தமிழ் செய்திகள்  /  மட்டைப்பந்து  /  Srh Vs Lsg Innings Break: துல்லியமாக பவுலிங் செய்த புவனேஷ்வர் குமார்! லக்னோவை கரை சேர்த்த பூரான் - பதோனி பார்ட்னர்ஷிப்

SRH vs LSG Innings Break: துல்லியமாக பவுலிங் செய்த புவனேஷ்வர் குமார்! லக்னோவை கரை சேர்த்த பூரான் - பதோனி பார்ட்னர்ஷிப்

Muthu Vinayagam Kosalairaman HT Tamil
May 08, 2024 09:33 PM IST

ஹைதரபாத்தில் பெய்திருந்த மழையால் பிட்ச் ஆரம்பத்தில் பேட்டிங் செய்ய கடினமாக இருந்தது. பூரான் - பதோனி பார்ட்னர்ஷிப்பால் லக்னோ சவாலான இலக்கை சன் ரைசர்ஸ்க்கு நிர்ணயித்துள்ளது. துல்லியமாக பவுலிங் செய்த புவனேஷ்வர் குமார் 2 விக்கெட்டுகளை கைப்பற்றியதுடன், தனது ஓவரில் பவுண்டரி, சிக்ஸர் தரவில்லை

லக்னோவை கரை சேர்த்த பூரான் - பதோனி பார்ட்னர்ஷிப்
லக்னோவை கரை சேர்த்த பூரான் - பதோனி பார்ட்னர்ஷிப் (AP)

ட்ரெண்டிங் செய்திகள்

இதையடுத்து இந்த போட்டியில் சன் ரைசர்ஸ் அணியில் அபிஷேக் ஷர்மா, மயங்க் அகர்வால், மார்கோ ஜான்சன் ஆகியோருக்கு பதிலாக சன்விர் சிங், ஜெயதேவ் உனத்கட், விஜயகாந்த் வியாஸ்காந்த் ஆகியோர் சேர்க்கப்பட்டுள்ளனர். இலங்கையை சேர்ந்த ஸ்பின்னரான விஜயகாந்த் முதல் ஐபிஎல் போட்டியில் களமிறங்கியுள்ளார்.

லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸ் அணியிலும் யுத்வீர் சிங், ஆஷ்டன் டர்னர், மோக்சின் கான் ஆகியோருக்கு பதிலாக கிருஷ்ணப்பா கெளதம், யஷ் தாக்கூர், குவன்டைன் டி காக் ஆகியோர் சேர்க்கப்பட்டுள்ளனர். கிருஷ்ணப்பா கெளதம் இந்த சீசனின் முதல் போட்டியில் விளையாடுகிறார்.

லக்னோ பேட்டிங்

டாஸ் வென்ற லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸ் கேப்டன் கேஎல் ராகுல் பேட்டிங்கை தேர்வு செய்தார். இதைத்தொடர்ந்து முதலில் பேட் செய்த லக்னோ அணி 20 ஓவரில் 4 விக்கெட் இழப்புக்கு 165 ரன்கள் அடித்துள்ளது. பேட்டிங் செய்வதற்கு கடினமாக இருந்த ஆடுகளத்தில் லக்னோ பேட்ஸ்மேன்கள் ரன் குவிக்க தடுமாறினார்கள்.

அதிகபட்சமாக ஆயுஷ் பதோனி 55, நிக்கோலஸ் பூரான் 48, கேஎல் ராகுல் 29 ரன்கள் அடித்தனர். சன் ரைசர்ஸ் பவுலர்களில் புவனேஷ்வர் குமார் 2, பேட் கம்மின்ஸ் ஒரு விக்கெட்டை வீழ்த்தினர்.

