’சசிகாந்த் செந்தில் முதல் பிரவீன் சக்ரவர்த்தி வரை!’ காங்கிரஸ் உத்தேச வேட்பாளர் பட்டியல்

By Kathiravan V
Mar 19, 2024

Hindustan Times
Tamil

திமுக கூட்டணியில் காங்கிரஸ் கட்சிக்கு 10 தொகுதிகள் ஒதுக்கீடு செய்யப்பட்ட நிலையில், தொகுதி விவரங்கள் குறித்த ஒப்பந்தம் நேற்று கையெழுத்தாகி உள்ள நிலையில் காங்கிரஸ் கட்சி சார்பில் போட்டியிடும் வேட்பாளர்கள் யார் என்ற எதிர்பார்ப்பு எழுந்துள்ளது.

 திமுக தலைமையகமான அண்ணா அறிவாலயத்தில் திமுக தலைவரும் முதலமைச்சருமான மு.க.ஸ்டாலின் முன்னிலையில் காங்கிரஸ் கமிட்டி தலைவர் செல்வப்பெருந்தகை, காங்கிரஸ் மேலிட பொறுப்பாளர் அஜோய் குமார், காங்கிரஸ் மூத்த தலைவர் அஜோய் குமார் உள்ளிட்டோர் தொகுதி பங்கீட்டு ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டனர்.  இதில் காங்கிரஸ் கட்சிக்கு புதுச்சேரி உட்பட 10 தொகுதிகள் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. 

திருவள்ளூர்- சசிகாந்த் செந்தில் அல்லது விஸ்வநாதன்

கிருஷ்ணகிரி- செல்லக்குமார்

கடலூர் - கே.எஸ்.அழகிரி

மயிலாடுதுறை - பிரவீன் சக்ரவர்த்தி அல்லது மணிசங்கர் ஐயர் மூத்த மகள் சுரண்யா ஐயர்

சிவகங்கை - கார்த்தி சிதம்பரம்

விருதுநகர் - மாணிக்கம் தாகூர்

கன்னியாகுமரி - விஜய் வசந்த்

கரூர் - ஜோதிமணி

புதுச்சேரி - வைத்திலிங்கம்

திருநெல்வேலி - பீட்டர் அல்போன்ஸ் அல்லது திருநாவுக்கரசர்

கொசுத் தொல்லையைப் போக்க உதவும் டிப்ஸ்!