தமிழ் செய்திகள்  /  தேசம் மற்றும் உலகம்  /  Ht Elections Story: ’நாடாளுமன்றத் தேர்தல் 1952’ முதல் பிரதமர் ஆன நேரு! 3 இடங்களை வென்ற பாஜக!

HT Elections Story: ’நாடாளுமன்றத் தேர்தல் 1952’ முதல் பிரதமர் ஆன நேரு! 3 இடங்களை வென்ற பாஜக!

Kathiravan V HT Tamil
Jan 29, 2024 05:15 AM IST

”Parliamentary Elections 1952: இன்றைய ஆளும் பாஜகவின் தாய் அமைப்பான ஷியாம பிரசாத் முகர்ஜியால் தோற்றுவிக்கப்பட்ட பாரதீய ஜனசங்கம் 3 இடங்களில் வென்று இருந்தது”

இந்திய நாடாளுமன்றத் தேர்தல் வரலாறு 1952
இந்திய நாடாளுமன்றத் தேர்தல் வரலாறு 1952

ட்ரெண்டிங் செய்திகள்

நாடு விடுதலை அடைந்த பிறகு 1950 ஜனவரி 26ஆம் ஆண்டு இந்தியா தன்னை குடியரசு நாடாக அறிவித்துக் கொண்டது. முதல்  முறையாக சாதி, மதம், இனம், மொழி, பாலினம், சமூக, உள்ளிட்ட எந்த வித பேதமும் இன்றி 21 வயது நிரம்பிய இந்தியர்கள் அனைவருக்கும் வாக்குரிமையை இந்தியக் குடியரசு வழங்கியது. 

1952ஆம் ஆண்டு ஜனவரி 2ஆம் தேதி முதல் ஜனவரி 25 ஆம் தேதி வரை 17 நாட்களுக்கு வாக்குப்பதிவு நடைபெற்றது. முதல் மக்களவைத் தேர்தலில் மொத்தமிருந்த 401 தொகுதிகளில் இருந்து 489 உறுப்பினர்கள் தேர்வானார்கள். அப்போது இரட்டை தொகுதி முறை நடைமுறையில் இருந்ததால் 314 தொகுதிகளில் இருந்து தலா ஒரு எம்.பியும், 86 ட்க்ஹொகுதிகளில் இருந்து தலா இரண்டு எம்.பிக்களும், மேற்கு வங்கத்தில் ஒரு தொகுதியில் இருந்து மூன்று எம்.பிக்களும் தேர்வாகினர். 

இரண்டு அல்லது மூன்று எம்.பிக்கள் தேர்வு செய்யப்பட்ட தொகுதிகளில் ஒருவர் பொது உறுப்பினராகவும், மற்றவர்கள் பட்டியல் மற்றும் பழங்குடியினர் பிரிவை சார்ந்தவர்களாகவோ இருப்பர். 

முதல் தேர்தலில் 17.32 கோடி மக்கள் வாக்களித்தனர். இது 44.87 வாக்கு விகிதம் ஆகும். இந்த தேர்தலில் 14 தேசியக் கட்சிகள் உட்பட 53 கட்ச்கள் போட்டியிட்டன. 

இதில் 44.9 சதவீத வாக்குகள் உடன் 364 தொகுதிகளை கைப்பற்ற இந்திய தேசிய காங்கிரஸ் ஆட்சியை பிடித்தது. 49 இடங்களில் போட்டியிட்ட இந்திய கம்யூனிஸ்ட் கட்சி 16 இடங்களில் வெற்றி பெற்றது. இருப்பினும் எதிர்க்கட்சியாக அமர்வதற்கு தேவையான எண்ணிக்கையிலான தொகுதிகளை அக்கட்சி பெற்றிருக்கவில்லை. 

சோசியலிட் கட்சி 12 இடங்களையும், கிசான் மஸ்தூர் பிரஜா கட்சி 9 இடங்களையும், மக்கள் ஜனநாயக முன்னணி, ஹைதராபாத் கட்சி 7 இடங்களையும், கனதந்தரா பரிட்சத் கட்சி 6 இடங்களையும், சிரோன் மணி அகாலிதலம் 4 இடங்களையும், தமிழ்நாடு உழவர் உழைப்பாளர் கட்சி 4 இடங்களையும், காமன் வீல் கட்சி 3 இடங்களையும் பெற்றிருந்தது.

இன்றைய ஆளும் பாஜகவின் தாய் அமைப்பான ஷியாம பிரசாத் முகர்ஜியால் தோற்றுவிக்கப்பட்ட பாரதீய ஜனசங்கம் 3 இடங்களில் வென்று இருந்தது.  இந்து மகாசபா 3 இடங்களில் வென்று இருந்தது. இந்தியாவின் முதல் பிரதமராக ஜவஹர்லால் நேரு பொறுப்பேற்றார். 

IPL_Entry_Point

டாபிக்ஸ்