டாப் ஆர்டர் சொதப்பல்

இந்த போட்டி தொடங்கும் முன்னர் ஹைதராபாத்தில் நேற்று மழை பெய்ததன் காரணமாக பிட்ச் பேட்ஸ்மேன்களுக்கு சவாலாக இருந்தது. லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸ் டாப் ஆர்டர் பேட்ஸ்மேன்கள், சன் ரைசர்ஸ் பவுலர்களின் துல்லிய பந்து வீச்சுக்கு எதிராக ரன் குவிக்க முடியாமல் திணறினர். குவன்டைன் டி காக் 2, மார்கஸ் ஸ்டொய்னிஸ் 3 ரன் அடித்து அடுத்தடுத்து அவுட்டானர்கள்.

நிதானமாக பேட் செய்த கேஎல் ராகுல் ஒரு நாள் போட்டி போல் ரன்குவிப்பில் ஈடுபட்டார். 33 பந்துகளில் 29 ரன்கள் எடுத்து அவரும் தனது விக்கெட்டை பறிகொடுத்தார்.

லக்னோ பவர் ப்ளே முடிவில் 2 விக்கெட் இழப்புக்கு 27 ரன்கள் அடித்தது. இந்த சீசனில் பவர்ப்ளே ஓவர்களில் அடிக்கப்பட்ட குறைவான ஸ்கோராக இது அமைந்துள்ளது.

பூரான் - பதோனி பார்ட்னர்ஷிப்

நான்காவது பேட்ஸ்மேனாக களமிறங்கி விரைவாக ரன்குவிப்பில் ஈடுபட்ட க்ருணால் பாண்ட்யா 24 ரன்கள் அடித்த நிலையில் துர்தஷ்டவசமாக ரன் அவுட்டானார். அப்போது அணியின் ஸ்கோர் 66 என இருந்தது.

இதன் பின்னர் மிடில் ஆர்டரில் களமிறங்கிய நிக்கோலஸ் பூரான் - ஆயுஷ் பதோனி ஜோடி பார்ட்னர்ஷிப் அமைத்து ரன் குவிப்பில் ஈடுபட்டனர். இதனால் அணியின் ஸ்கோரும், ரன் ரேட்டும் உயர்ந்தது.

கடைசி வரை இவர்கள் இருவரும் அவுட்டாகாத நிலையில், 99 ரன்கள் சேர்த்தனர். சிறப்பாக பேட் செய்த பதோனி அரைசதமடித்து 30 பந்துகளில் 55 ரன்கள் எடுத்தார். நிக்கோலஸ் பூரான் 26 பந்துகளில் 48 ரன்கள் அடித்துள்ளார். இருவரும் நாட் அவுட் பேட்ஸ்மேன்களாக உள்ளார்கள்.

புவனேஷ்வர் கலக்கல்

ஆரம்பத்தில் இருந்து கலக்கலாக பவுலிங் செய்த புவனேஷ்வர் குமார், லக்னோ பேட்ஸ்மேன்களை நன்கு கட்டுப்படுத்தினார். 4 ஓவர்களில் 12 ரன்கள் மட்டும் விட்டுக்கொடுத்து 2 விக்கெட்டுகளை கைப்பற்றினார். 12 டாட் பந்துகளை வீசிய புவனேஷ்வர் குமாரின் ஓவரில் ஒரு பவுண்டரியும், சிக்ஸரும் அடிக்கப்படவில்லை.

சன் ரைசர்ஸ் ஸ்டிரைக் பவுலராக இருந்த யார்க்கர் மன்னன் நடராஜன் ஓவரை, லக்னோ பேட்ஸ்மேன்கள் அடித்து நொறுக்கினர். 4 ஓவரில் அவர் விக்கெட் எதுவும் எடுக்காமல் 50 ரன்கள் வாரி வழங்கினார்.

சமூக வலைத்தளங்களில் எங்களை பின் தொடலாம். லிங்க்குகள் கீழே கொடுக்கப்பட்டு உள்ளன:

ஹிந்துஸ்தான் தமிழ் வாட்ஸ் அப் குடும்பத்தில் இணைய கீழே உள்ள லிங்கை கிளிக் செய்யுங்கள்.

IPL_Entry_Point