Akshaya Tritiya 2024: அட்சய திருதியை நாளில் இதை செய்தால் நீங்கள் காலி! இந்த நாளில் செய்யக்கூடியவை! செய்யக்கூடாதவை!-dos and donts on the day of akshay trithi - HT Tamil ,ஜோதிடம் செய்திகள்
தமிழ் செய்திகள்  /  ஜோதிடம்  /  Akshaya Tritiya 2024: அட்சய திருதியை நாளில் இதை செய்தால் நீங்கள் காலி! இந்த நாளில் செய்யக்கூடியவை! செய்யக்கூடாதவை!

Akshaya Tritiya 2024: அட்சய திருதியை நாளில் இதை செய்தால் நீங்கள் காலி! இந்த நாளில் செய்யக்கூடியவை! செய்யக்கூடாதவை!

Kathiravan V HT Tamil
May 11, 2024 04:07 PM IST

”சித்திரை மாதத்தில் சூரியன் மேஷம் ராசியில் உச்சம் பெறுகிறார். சூரியன் என்பவர் ஆத்மகாரகர், தந்தைகாரகன், பிதூர்காரகன் ஆவார். சூரியன் உச்சம் பெறும் இந்த நாளில் மனோகாரகன் ஆன சந்திரன் ஆனவர் அட்சய திருதியை திதியில் பிரவேசம் பெறுகிறார்”

அட்சய திருதியை நாளில் செய்யக் கூடியவை! செய்யக் கூடாதவை!
அட்சய திருதியை நாளில் செய்யக் கூடியவை! செய்யக் கூடாதவை!

இந்த ஆண்டு வரும் மே மாதம் 10ஆம் தேதி வெள்ளிக்கிழமை என்று அட்சய திருதியை வருகிறது. 

சித்திரை மாதத்தில் சூரியன் மேஷம் ராசியில் உச்சம் பெறுகிறார். சூரியன் என்பவர் ஆத்மகாரகர், தந்தைகாரகன், பிதூர்காரகன் ஆவார். சூரியன் உச்சம் பெறும் இந்த நாளில் மனோகாரகன் ஆன சந்திரன் ஆனவர் திருதியை திதியில் பிரவேசம் பெறுகிறார். 

சூரியன் நின்ற டிகிரியில் இருந்து சந்திரன் நின்ற டிகிரி ரிஷபம் ராசியில் இருப்பார், அப்போது ரிஷபத்தில் சந்திரன் உச்சம் பெறுகிறார். ஒரே நாளில் சூரியனும், சந்திரனும் உச்சம் பெறும் போது இந்த நாளில் செய்யும் செயல்கள் ஆத்ம திருப்தியையும், மனோ திருப்தியையும் தரும் என்பது நம்பிக்கை. 

குறிப்பாக இந்த ஆண்டில் சந்திரன் உடன் ரிஷபத்தில் குருவும் இணைந்து உள்ளார். அதாவது அன்னை கிரகமான சூரியன், தந்தை கிரகமான சந்திரன், குரு பகவானும் அடுத்தடுத்த வீடுகளில் இணைந்து உள்ளனர்.  

அட்சய திருதியை என்றால் வளர்ந்து வருதல் என்று பொருள் ஆகும். இந்த நாளில் செய்யக்கூடிய காரிங்கள் வாழும் வளரும் என்பது பொருளாகும். 

ஆதி சங்கரர் ஏழைக்காக கனகதாரா மந்திரத்தை சொல்லி செல்வத்தை வர வழைத்த நாளாகவும் இது விளங்குகிறது. அப்போது கூரையை பீய்த்துக் கொண்டு தங்கம் ஏழைவீட்டில் கொட்டியதாக ஐதீகம் உண்டு. 

பிச்சாண்டவர் வடிவில் இருந்த சிவபெருமான் மீது இருந்த பிரம்ம ராட்சன் பிடியை நீக்கிய நாளாகவும், அட்சய திருதியை உள்ளது. இந்த நாளில்தான் அன்ன லட்சுமி பிச்சாண்டவருக்கு, அன்னம் பாலித்த நாளாக உள்ளது. 

பாண்டவர்கள் வனவாசத்தில் இருந்த நேரத்தில் அட்சய பாத்திரம் கிடைத்த நாளாகவும் அட்சய திருதியை இருந்து உள்ளது. 

செய்யக்கூடாதவை

  • அட்சய திருதியை நாளில் கடன் வாங்ககூடாது. 
  • யார் ஒருவரையும் திட்டக்கூடாது. 
  • தங்கம் வாங்கவோ அல்லது வெள்ளி வாங்கவோ கிரடிட் கார்ட்டை பயன்படுத்த கூடாது. 

செய்யக்கூடியவை

  • கையில் பணம் இருந்தாலோ அல்லது டெபிட் கார்டு மூலமாகவோ தங்கம், வெள்ளி, வைரம் போன்ற ஆபரணங்களை வாங்கலாம். 
  • மகா லட்சுமியின் அம்சமாக உள்ள உப்பை வாங்குவது வீட்டில் உள்ள திருஷ்டி தோஷத்தை நீக்கும். 
  • அரிசி, பருப்பு, சர்க்கரை போன்ற உணவு பொருட்களை வாங்கலாம். 
  • சர்க்கரை பொங்கல், தண்ணீரை சுவாமிக்கு நெய்வைத்தியாக படைக்கலாம். 
  • இந்த நாளில் அன்னதானம் செய்வது உங்கள் வீட்டில் தானிய பிரச்னைகள் நீங்கும். 
  • தொழில் சார்ந்த புதிய முயற்சிகளை தொடங்கலாம். 

பொறுப்புத் துறப்பு

இந்தக் கட்டுரையில் உள்ள எந்தவொரு தகவல்/பொருள் / கணக்கீட்டின் துல்லியம் அல்லது நம்பகத்தன்மைக்கு எந்த விதமான உத்தரவாதமும் இல்லை. இதில் குறிப்பிடப்பட்டுள்ள தகவல்கள் அனைத்தும் பல்வேறு ஊடகங்கள்/ ஜோதிடர்கள்/ பஞ்சாங்கங்கள்/ சொற் பொழிவுகள்/ நம்பிக்கைகள்/ வேதங்களில் இருந்து சேகரித்து உங்களுக்குத் தெரிவிக்கப்பட்டுள்ளது. எங்கள் நோக்கம் தகவல்களை வழங்குவது மட்டுமே. இதில் இருந்து வெறும் தகவல்களை மட்டுமே பயனாளர்கள் எடுத்து கொள்ள வேண்டும். மற்றபடி இதில் இருந்து பயன்படுத்தி கொள்வது பயனாளரின் பொறுப்பாகும்.

Whats_app_banner