தமிழ் செய்திகள்  /  Astrology  /  Zodiac Signs Or Rasis That Are Unlucky Due To Physical Yoga In Pisces

Unlucky Rasis: மீன ராசியில் உண்டாகும் ஜடயோகம்.. துரதிர்ஷ்டம்பெறும் ராசிகள்!

Marimuthu M HT Tamil
Mar 04, 2024 12:58 PM IST

மீன ராசியில் உண்டாகும் ஜட யோகத்தால் துரதிர்ஷ்டம்பெறும் ராசிகள் குறித்துக் காண்போம்.

மீன ராசியில் உண்டாகும் ஜட யோகத்தால் துரதிர்ஷ்டம்பெறும் ராசிகள்
மீன ராசியில் உண்டாகும் ஜட யோகத்தால் துரதிர்ஷ்டம்பெறும் ராசிகள்

ட்ரெண்டிங் செய்திகள்

கும்ப ராசியில் சஞ்சரித்து வரும் சூரிய பகவான், வரும் மார்ச் 15ஆம் தேதி மீன ராசிக்குப் பெயர்கிறார். ஆனால், அதற்கு முன், புதன் மீனராசிக்குப் பெயர்ந்து ஜடயோகம் என்னும் துரதிர்ஷ்டத்தை உண்டு செய்கிறார். மீன ராசியில் புதன் - ராகுவின் சேர்க்கையால் மிகுந்த கவனமுடன் இருக்கவேண்டிய ராசிகள் குறித்துக் காண்போம்.

மேஷம்: இந்த ராசியினருக்கு 12ஆம் இல்லமான விரய ஸ்தானத்தில் ராகு மற்றும் புதன் சேர்க்கை நிகழ்கிறது. இந்த காலத்தில் குடும்பத்தில் சண்டை சச்சரவுகள் உண்டாகும். உங்களிடம் பணத்தைப் பெற்றவர்கள் தருவதில் காலதாமதம் ஏற்படும்.

துலாம்: இந்த ராசியினருக்கு 6ஆம் இல்லமான எதிரி ஸ்தானத்தில் ராகு மற்றும் புதனின் இணைவு நடைபெறுகிறது. ஆகையால், துலாம் ராசியினர் பல கஷ்டங்களைச் சந்திப்பார்கள். தொழிலில் வாடிக்கையாளரிடம் தேவையற்ற வாக்குவாதங்கள் உண்டாகும். விரயச்செலவுகள் அதிகரித்து சேமிப்பு வெகுவாகக் கரையும். உடல்நலம் குன்றும்.

விருச்சிகம்: இந்த ராசியினருக்கு பூர்வ புண்ணிய பகுதியில் ஜட யோகம் என்னும் கெடு யோகம் உண்டாகிறது. இக்காலத்தில் குடும்ப வாழ்விலும் பணிச்சூழலிலும் தேவையற்ற பதற்றத்தைச் சந்திப்பீர்கள். வார்த்தைகளில் கவனமாக இல்லாவிட்டால் கணவன் - மனைவி இடையே பிரிவு உண்டாக வாய்ப்புள்ளது. எச்சரிக்கைதேவை. தண்டச்செலவுகள் ஏற்படும்.

பொறுப்புத் துறப்பு:

இந்தக் கட்டுரையில் உள்ள எந்தவொரு தகவல்/பொருள்/கணக்கீட்டின் துல்லியம் அல்லது நம்பகத்தன்மைக்கு எந்த விதமான உத்தரவாதமும் இல்லை. இதில் குறிப்பிடப்பட்டுள்ள தகவல்கள் அனைத்தும் பல்வேறு ஊடகங்கள் / ஜோதிடர்கள் / பஞ்சாங்கங்கள் / சொற்பொழிவுகள் / நம்பிக்கைகள் / வேதங்களில் இருந்து சேகரித்து உங்களுக்குத் தெரிவிக்கப்பட்டுள்ளது. எங்கள் நோக்கம் தகவல்களை வழங்குவது மட்டுமே. இதிலிருந்து வெறும் தகவல்களை மட்டுமே பயனாளர்கள் எடுத்துக்கொள்ள வேண்டும். மற்றபடி இதிலிருந்து பயன்படுத்திக்கொள்வது பயனாளரின் பொறுப்பாகும்.

சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடரலாம். லிங்க்குகள் கீழே கொடுக்கப்பட்டுள்ளன:

Google News: https://bit.ly/3onGqm9 

WhatsApp channel

டாபிக்ஸ்