Vijayakanth: ’கேப்டன் விஜயகாந்திற்கு பத்மபூஷன் விருது மறுப்பா?’ போட்டு உடைத்த பிரேமலதா விஜயகாந்த்!
”சென்னையில் எத்தனை பேர் ஓட்டு போட்டீர்கள் என்ற கேள்வியை நான் எழுப்புகிறேன். தமிழ்நாட்டிலேயே சென்னைதான் குறைவான வாக்குப்பதிவு நடந்து இருப்பது நமக்கு தலைகுனிவு”

சென்னை கோயம்பேட்டில் உள்ள தேமுதிக தலைமை அலுவலகத்தில் தண்ணீர் பந்தலை திறந்து வைத்த தேமுதிக பொதுச்செயலாளர் பிரேமலதா விஜயகாந்த், செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது பேசிய அவர், தேசிய முற்போக்கு திராவிடர் கழகம் சார்பில் ஆண்டு தோறும் தண்ணீர் பந்தல் திறப்பது வழக்கம். தேர்தல் நடத்தை விதிமுறைகள் இருந்ததால் அந்த பணியை செய்ய முடியவில்லை. வெயில் தொடர்ந்து அதிகரித்துக் கொண்டு இருப்பதால், மக்கள் கஷ்டத்தை போக்க வேண்டியது எங்களுடைய கடமை. அதனால் தேமுதிக சார்பில் தலைமை கழகத்தில் தண்ணீர் பந்தலை திறந்து உள்ளோம்.
கேள்வி:- பத்மபூஷன் விருது கிடைப்பது தள்ளிபோய் உள்ளதே?
போன வாரம் அழைப்பு வரவில்லை என்பது உங்கள் அனைவருக்கும் தெரியும். விருது வழங்கும் ஹால் அமைப்பு மிக சிறியது என்பதால், 3 அல்லது 4 பிரிவுகளாக விருதுகளை தருகிறார்கள். மூன்று நாட்களுக்கு முன் உள்துறை அமைச்சகத்தில் இருந்து அழைப்பு வந்தது. வரும் 9ஆம் தேதி கேப்டனுக்கு பத்மபூஷன் விருதை வழங்க உள்ளனர். என்னை 8ஆம் தேதி இரவே வர சொல்லி உள்ளனர்.
கேள்வி:-கோவை வெப்பம் காரணமாக பள்ளி திறப்பை தள்ளி வைக்க வேண்டும் என்ற கோரிக்கை உள்ளதே?
வழக்கமாக ஜூன் முதல் வாரத்தில் பள்ளி திறப்பது உள்ளது. வெயில் தாக்கம் அதிகமாக இருந்தால் ஒரு வாரகாலம் தள்ளி பள்ளிகளை திறக்க வேண்டும். குழந்தைகளை அரசு பாதுகாப்பது அவசியம்.