைப்படங்கள் மலையாளத்தில் இருந்து வெளியாகி100 கோடியை தாண்டிய திரைப்படங்கள் என்பது குறிப்பிடத்தக்கது.
தமிழ்நாடு, தேசம் மற்றும் உலகம், பொழுதுபோக்கு, விளையாட்டு, லைஃப்ஸ்டைல், ஜோதிடம், புகைப்பட கேலரி, வேலைவாய்ப்பு, சமீபத்திய செய்திகள் என அனைத்தையும் இந்துஸ்தான் டைம்ஸ் தமிழ் இணையதளத்தில் உடனுக்குடன் தெரிந்து கொள்ளலாம்.
சமூக வலைத்தளங்களில் எங்களை பின் தொடலாம். லிங்க்குகள் கீழே கொடுக்கப்பட்டு உள்ளன:

டாபிக்ஸ்