தமிழ் செய்திகள்  /  Elections  /  Minister Udhayanidhi Stalin's Campaign In Support Of Congress Candidate Sasikanth Senthil In Tiruvallur

Udhayanidhi: ‘மோடி தலையில் கொட்டு வையுங்கள்!’ சவுக்கு சங்கர் மைத்துனரை ஆதரித்து உதயநிதி ஸ்டாலின் பரப்புரை!

Kathiravan V HT Tamil
Mar 29, 2024 03:59 PM IST

”2021தேர்தலில் திமுக ஆட்சிக்கு வந்த பிறகு, இந்த மூன்று ஆண்டில் 460 கோடி பயணங்களை அரசு பேருந்துகளில் பெண்கள் மேற்கொண்டு உள்ளனர். இந்த திட்டம் தற்போது பக்கத்து மாநிலங்களிலும் செயல்படுத்தப்பட்டு வருகிறது”

உதயநிதி ஸ்டாலின் பரப்புரை
உதயநிதி ஸ்டாலின் பரப்புரை

ட்ரெண்டிங் செய்திகள்

நாடாளுமன்றத் தேர்தல் 2024

தமிழகம் மற்றும் புதுச்சேரியில் வரும் ஏப்ரல் 19ஆம் தேதி அன்று ஒரே கட்டமாக நாடாளுமன்றத் தேர்தல் நடைபெறுகிறது. இதற்கான வேட்புமனுத்தாக்கல் மார்ச் 20ஆம் தேதி தொடங்கி மார்ச் 27 ஆம் தேதி முடிவடைந்தது. மார்ச் 28ஆம் தேதி வேட்புமனுக்கள் மீதான பரிசீலனை நடைபெற்றது. வேட்புமனுக்களை திரும்பப் பெற மார்ச் 30ஆம் தேதி கடைசி நாள் என தெரிவிக்கப்பட்டுள்ளது. அன்று மாலையே இறுதி வேட்பாளர் பட்டியலை தேர்தல் ஆணையம் வெளியிட உள்ளது. தேர்தலில் பதிவான வாக்குகள் வரும் ஜூன் 4ஆம் தேதி எண்ணப்பட்டு அன்றே முடிவுகள் அறிவிக்கப்படுகின்றன.

உதயநிதி ஸ்டாலின் பரப்புரை 

திருவள்ளூர் மாவட்டம் ஆவடியில் பேசிய அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் கூறுகையில், ஒரு மணி உச்சி வெயிலையும் பொருட்படுத்தாமல் உக்கிரமான ஒன்றிய பாஜக அரசை வெளியேற்ற நீங்கள் தயாராகிவிட்டீர்கள். தமிழ்நாட்டில் திமுக கூட்டணி 40 தொகுதிகளிலும் வெற்றி பெறும். திருவள்ளூரில் நண்பர் சசிகாந்த் செந்தில் அமோக வெற்றி பெருவார். இங்கு கை சின்னத்தில் வாக்களித்து பல லட்சம் வாக்குகள் வித்தியாசத்தில் சசிகாந்த் செந்தில் அவர்களை நாடாளுமன்றத்திற்கு அனுப்ப முடிவு செய்துவிட்டீர்கள். 

வரும் ஏப்ரல் 19 ஆம் தேதி வாக்குசாவடிக்கு வாக்கு அளிக்க செல்லும் போது உங்கள் கண்ணில் கை சின்னமும், சசிகாந்த் செந்தில் பெயரும் மட்டும்தான் தெரிய வேண்டும். நீங்கள் அளிக்க உள்ள ஒவ்வொரு ஓட்டும் ஒன்றிய பிரதமர் நரேந்திர மோடி தலையில் கொட்டும் கொட்டு. 

சென்ற முறை நமது கூட்டணி வேட்பாளர் ஜெயக்குமாரை 3 லட்சத்து 57 ஆயிரம் வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற வைத்தீர்கள், ஆனால் இந்த முறை குறைந்தது 6 லட்சம் வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற செய்ய வேண்டும். அப்படி ஜெயிக்க வைத்தால் நான் மாதம் இரண்டு முறை திருவள்ளூர் தொகுதிக்கு வந்து உங்களோடு சேர்ந்து முதலமைச்சரிடம் இந்த நாடாளுமன்றத் தொகுதிக்கு தேவையானதை முடிந்த அளவுக்கு செய்து கொடுக்கிறேன். 

2021தேர்தலில் திமுக ஆட்சிக்கு வந்த பிறகு, இந்த மூன்று ஆண்டில் 460 கோடி பயணங்களை அரசு பேருந்துகளில் பெண்கள் மேற்கொண்டு உள்ளனர். இந்த திட்டம் தற்போது பக்கத்து மாநிலங்களிலும் செயல்படுத்தப்பட்டு வருகிறது. 

இனிமேல் திரு நரேந்திர மோடி அவர்களை பெயரை சொல்லி கூப்பிடாதீர்கள், இனிமேல் அவரை 29 பைசா என்றுதான் கூப்பிட வேண்டும். வரும் ஏப்ரல் 19ஆம் தேதிக்கு பிறகு அவர் செல்லா காசுதான், நாம் கட்டு வரி பணத்தில் மத்திய அரசு வெறும் 29 பைசாவை மட்டுதான் தருகிறார்கள். 

மத்திய அரசின் புதியக் கொள்கை அமல் ஆனால் 5ஆம் வகுப்புக்கும், 8ஆம் வகுப்புக்கும் பொதுத்தேர்வு கொண்டுவர திட்டமிட்டுள்ளனர். நீட் தேர்வு இந்தியா முழுவதும் வந்தாலும் கலைஞர், ஜெயலலிதா அம்மையார் இருந்த வரை நீட் தேர்வை தமிழ்நாட்டுக்குள் விடவே இல்லை. 

2017ஆம் ஆண்டு அனிதா என்ற குழந்தை 1200க்கு 1176 மதிப்பெண்களை எடுத்திருந்தது. ஆனால் நீட் தேர்வால் தற்கொலை செய்து கொண்டார் என உதயநிதி ஸ்டாலின் பேசினார்.

திருவள்ளூர் தொகுதியில் காங்கிரஸ் கட்சி சார்பில் போட்டியிடும் வேட்பாளர் சசிகாந்த் செந்தில், மூத்த பத்திரிக்கையாளர் சவுக்கு சங்கரின் மைத்துனர் என்பது குறிப்பிடத்தக்கது. 

WhatsApp channel