Accident: கடலூர் அருகே பள்ளி வேன் கவிழ்ந்த விபத்து -10 பேர் படுகாயம்
ஓட்டுநரின் அலட்சியத்தால் விபத்து ஏற்பட்டுள்ளதாக பெற்றோர் மற்றும் அப்பகுதி மக்கள் குற்றம் சாட்டி உள்ளனர்.
கடலூர் மாவட்டம் ஆலப்பாக்கம் அருகே பள்ளி வேன் கால்வாயில் கவிழ்ந்து விபத்துக்குள்ளானதில் 10 பேர் படுகாயம் அடைந்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.
கடலூர் மாவட்டம் ஆலப்பாக்கம் அருகே பெரிய பட்டு பகுதியில் பரணி மெட்ரிக்குலேசன் மேல்நிலைப்பள்ளி இயங்கி வருகிறது. இந்த பள்ளியில் ஆலப்பாக்கம் சுற்று வட்டாரப்பகுதியில் உள்ள மாணவ மாணவியர் படித்து வருகின்றனர். இந்நிலையில் இன்று தனியார் பள்ளி வேன் பெத்தாங்குப்பத்தில் ரயில்வே கிராசிங்கை கடக்க நின்று கொண்டிருந்த போது ஓட்டுநருக்கு போன் வந்ததாக கூறப்படுகிறது.
போன் பேச கீழே இறங்கி ஓட்டுநர் நின்றபோது பள்ளி குழந்தைகள் கியர் பாக்சில் கை வைத்ததால் வேன் பின் பக்கம் சென்று தண்டவாளம் அருகே உள்ள வாய்க்காலில் கவிழ்ந்து விபத்துக்குள்ளானதாக கூறப்படுகிறது. அப்போது வேனின் கண்ணாடிகள் மூடப்பட்டிருந்ததால் அப்பகுதி மக்கள் கண்ணாடிகளை உடைத்து சிறுமிகளை மீட்டுள்ளனர். இதையடுத்து காயம் அடைந்தவர்கள் கடலூர் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
ஓட்டுநரின் அலட்சியத்தால் விபத்து ஏற்பட்டுள்ளதாக பெற்றோர் மற்றும் அப்பகுதி மக்கள் குற்றம் சாட்டி உள்ளனர்.
சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடரலாம். லிங்க்குகள் கீழே கொடுக்கப்பட்டுள்ளன:
Google News: https://bit.ly/3onGqm9
தமிழ்நாடு, தேசம் மற்றும் உலகம், பொழுதுபோக்கு, விளையாட்டு, லைஃப்ஸ்டைல், ஜோதிடம், ஆன்மிகம், புகைப்பட கேலரி, வெப் ஸ்டோரி, வேலைவாய்ப்பு தகவல்கள், சமீபத்திய செய்திகள் என அனைத்தையும் இந்துஸ்தான் டைம்ஸ் தமிழ் இணையதளத்தில் உடனுக்குடன் தெரிந்து கொள்ளலாம்.
டாபிக்ஸ்