தமிழ் செய்திகள்  /  மட்டைப்பந்து  /  Rinku Singh Catch: பவுண்டரி எல்லையில் பிரமாதமாய் கேட்ச் பிடித்த ரிங்கு சிங்.. உதவிய ராகுல் திரிபாதி

Rinku Singh Catch: பவுண்டரி எல்லையில் பிரமாதமாய் கேட்ச் பிடித்த ரிங்கு சிங்.. உதவிய ராகுல் திரிபாதி

Manigandan K T HT Tamil
Oct 03, 2023 11:09 AM IST

IND vs NEP: ரவி பிஷ்ணோய் வீசிய பந்தை தூக்கி அடிக்க முயன்ற குஷல் மல்லாவின் கேட்ச்சை ரிங்கு சிங் சிறப்பாக பிடித்தார்.

சூப்பராக கேட்ச் பிடித்த ரிங்கு சிங்
சூப்பராக கேட்ச் பிடித்த ரிங்கு சிங் (@mufaddal_vohra)

ட்ரெண்டிங் செய்திகள்

இந்த ஆட்டத்தில் இந்திய அணியின் பவுலிங் மற்றும் ஃபீல்டிங் சிறப்பாக இருந்தது.

ரவி பிஷ்ணோய் வீசிய பந்தை தூக்கி அடிக்க முயன்ற குஷல் மல்லாவின் கேட்ச்சை ரிங்கு சிங் சிறப்பாக பிடித்தார்.

குறிப்பாக இந்த கேட்ச் ராகுல் திரிபாதி கைக்கு சென்றது. பவுண்டரி எல்லையைத் தாண்டி சென்றது. அதை சிறப்பாக ராகுல் திரிபாதி பிடித்து தூக்கி போட்டார். அதை அவருக்கு பின்னால் ஓடிவந்த ரிங்கு சிங் பிடித்தார்.

நேபாளத்துக்கு எதிரான முதலாவது காலிறுதி ஆட்டத்தில் இந்திய அணி 20 ஓவர்களில் 202 ரன்களை குவித்தது. 203 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் களம் புகுந்தது நேபாளம்.

தொடக்கத்தில் அதிரடி காட்டினாலும், இந்திய அணி சிறப்பாக பந்துவீசி அடுத்தடுத்து விக்கெட்டுகளை தூக்கியது.

சென்னையைச் சேர்ந்த சாய் கிஷோருக்கு முதல் விக்கெட் கிடைத்தது.

ரவி பிஷ்ணோய், ஆவேஷ் கான், அர்ஷ்தீப் சிங் ஆகியோரும் விக்கெட்டுகளை சாய்த்தனர்.

இவ்வாறாக அந்த அணி மளமளவென விக்கெட்டுகளை பறிகொடுத்தது.

சரியாக காலை 6.30 மணிக்கு ஹாங்ஜோவில் போட்டித் தொடங்கியது. யஷஸ்வி ஜெய்ஸ்வால் அதிரடியாக விளையாடி 3 சிக்ஸர்களை விளாசினார். ருதுராஜும் அவருக்கு தோள் கொடுத்து வருகிறார். ஜெய்ஸ்வால் அதிரடியாக விளையாடி அரை சதம் விளாசினார். இது அவருக்கு முதல் டி20 சதம் ஆகும்.

ருதுராஜ் கெய்ஸ்வாட் 25 ரன்கள் எடுத்திருந்தபோது ஆட்டமிழந்தார். கேப்டன் ருதுராஜ் கெய்க்வாட் ஆட்டமிழந்ததைத் தொடர்ந்து களம் புகுந்த திலக் வர்மா 2 ரன்களில் நடையைக் கட்டினார். அதைத் தொடர்ந்து வந்த ஜிதேஷ் சர்மா 5 ரன்களில் இருந்தபோது ஆட்டமிழந்தார்.

சதம் விளாசிய ஜெய்ஸ்வாலும் ஆட்டமிழந்தார். திபேந்திர சிங் பந்துவீச்சில் கேட்ச் ஆனார் ஜெய்ஸ்வால். ரிங்கு சிங், ஷிவம் துபே அதிரடி காட்டினர்.

ரிங்கு சிங் 37 ரன்களும், ஷிவம் துபே 25 ரன்களும் விளாசினர். 20 ஓவர்களில் இந்திய அணி 4 விக்கெட்டுகள் இழப்புக்கு 202 ரன்கள் எடுத்தது.

நேபாளம் 120 பந்துகளில் 203 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் விளையாடியது.

முன்னதாக, இந்த ஆட்டத்தில் யஷஸ்வி ஜெய்ஸ்வால் சதம் விளாசினார். மிக இளம் வயதில் டி20 கிரிக்கெட்டில் சதம் விளாசிய முதல் இந்திய வீரர் யஷஸ்வி தான்.

இதுவே அவருக்கு முதல் டி20 சதம் ஆகும். மேலும், 49 பந்துகளில் சதம் விளாசி அதிரடி காண்பித்தார் யஷஸ்வி ஜெய்ஸ்வால்.

நேபாளத்திற்கு எதிரான கடைசி ஓவரில் 6, 6, 4, 1, 6, கடினமான ஆடுகளத்தில் நம்பமுடியாத பேட்டிங்கை வெளிப்படுத்தினார் ரிங்கு சிங். ரிங்கு சிங் 15 பந்துகளில் 37* ரன்கள் குவித்தார்.

IPL_Entry_Point