Gold Luck Rasis: அட்சய திருதியையின்போது எந்நேரத்தில் தங்கம் வாங்குவது?: எந்த ராசியினர் வாங்கினால் மிக அதிர்ஷ்டம் பெறலாம்
Gold Luck Rasis: Akshaya Tritiya 2024: அட்சய திருதியை அன்று தங்கம் வாங்கும் பழக்கம் பெரும்பாலானவர்களுக்கு உள்ளது. இருப்பினும், எந்த நேரத்தில் தங்கம் வாங்குவது என்பது குறித்து பலருக்கும் கேள்விகள் உள்ளன. அதேபோல் அந்நாளில் அதிக அதிர்ஷ்டம் பெறும் ராசிகள் குறித்தும் காண்போம்.
Gold Luck Rasis: Akshaya Tritiya 2024: அட்சய திருதியை அன்று ஏதாவது வாங்கினால் இரட்டிப்பாகும் என்பது ஐதீகம். இதன் விளைவாக, இந்த நாளில், மக்கள் தங்கம் போன்ற பொருட்களை வாங்குகிறார்கள்; பல நல்ல செயல்களைச் செய்கிறார்கள். இந்த நேரம் தங்கம் வாங்க மட்டுமல்ல, நிலம், வீடு மற்றும் கார் வாங்கவும் நல்ல நேரம் என கருதப்படுகிறது.
இது போன்ற போட்டோக்கள்
Mar 28, 2025 07:00 AMBad Luck Rasis: கவனமாக இருக்க வேண்டிய ராசிகள்.. அஸ்தமனத்தில் சிக்கிய ராசி.. சனி உச்சம்!
Mar 28, 2025 06:35 AMஇரட்டை ராஜ யோகம்.. மீன ராசியில் சூரியன்.. அதிர்ஷ்ட மழையில் நனைய போகும் மூன்று ராசிகள்.. நல்ல லாபம் கிட்டும்!
Mar 28, 2025 05:00 AMஇன்றைய ராசிபலன் : சவால்களை தைரியமா எதிர் கொள்ளுங்கள்.. வெற்றி தேடி வரும்.. இன்று உங்கள் நாள் எப்படி இருக்கும் பாருங்க!
Mar 27, 2025 05:16 PMGuru: 2025-ல் பணத்தை அள்ளிக் கொடுக்க வருகிறார் குரு.. இந்த ராசிகள் வாழ்க்கையில் மகிழ்ச்சி பொங்க போகுதா?
Mar 27, 2025 05:09 PMகிரகண யோகம்: 2027 வரை சனி விடமாட்டார்.. இந்த ஆண்டு முதல் யோகம் பெறுகின்ற ராசிகள்.. யார் அந்த ராசி?
Mar 27, 2025 12:03 PMLove Horoscope : உங்கள் துணை இன்று அதிக பதட்டமாக உணரலாம்.. 12 ராசிக்கும் இன்று காதல் வாழ்க்கை எப்படி இருக்கு? இதோ
அட்சய திருதியை மே 10ஆம் தேதி அதிகாலை 4.17 மணிக்கு வந்து, மறுநாள் அதிகாலை 2.50 மணி வரை தொடர்கிறது.
அட்சய திருதியையன்று சுப முகூர்த்தம்:
இந்த நாளில் சுப முகூர்த்தம் காலை 5:33 முதல் 7:14 வரை இருக்கும். அமிர்த முகூர்த்தம் காலை 8:56 முதல் 10:37 வரை. மதியம் 12.18 மணி முதல் 1.59 மணி வரை சுபமுகூர்த்த நேரங்கள் உள்ளன. அதேபோல், மாலை 5.21 மணி முதல் இரவு 7.02 மணி வரை சுப முகூர்த்தங்கள் உள்ளன. இந்த நேரங்களில் தங்கம் வாங்கலாம்.
வேத ஜோதிடத்தின்படி, புதன் கிரகம் கிரகங்களின் ராஜாவாக கருதப்படுகிறது. இந்த கிரகத்தால் ஆசீர்வதிக்கப்பட்டவர்கள், அவர்கள் நல்ல முறையில் வாழ்கின்றனர். இப்போது இந்த புதன் கிரகம் ஒரு மாதத்திற்குப் பிறகு, மற்றொரு ராசியில் நுழைகிறது. இதன் விளைவாக, அட்சய திருதியை 2024 பல ராசிகளுக்கு மங்களகரமானது, அது எந்த ராசிகளுக்கு நற்பலன்களைத் தருகிறது என்று பார்ப்போம்.
