தமிழ் செய்திகள்  /  பொழுதுபோக்கு  /  33 Years Of Durga : இரட்டை வேடத்தில் பேபி ஷாம்லி! ஹிட்டான பாப்பா பாடும் பாட்டு பாடல்! நினைவில் என்றும் துர்கா!

33 Years of Durga : இரட்டை வேடத்தில் பேபி ஷாம்லி! ஹிட்டான பாப்பா பாடும் பாட்டு பாடல்! நினைவில் என்றும் துர்கா!

Priyadarshini R HT Tamil
Aug 10, 2023 05:00 AM IST

Durga : சங்கர் – கணேஷ் இசையில் பாப்பா பாடும் பாட்டு, ஆடி வரும் பாடி வரும், மாரி முத்து மாரி ஆகிய பாடல்கள் இன்றும் நினைவில் நிற்பவை. குறிப்பாக பாப்பா பாடும் பாடல் 80ஸ் கிட்ஸின் மனதில் பதிந்த பாடல். இந்தம் 1990ம் ஆண்டு ஆகஸ்ட் 10ம் தேதி வெளியானது. பேபி ஷாம்லிக்கு மறக்க முடியாத புகழை சேர்த்தபடம்.

துர்கா திரைப்படம் வெளியாக 33 ஆண்டுகள்
துர்கா திரைப்படம் வெளியாக 33 ஆண்டுகள்

ட்ரெண்டிங் செய்திகள்

படத்தில் நிழல்கள் ரவி, கனகா, கிட்டி, சத்யபிரியா, வாகை சந்திரசேகர், செந்தில் மற்றும் வெண்ணிற ஆடை மூர்த்தி உள்ளிட்டோர் நடித்திருப்பார்கள். இந்தப்படம் பயங்கர ஹிட்டானது. இந்தப்படம் தெலுங்கில் லட்சுமி துர்கா என்ற பெயரிலும், தேவி அவுர் துர்கா என்ற பெயரில் ஹிந்தியிலும் வெளியானது. கன்னடத்தில் பைரவி என்ற பெயரில் வெளியானது.

இந்த படத்தின் கதை, துர்கா, பணக்கார தம்பதியின் ஒரே மகள், அவரது தந்தை இறந்துவிடுகிறார். அவர்களின் மாமா அந்தக்குழந்தையின் சொத்தை அபகரித்துக்கொள்ள ஆசைப்படுகிறார். இதனால் துர்காவையும் திட்டமிட்டு கொல்கிறார். துர்காவையும் கொலை செய்ய முயற்சி செய்கிறார். ஆனால் துர்கா தப்பித்துக்கொண்டே இருக்கிறார். அதற்கு ராமு என்ற குரங்கும், ராஜா என்ற நாயும் உதவுகின்றன.

இந்நிலையில் அவருக்கு முத்து என்ற நல்ல நண்பரும், கண்ணாம்மா என்ற பெண்ணும் கிடைக்கிறார்கள். கண்ணம்மாவும், முத்துவும் காதலிக்கிறார்கள். அவர்கள் துர்காவை காக்க முன்வருகிறார்கள். ஆனாலும், துர்காவின் மாமாவும் அவரை கொலை செய்ய முயன்றுகொண்டேயிருக்கிறார். அப்போது துர்காவின் சாயலில் இருக்கும் ஒரு குழந்தையை அந்த மாமா பார்க்கிறார். அவர் இரு குழந்தைகளையும் இடம் மாற்றுகிறார். சொத்தை அபகரிக்க அனைத்து முயற்சிகளும் செய்கிறார்.

இந்த சூழ்ச்சி வலையில் இருந்து துர்கா தப்பிக்கிறாரா, அவரது நண்பர்கள் ராஜா, ராமு, முத்து, கண்ணம்மா அனைவருக்கும் துர்காவை காப்பாற்றுவார்களா என்பதுதான் படத்தின் கிளைமேக்ஸ். சங்கர் – கணேஷ் இசையில் பாப்பா பாடும் பாட்டு, ஆடி வரும் பாடி வரும், மாரி முத்து மாரி ஆகிய பாடல்கள் இன்றும் நினைவில் நிற்பவை. குறிப்பாக பாப்பா பாடும் பாடல் 80ஸ் கிட்ஸின் மனதில் பதிந்த பாடல். இந்தம் 1990ம் ஆண்டு ஆகஸ்ட் 10ம் தேதி வெளியானது. பேபி ஷாம்லிக்கு மறக்க முடியாத புகழை சேர்த்தது இந்தப்படம்.

IPL_Entry_Point

டாபிக்ஸ்