தமிழ் செய்திகள்  /  Elections  /  Anbumani Ramadoss Campaign In Support Of Pmk Candidate Thangar Bachchan In Cuddalore Parliamentary Constituency

Anbumani Ramadoss: ’ஒரிஜினல் மாப்பிள்ளை தங்கர் பச்சான்தான்’ கடலூரில் சொந்த மச்சானை கலாய்த்த அன்புமணி!

Kathiravan V HT Tamil
Apr 02, 2024 09:35 PM IST

”உண்மையான மாப்பிள்ளை யாரு? நம்ம தங்கர் பச்சான்தான் தொகுதியின் உண்மையான மாப்பிள்ளை. விஷ்ணு பிரசாத் திருமண மண்டபம் மாறி வந்து விட்டார்”

கடலூரில் அன்புமணி ராமதாஸ் பரப்புரை!
கடலூரில் அன்புமணி ராமதாஸ் பரப்புரை!

ட்ரெண்டிங் செய்திகள்

யாராக இருந்தாலும் தேர்தல் பிரச்சாரத்தில் நாகரீகமாக பேச வேண்டும். என் தம்பிகளை நாங்கள் நல் வழியில் வழி நடத்திக் கொண்டிருக்கிறோம். என் தம்பிகள் பாசக்காரர்கள், அதே சமயம் கொஞ்சம் கோவக்காரர்கள். வஜ்ரா வாகனத்தையே பின்னோக்கி செல்ல வைத்தவர்கள்.

மீண்டும் சொல்கிறேன் தங்கர் பச்சான் அவர்களை தேர்வு செய்யுங்கள். அவரது மனதில் ஆழமான சமூக நீதி என்ற கருத்து இருக்கிறது. வேறு எந்த வேட்பாளர்களுக்கும் இந்த கருத்து இல்லை. சமூக நீதி என்றால் என்னவென்று தெரியாது.

அதிமுக எங்களுக்கு பாமக துரோகம் செய்துவிட்டதாக கூறி வருகிறது. நாங்கள் பத்தரை சதவீதம் கொடுத்தும், எங்களை விட்டு அவர்கள் வெளியேறி விட்டார்கள் என்று கூறுகிறார்கள். அவர்களுக்கு நாங்கள் கையெழுத்து போட்டு கட்சியை அடமானம் எழுதிக் கொடுத்து விட்டோமா? கட்சியை தொடங்கியது பாட்டாளி மக்கள் கட்சி ஆள வேண்டும் என்றுதான். திமுக, அதிமுக ஆள வேண்டும் என நாங்கள் கட்சியை தொடங்கவில்லை. 

ஒவ்வொரு முறையும் நாங்கள் உங்களை தோளில் தூக்கிக்கொண்டு முதலமைச்சராக அமர்த்திவிட்டு, ஐயா பத்திரை போடுங்க ஐயா, எங்களுக்கு ஜாதிவாரி கணக்கெடுப்பு நடத்துங்க ஐயா, எங்களுக்கு மதுவை ஒழியுங்க, எங்களுக்கு தடுப்பணை கட்டுங்க ஐயா, விவசாயிகளுக்கு ஏதாவது செய்யுங்கள் ஐயா, நெல்லுக்கு கொஞ்சம் விலை கொடுங்க ஐயா, கரும்புக்கு கொஞ்சம் விலை குடுங்க இப்படின்னு கேட்டுட்டே இருப்போமா? 

போதும் அதிமுக திமுக போதும் என இந்த முடிவு எடுத்திருக்கிறோம். ஒரு மாற்றம் வர வேண்டும். அந்த மாற்றம் இந்த கடலூரில் தொடங்கட்டும். என்னுடைய அன்பு அண்ணன் தங்கர்பச்சான் மூலமாக தொடங்கட்டும்.

குறிப்பாக கடலூர் நகரத்தில் வாழும் மக்களை எந்த தொந்தரவும் செய்ய மாட்டார். இவர் நேர்மையானவர் யாருக்கும் பிரச்சினைகளை கொடுக்கமாட்டார். மற்றவர்கள் எல்லாம் அப்படி இல்லை.

அதிமுக தொண்டர்கள் உங்கள் வாக்கை வீணாக்காதீர், உங்கள் வாக்குகளை எங்களுக்கு போடுங்கள். உங்களுக்கு பிரதமர் வேட்பாளர் இல்லை, நீங்கள் வாக்களிப்பதால், உங்கள் எடப்பாடி பழனிசாமி முதலமைச்சராக போவதுமில்லை. தேசிய கட்சி எதுவும் இல்லை. அதனால உங்களுடைய எதிரியாக திமுக இருக்கிறது. திமுகவை முடிக்க வேண்டும் என நாங்கள் இருக்கின்றோம். அதனாலதான் மீண்டும் நான் கேட்கிறேன், அதிமுக நிர்வாகிகள் தொண்டர்கள் அனைவரும் நம்முடைய தங்கர் பச்சன் அவர்களை பொது வேட்பாளராக கருதி உங்கள் வாக்குகளை மாம்பழம் சின்னத்தில் செலுத்த வேண்டும் என அன்புமணி பரப்புரை செய்தார். 

WhatsApp channel