புதனின் பெயர்ச்சி காரணமாக, பல ராசிக்காரர்கள் மே 10 முதல் லாபத்தின் முகத்தைக் காணத் தொடங்குவார்கள். அன்றைய தினம் அட்சய திருதியையாக கொண்டாடப்படுகிறது. அத்தகைய நாளில் எது வருகிறதோ அது 'அழிவற்றது' என்று கூறப்படுகிறது. மே 10ஆம் தேதி, அட்சய திருதியை நாளில் அதிர்ஷ்டம் பெறும் ராசிகள் குறித்துப் பார்ப்போம்.
அட்சய திருதியை நாளில் அதிர்ஷ்டம் பெறும் ராசிகள்:
தனுசு:
இந்த பெயர்ச்சி உங்கள் ராசியில் ஐந்தாவது வீட்டில் இருக்கும். இந்த நேரத்தில் குழந்தைகள் தொடர்பான சில நல்ல செய்திகளை நீங்கள் பெறலாம். ஏராளமான செல்வத்தை இக்காலத்தில் சம்பாதிப்பீர்கள். இந்த காலகட்டத்திலிருந்து வருமானம் அதிகரிக்கும். உங்களின் தன்னம்பிக்கை பெருகும். நீங்கள் ஒருவரை காதலித்து இருந்தால், இப்போது அது வெற்றிகரமாக இருக்கும். எனவே, தனுசு ராசியினர், அட்சய திருதியை நாளில் தங்கம் வாங்கினால் மிக அதிர்ஷ்டம் கிடைக்கும்.
மகரம்:
உங்கள் ராசியின் நான்காவது வீட்டில் புதன் சஞ்சரிக்கிறது. இந்த நேரத்தில் உங்கள் அதிர்ஷ்டம் எல்லா பக்கங்களிலிருந்தும் உங்கள் பக்கத்தில் இருக்கும். இந்த நேரத்தில் நீங்கள் ஒரு கார் அல்லது சொத்தினை வாங்கலாம். தொழிலில் அபரிமிதமான லாபம் கிடைக்கும். தொழில் ரீதியாக உங்களுக்கு பெரிய வாய்ப்புகள் வரத்தொடங்கும். குடும்பத்தில் நிம்மதி நிலவும். எனவே, மகர ராசியினர், அட்சய திருதியை நாளில் தங்கம் வாங்கினால் மிக அதிர்ஷ்டம் கிடைக்கும்.
கடகம்:
இந்த பெயர்ச்சி உங்கள் ராசியில் தொழில் அல்லது வியாபாரத்தின் அடிப்படையில் மிகவும் மங்களகரமானது. இந்த நேரத்தில் உங்கள் பெயர் மற்றும் வணிகம் இரண்டும் மரியாதைக்குரிய இடத்தில் இருக்கும். உங்கள் வாழ்க்கையில் நிறைய முன்னேற்றத்தைக் காணலாம். வியாபாரத்தில் அபரிமிதமான லாபம் கிடைக்கும். ஒரு பெரிய வணிக ஒப்பந்தத்தைப் பெறலாம். இதன் விளைவாக, நீங்கள் எதிர்காலத்தில் பெரும் பொருளை ஈட்டுவீர்கள். ஆகையால், இத்தகைய லாபம் தரக்கூடிய அட்சய திருதியை நாளில் கடக ராசியினர், தங்கம் வாங்கினால் அது மிக அதிர்ஷ்டமாக மாறும்.
பொறுப்புத் துறப்பு: இந்தக் கட்டுரையில் உள்ள எந்தவொரு தகவல்/பொருள்/கணக்கீட்டின் துல்லியம் அல்லது நம்பகத்தன்மைக்கு எந்த விதமான உத்தரவாதமும் இல்லை. இதில் குறிப்பிடப்பட்டுள்ள தகவல்கள் அனைத்தும் பல்வேறு ஊடகங்கள்/ ஜோதிடர்கள்/ பஞ்சாங்கங்கள்/ சொற்பொழிவுகள்/ நம்பிக்கைகள்/ வேதங்களில் இருந்து சேகரித்து உங்களுக்குத் தெரிவிக்கப்பட்டுள்ளது. எங்கள் நோக்கம் தகவல்களை வழங்குவது மட்டுமே. இதிலிருந்து வெறும் தகவல்களை மட்டுமே பயனாளர்கள் எடுத்துக்கொள்ள வேண்டும். மற்றபடி இதிலிருந்து பயன்படுத்திக்கொள்வது பயனாளரின் பொறுப்பாகும்.

டாபிக்ஸ்